மரணித்தவர்களிடம் மன்னிப்பு வேண்டுதலா???
(.......கட்டுரை கொஞ்சம் பெரியது தான், முழுவதுமாக படியுங்கள்......)
நபிமார்கள் தங்களின் மண்ணறைகளில் உயிருடன் இருக்கிறார்கள் என்று ஆயிரம் முறை ஆதாரங்களை கூறினாலும் ஏற்காதவர்கள்!!!!
நபிமார்கள் மற்றும் இறை நேசர்களுக்கு அற்புதங்கள் இருக்கிறது என்று ஆயிரம் ஆதாரங்களை சொன்னாலும் ஏற்காதவர்கள்!!!!!
நபிமார்கள் மற்றும் இறை நேசர்கள் மரணித்ததற்குப் பின்னாலும் அவர்களின் அற்புதங்கள் தொடரும் என்று ஆயிரம் முறை சொன்னாலும் ஏற்காதவர்கள்!!!
மரணத்திற்குப் பின்னாலும் நபிமார்கள் தொழுகிறார்கள், வணங்குகிறார்கள், மக்களுக்காக துஆ செய்கிறார்கள், இஸ்திஃபார் தேடுகிறார்கள் என்று ஆயிரம் முறை ஆதாரம் எடுத்து போட்டாலும் நம்பாதவர்கள்!!!
மரணத்திற்குப் பின்னால் ஆத்மாக்களின் உதவி இருக்கிறது... ஒன்றல்ல இரண்டல்ல 10 தடவை பெருமானாருக்கு மிஃராஜ் இரவில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலமாக தொழுகை குறைப்பு ஏற்பட்டுள்ளது...
தொழுகை என்பது நமக்கு 50 ஆக இருந்ததை 5 ஆக குறைக்கப்பட்டதே ஒரு ஆத்மாவினுடைய உதவியின் காரணமாகத்தான் என்று ஆயிரம் முறை சொன்னாலும் ஏற்காதவர்கள்!!!!
பிணமென்று கண்ணியக் குறைவாக கூறக்கூடாது...
அவ்வாறு ஷுஹதாக்களை கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது...
அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவர்களை மய்யித் (பிணம்) என்று சொல்வதை குர்ஆன் தடை செய்திருக்கிறது என்பதை ஆயிரம் முறை சொன்னாலும் ஏற்காதவர்கள்!!!!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கபுர்களை இடித்து விடுங்கள் என்று சொன்னது இறைநிராகரிப்பாளர்களின் கபுர்களைத் தான் என்று ஸலஃப் ஸாலிஹீன்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள் என்றும்
ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டில்தான் 2 கலீபாக்களும் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் எனவே நல்லடியார்களுக்கு தனி இடத்தை தேர்ந்தெடுப்பது ஒட்டுமொத்த சஹாபாக்களின் இஜ்மா மேலும் அது தவறு இல்லை என்று ஆயிரம் முறை கூறினாலும் ஏற்றுக் கொள்ளாதவர்கள்!!!!
தர்காக்களில் நடக்கும் அனாச்சாரங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் இல்லை, அவற்றில் சில மாற்று மதத்தவர்கள் ஏற்படுத்தியவை.
அதே நேரத்தில் தர்காக்களுக்கு பிரயாணம் செய்வதன் நோக்கம் அங்கிருக்கும் பரக்கத்தை அடிப்படையாக கொண்டுதான் என்று ஆயிரம் முறை ஆதாரம் வைத்தாலும் ஏற்றுக் கொள்ளாதவர்கள்!!!!
இந்த கட்டுரையை படித்து முடித்துவிட்டு தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்.....
ஸலஃப் ஸாலிஹீன்கள் எந்த வழியில் இருந்தார்கள்????
அவர்களின் பெயரைச் சொல்லி வியாபாரம் செய்யும் சவுதி ஹவாரிஜ் கூட்டம் எந்த வழியில் இருக்கிறார்கள் என்று தெரியும்!!!!
مناظرة بين الإمام مالك وأمير المؤمنين أبو جعفر المنصور :
இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கும் மூமின்களின் தலைவரான ஜஃபர் அல் மன்சூர் ஆகிய இருவருக்கும் மத்தியில் நடந்த ஒரு உரையாடல்:
أخرج أبو بكر بن محمد احمد ابو الفرج عن ابن حميد ، كما أخرج القاضي عياض في ( الشفا ) :
அஷ் ஷிஃபா என்ற நூலில் முஹத்திஸ் அல் காழீ இயால் ரஹிமஹுமுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
قال : ناظر أبو جعفر ( المنصور ) أميرُ المؤمنين مالكًا في مسجد رسول الله صلى الله عليه وسلم .
அபூ ஜஃபர் அல் மன்சூர் எனும் மூமின்களின் தலைவர் இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளிவாசலில் வைத்து சப்தமாக விவாதம் செய்தார்.
قال له الإمام مالك : يا أمير المؤمنين لا ترفع صوتك في هذا المسجد ،
இமாம் மாலிக் கூறினார்கள்:
மூமின்களின் தலைவரே உங்களின் சப்தத்தை இந்தப் பள்ளிவாசலில் உயர்த்த வேண்டாம்.
فإن الله أدّب قوما
நிச்சயமாக அல்லாஹ் (மஸ்ஜிதுன் நபவியில் சப்தமாக பேசும்)
ஒரு கூட்டத்தாருக்கு ஒழுக்கம் கற்பிக்கிறான்:
فقال : " لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون " ...،
முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.
(அல்குர்ஆன் : 49:2)
ومدح قوما
( மேலும் நபியின் கண்ணியம் பேணி நடந்த) ஒரு கூட்டத்தை அல்லாஹ் புகழ்கிறான்..
فقال : " إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى ، لهم مغفرة وأجر عظيم " ...
நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் - அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு.
(அல்குர்ஆன் : 49:3)
وذم قوما
மேலும் மற்றொரு கூட்டத்தை சாடுகிறான்
فقال : " إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون " ،
(நபியே!) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே!
(அல்குர்ஆன் : 49:4)
وإن حرمته ميتا كحرمته حيا ،
(மேலும் இமாம் மாலிக் தொடர்ந்து கூறுகிறார்கள்)
நாயகம் அவர்களுக்கு மரணித்த பின்னால் கொடுக்க வேண்டிய கண்ணியம் என்பது அவர்கள் (நம்முடன்) வாழும் போது கொடுத்த கண்ணியத்தை போன்றதே...
فاستكان لها أبوجعفر وقال
அங்கேயே அபூ ஜஃபர் தலை குனிந்து விட்டார் பிறகு கேட்டார்....
: يا أبا عبدالله أأستقبل القبلة وأدعو ،
அப்துல்லாவின் தந்தையே நான் கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்யவா???
أم أستقبل رسول الله صلى الله عليه وسلم ؟
அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னோக்கவா???
فقال مالك : ولمَ تصرف وجهك عنه
இமாம் மாலிக் கூறினார்கள்: அன்னாரை விட்டு உன் முகத்தை ஏன் நீர் திருப்புகிறீர்???
وهو وسيلتك
அவர்கள் தான் உன்னுடைய வசீலா (அதாவது அல்லாஹ்வை நெருங்குவதற்கு காரணமானவர்கள்)
ووسيلة أبيك آدم عليه السلام إلى الله تعالى يوم القيامة ؟
மேலும் உன் தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வசீலாவும் மறுமை நாளில் அவர்கள் தான் அல்லவா?
، بل استقبله واستشفع به فيشفعّه الله .
எனவே நீர் அவர்களையே முன்னோக்கு அவர்களைக் கொண்டு ஷஃபாஅத் தேடும். அல்லாஹ் அவர்களின் ஷபாஅதை ஏற்றுக்கொள்வான்.
பிறகு இந்த வசனத்தை இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஓதிக்காட்டினார்கள்:
قال الله تعالى : " ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما " .
அல்லாஹ் தஆலா கூறுகிறான்
ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து விட்டு உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் அவர்கள் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக தூதராகிய (நீங்களும்) மன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 4:64)
அஷ் ஷிஃபா
பக்கம் 595,596...
இந்த ஸனது தொடர் சரியானது என பல உலமாக்கள் கூறியுள்ளார்கள் குறிப்பாக தகிய்யுத்தீனுஸ் ஸுபுகீ ரஹிமஹுமுல்லாஹ் ...
இபுனு தைமிய்யாவைத் தவிர....
அதாவது தன்னுடைய பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் அல்லாஹ்விடத்தில் நபிக்கு முன்னால் வந்து பாவமன்னிப்பு தேடவேண்டும்.
பிறகு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தனக்காக பாவமன்னிப்பு வேண்டி துவா செய்யுங்கள் என்றும் சொல்ல வேண்டும்...
இவ்வாறு கேட்கும் முறைக்கு வஸீலா, ஷஃபாஅத், இஸ்திஹ்ஃபாருர் ரஸூல், தபர்ருக்,தவஜ்ஜுஹ், தவஸ்ஸுல், இஸ்திஹாஸா என்று சொல்லப்படும்...
இந்த சம்பவத்திலிருந்து பலவிதமான படிப்பினைகள் நமக்கு கிடைக்கின்றன...
முதலில் இந்த சம்பவத்தை பதிவு செய்திருப்பவர் அல் காழீ இயால் ரஹிமஹுமுல்லாஹ்...
இவர்கள் மிகப்பெரிய ஹதீஸ் கலை வல்லுனர்...
அனைத்து இமாம்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீஸ் துறைக்கு மிகப்பெரிய சேவை செய்த இமாம்...
இதே போன்ற சம்பவத்தை இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கிதாபுல் மஜ்மூஃயில் பதிவு செய்துள்ளார்கள்...
இதே விஷயத்தை பிலால் இப்னு ஹாரிஸ் என்ற ஸஹாபி ஒருவர் செய்தார் என்ற சம்பவத்தை ஹாபிழ் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களுடைய ஃபத்ஹுல் பாரியில் பதிவு செய்துள்ளார்கள்...
இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் மிகப்பெரிய முஹத்திஸ்...
எனவே ஹதீஸ் கலை அறிஞர்கள் இந்த சம்பவத்தை தங்களின் மார்க்க ஆதாரமாகவும், கூடுதல் விளக்கத்தைக் கூறி அதை தங்கள் கொள்கையாகவும் நிரூபித்துள்ளார்கள்...
எனவே ஸலஃப் ஸாலிஹீன்கள் தங்கள் கொள்கையில் சரியாகத் தான் இருக்கிறார்கள்...
இவர்கள் எங்கே இவைகள் அனைத்தையும் இணைவைப்பு, ஷிர்க், குப்று என்று சொன்னார்கள்???
இப்னு அப்துல் வஹ்ஹாபுக்கு இந்த விஷயங்கள் பிடிக்கவில்லை என்றால் அது மார்க்கம் இல்லை என்று யார் சொன்னது???
இரண்டாவது விஷயம்
வசீலா என்ற விஷயம் நல் அமல்களை மட்டும்தான் குறிக்கும் அது நல்லடியார்களை குறிக்காது என்ற வாதம் இங்கு அடிபடுகிறது...
இமாம் மாலிக் அவர்கள் இந்த இடத்தில் உன்னுடைய வசீலாவும் உன் தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வசீலாவும் அவர்கள்தான் என்று கூறுகிறார்கள்...
அதாவது குர்ஆன் நீங்கள் அல்லாஹ்விடம் வஸீலாவை தேடுங்கள் என்று கூறுகிறது...
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَيْهِ الْوَسِيْلَةَ وَجَاهِدُوْا فِىْ سَبِيْلِهٖ لَعَلَّـكُمْ تُفْلِحُوْنَ
முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன்பால் நெருங்குவதற்குரிய வஸீலாவை தேடிக் கொள்ளுங்கள்; அவனுடைய பாதையில் போர்புரியுங்கள்; அப்பொழுது நீங்கள் வெற்றி பெறலாம்.
(அல்குர்ஆன் : 5:35)
இந்த இடத்தில் வசீலா என்பது என்ன???
வஸீலா என்பதற்கு அல்லாஹ்வை நெருங்க செய்யக் கூடிய விஷயம் என்று பொருள்...
அல்லாஹ்வை அடைய செய்யக் கூடிய அனைத்து காரியங்களும் மனிதனுக்கு வசீலா தான்...
அந்த வசீலாக்களில் மிக உயர்ந்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான்...
ஹஸரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் போன்ற விரிவுரையாளர்கள் அது நல்ல அமல்கள் என்று கூறுகிறார்கள்...
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் போன்ற சஹாபாக்கள் அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் நல்லடியார்களையும் குறிக்கும் என்று கூறுகிறார்கள்.
عن أنس بن مالك:] أنَّ عُمَرَ بنَ الخَطّابِ، كانَ إذا قَحَطُوا اسْتَسْقى بالعَبّاسِ بنِ عبدِ المُطَّلِبِ فَقالَ: اللَّهُمَّ إنّا كُنّا نَتَوَسَّلُ إلَيْكَ بنَبِيِّنا ﷺ فَتَسْقِينا، وإنّا نَتَوَسَّلُ إلَيْكَ بعَمِّ نَبِيِّنا فاسْقِنا قالَ: فيُسْقَوْنَ.
البخاري (٢٥٦ هـ)، صحيح البخاري ٣٧١٠ • [صحيح] • شرح رواية أخرى
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்கள் பஞ்சத்தால் கஷ்டப்பட்டால் அப்பாஸ் ரழியல்லாஹு அவர்களை வசீலாவாக வைத்து துஆ செய்வார்கள்.
அவர்கள் கூறுவார்கள்:
யா அல்லாஹ் நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வஸீலாவாக வைத்து உன்னிடம் கேட்டு இருக்கிறோம் நீ எங்களுக்கு மழை புகட்டினாய். இப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சிறிய தந்தையை வஸீலாவாக ஆக்குகிறோம்.
எங்களுக்கு மழை பொழிவாயாக என்று கேட்டார்கள், அப்பொழுது மழை பெய்தது.
புஹாரி 3710
எனவே மாயிதா 5:35 சூராவில் சொல்லப்பட்ட அந்த வசீலா என்ன என்பதற்கு இந்த புகாரி ஹதீஸ் விளக்கம் அளிக்கிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் அவர்கள் காலத்தில் வசீலா.
இரண்டாவது: வயதில் முதிர்ந்த நல்ல ஸாலிஹான அடியார்களை வஸீலா ஆக்கியிருக்கிறார்கள்...
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும் காலத்தில் அவர்களை வசீலாவாக அல்லாஹ்விடம் மழை பெற்றுள்ளார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன...
عن أنس بن مالك:] أنَّ رَجُلًا، دَخَلَ المَسْجِدَ يَومَ جُمُعَةٍ مِن بابٍ كانَ نَحْوَ دارِ القَضاءِ، ورَسولُ اللَّهِ ﷺ قائِمٌ يَخْطُبُ، فاسْتَقْبَلَ رَسولَ اللَّهِ ﷺ قائِمًا، ثُمَّ قالَ: يا رَسولَ اللَّهِ، هَلَكَتِ الأمْوالُ وانْقَطَعْتِ السُّبُلُ، فادْعُ اللَّهَ يُغِيثُنا، فَرَفَعَ رَسولُ اللَّهِ ﷺ يَدَيْهِ، ثُمَّ قالَ: اللَّهُمَّ أغِثْنا، اللَّهُمَّ أغِثْنا، اللَّهُمَّ أغِثْنا قالَ أنَسٌ: ولا واللَّهِ، ما نَرى في السَّماءِ مِن سَحابٍ، ولا قَزَعَةً وما بيْنَنا وبيْنَ سَلْعٍ مِن بَيْتٍ ولا دارٍ، قالَ: فَطَلَعَتْ مِن ورائِهِ سَحابَةٌ مِثْلُ التُّرْسِ فَلَمّا تَوَسَّطَتِ السَّماءَ انْتَشَرَتْ، ثُمَّ أمْطَرَتْ، فلا واللَّهِ، ما رَأَيْنا الشَّمْسَ سِتًّا، ثُمَّ دَخَلَ رَجُلٌ مِن ذلكَ البابِ في الجُمُعَةِ، ورَسولُ اللَّهِ ﷺ قائِمٌ يَخْطُبُ، فاسْتَقْبَلَهُ قائِمًا، فَقالَ: يا رَسولَ اللَّهِ هَلَكَتِ الأمْوالُوانْقَطَعَتِ السُّبُلُ، فادْعُ اللَّهَ يُمْسِكْها عَنّا، قالَ: فَرَفَعَ رَسولُ اللَّهِ ﷺ يَدَيْهِ، ثُمَّ قالَ: اللَّهُمَّ حَوالَيْنا ولا عَلَيْنا، اللَّهُمَّ على الآكامِ والظِّرابِ، وبُطُونِ الأوْدِيَةِ، ومَنابِتِ الشَّجَرِ قالَ: فأقْلَعَتْ، وخَرَجْنا نَمْشِي في الشَّمْسِ قالَ شَرِيكٌ: سَأَلْتُ أنَسَ بنَ مالِكٍ: أهو الرَّجُلُ الأوَّلُ؟ فَقالَ: ما أدْرِي.
البخاري (٢٥٦ هـ)، صحيح البخاري ١٠١٤ • [صحيح] • أخرجه البخاري (١٠١٤)، ومسلم (٨٩٧) باختلاف يسير • شرح رواية أخرى
புகாரியில் வரக்கூடிய ஹதீஸ்
ஒரு மனிதர் பெருமானாரிடம் வந்து யாரசூலல்லாஹ் !
பொருட்கள் எல்லாம் அழிந்துவிட்டது, பாதைகளெல்லாம் துண்டிக்கப்பட்டுவிட்டது அல்லாஹ்விடம் எங்களுக்கு மழை வேண்டி பிரார்த்தியுங்கள் என்று சொன்னபோது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூன்று முறை மழை வேண்டி துவா செய் தார்கள் உடனே மழை பெய்தது....
ஹதீஸ் சுருக்கம்
புகாரி 1014
முஸ்லிம் 897
பெருமானாரை பயன்படுத்தி வஸீலாவாக்கி மழை பெற்றுள்ளார்கள்...
அதாவது,
தான் எந்த விதமான அமலும் செய்யாமல் நல்லடியார்களை முன்பு வைத்து அவர்களின் மூலமாக அல்லாஹ்விடம் ஒரு காரியத்தை நடக்க வைப்பது...
இதற்குத்தான் வசீலா என்று சொல்லப்படும்...
நாமாக பிரார்த்தனை செய்து அல்லாஹ்வை வணங்கி கேட்கக்கூடிய அமலுக்கு துவா என்று சொல்லப்படும்...
எனவே துஆ மற்றும் வஸீலா ஆகிய இரண்டிற்கும் வித்தியாசம் புரியாமல் வஸீலாவை துஆ செய்தல் என்று குழப்பிக் கொள்கிறார்கள்...
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னிடம் வந்து இது நிறைவேற வேண்டும் என்று கோரிக்கை வைக்க கூடிய விஷயத்தை கண்டிக்கவும் இல்லை...
ஏனப்பா உம்முடைய இறைவனும் என்னுடைய இறைவனும் அவன் தானே!!!
அவன்தான் உன் பிடரி நரம்பை விட நெருக்கத்தில் இருக்கிறானே!!!
அவன் கேட்பவனாகவும், பார்ப்பவனாக இருக்கிறானே!!!
என் அடியார்கள் என்னை அழைத்தால் நான் பதிலளிக்கிறேன் என்று சொல்கிறானே!!!
தன்னிடத்தில் துவா கேட்காதவர்களின் மீது கோபம் கொள்கிறான் என்று சொல்கிறானே!!!
நீங்கள் அல்லாஹ்வை நெருங்கி அவனிடமே எல்லாத் தேவைகளையும் கேட்க வேண்டும் என்பதற்காகத்தானே நான் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்!!!
அதை விட்டுவிட்டு நீங்கள் எந்தவிதமான துஆவும் செய்யாமல் என்னிடம் வந்து துவா செய்யுங்கள் என்று கேட்கிறீர்களே!!!
இது போன்று எந்த விதமான விமர்சனத்தையும் பெருமானார் சொல்லாமல் உடனே அவர்களுக்காக துஆ செய்தார்கள்....
அது மட்டுமல்ல பல்வேறு கட்டங்களில் ஒவ்வொரு சஹாபாக்களுக்கும் பலவிதமான துஆக்கள் செய்துள்ளார்கள்...
உங்களுக்கு எந்த தேவை இருந்தாலும் அல்லாஹ்விடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கற்றுக் கொடுத்ததும் அவர்கள் தான்....
உங்களால் முடியாத விஷயங்களை என்னிடம் வந்து கேட்டுக் கொள்ளுங்கள் என்று அனுமதித்ததும் அவர்கள்தான்...
அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஞாபக சக்தியைக் கொடுத்தது...
ஒரு ஸஹாபிக்கு கண்கள் பழுதடைந்த பொழுது அதை சரி செய்தது...
குர்ஆனுடைய விளக்க ஞானத்திற்கு ஹஜரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு துவா செய்தது...
பெரும் கூட்டத்திற்கே தண்ணீர் புகட்டியது இதுபோன்று ஏராளமான ஏராளமான வஸீலா சம்பவங்கள் ஆதாரமாக இருக்கின்றன...
இவைகள் எந்த ஒன்றும் ஸஹாபாக்களுக்கும், முன்னால் வாழ்ந்த அறிஞர் பெருமக்களுக்கும், பின்னால் வந்த ஹதீஸ் கலை அறிஞர்களுக்கும் இணைவைப்பாக தெரியவில்லை!!!!
மேலும் என்னுடைய பாவத்திற்காக நீங்கள் அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுங்கள் என்று ஒருவர் சொல்வதும் இணைவைப்பு இல்லை...
சஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து எங்களுடைய பாவம் மன்னிக்கப்படுவதற்கு துவா செய்யுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்...
பல சமயங்களில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறருக்காக பாவமன்னிப்பு தேடி இருக்கிறார்கள்...
எனவே என் பாவம் மன்னிக்கப்படுவதற்காக நீங்கள் அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள் என்று கேட்பதும் இணைவைப்பு இல்லை...
நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மகன்கள் அவர்களிடம் வந்து பாவ மன்னிப்புத் தேட சொன்னதாகவும் அவர்கள் இவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடியதாகவும் குர்ஆன் கூறுகிறது..
قَالُوْا يٰۤاَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوْبَنَاۤ اِنَّا كُنَّا خٰـطِــِٕيْنَ
(அதற்கு அவர்கள்) “எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 12:97)
قَالَ سَوْفَ اَسْتَغْفِرُ لَـكُمْ رَبِّىْ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
நான் உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். நிச்சயமாக அவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான் என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 12:98)
இதைத்தான் நாம் வசீலா என்று சொல்கிறோம்...
இந்த வசீலா முறை என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மரணத்திற்கு பின்னால் முடியவில்லை என்பதை இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்...
சஹாபாக்களில் இதை செய்துள்ளார்கள் என்பதை இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் தங்களுடைய கிதாபுகளில் பதிவு செய்துள்ளார்கள்...
قال الحافظ ابن حجر في فتح الباري (2 / 495): روى ابن أبي شيبة بإسناد صحيح من رواية أبي صالح السمان عن مالك الدار - وكان خازن عمر -
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இப்னு அபீஷைபாவில் பதிவு செய்திருக்கும் ஹதீஸை ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி கொண்டு வருகிறார்...
قال: (أصاب الناس قحط في زمن عمر
உமர் ரலியல்லாஹு அவர்களுடைய காலத்திலேயே கடுமையான பஞ்சம் மக்களுக்கு ஏற்பட்டது...
فجاء رجل إلى قبر النبي صلى الله عليه وآله وسلم فقال
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்லாவுக்கு அருகிலே வந்து சொன்னார்
يا رسول الله استسق لأمتك فإنهم قد هلكوا....).،
யாரசூலல்லாஹ்! உங்களுடைய உம்மத்துக்காக மழை வேண்டி பிரார்த்தியுங்கள், நிச்சயமாக அவர்கள் அழிந்து கொண்டு இருக்கிறார்கள்...
அப்போது மழை பெய்தது!!!!!!
ஃபத்ஹுல் பாரி 2/ 495.
ومالك الدار ثقة بالإجماع عدله ووثقه سيدنا عمر وسيدنا عثمان فولياه بيت المال والقسم ولا يوليان إلا ثقة ضابطا عدلا كما نص الحافظ ابن حجر في الإصابة في ترجمته،
இந்த சம்பவத்தை தன் கண்களால் பார்த்து அறிவிக்கக் கூடிய மாலிக்குத் தார் என்பவர் ஒட்டுமொத்த அறிஞர்களின் கருத்துப்படி மிகவும் உறுதியானவர்...
உமர் ரலியல்லாஹு காலத்திலும், உஸ்மான் ரலியல்லாஹ் அவளுடைய காலத்திலும் அவரை பைத்துல்மாலின் பொறுப்புதாரியாக ஆக்கி இருந்தார்கள்...
(இந்த ஹதீஸை அறிவிப்பவர் கூட அவர்தான்)
ونقل ذلك عن إمام المحدثين علي بن المديني،
இந்த உறுதியை அலீ இப்னில் மதீனி எனும் பெரும் முஹத்திஸிடமிருந்து இமாம் இப்னு ஹஜர் அவர்கள் எடுக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல இமாம் மாலிகுத் தார் அவர்கள் சிறுவயது சஹாபி என்ற கூட இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கூறுகிறார்கள்...
இந்த ஹதீஸ் சரியானது என்று இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.
எந்த விமர்சனமும் செய்யவில்லை இதில் ஷிர்க், குஃப்ரு இருப்பதாக சலபு ஸாலிஹீன்களுக்குகளுக்கு ஒன்றுமே தெரியவில்லை
எனவே அவர்கள் கண்டு அறிவிக்கும் இந்த விஷயம் உறுதியாகிறது...
இமாம் புகாரி அவர்கள் இவர்களின் அறிவிப்புகளை தங்களுடைய தாரீஹுல் கபீரில் கொண்டு வருகிறார்கள்...
وساق هذه القصة، وابن سعد في طبقاته (5 / 12)
இமாம் இப்னு ஸஃது ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இந்த ஹதீஸை கொண்டு வருகிறார்கள்.
தபகாது இப்னு சஃது 5/ 12
وقال الإمام النووي أيضا
மேலும் ஸலஃப் ஸாலிஹீன்களில் மிகவும் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் இமாம், மேலும் ஷஹீஹு முஸ்லிமுக்கு விரிவுரையும், ரியாளுஸ்ஸாலிஹீனையும் நமக்கு கொடுத்த இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இந்த ஹதீஸை சரியான ஸனது தொடர் என்று கூறியுள்ளார்கள்.
அதுமட்டுமல்ல அந்த ஹதீஸுக்கு அற்புதமான ஒரு விளக்கத்தையும் கூறியுள்ளார்கள்...
இதைப் பார்த்துவிட்டு இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை இவர்கள் பரேலவி, கப்ரு வணங்கி என்று இந்த வஹாபிகள் சொன்னாலும் சொல்லிவிடுவார்கள்....
இதுவரை எதுவும் சொல்லவில்லை!!!!
அந்த இமாம்களின் விஷயங்களை அனைத்தையும் இவர்கள் லாவகரமாக மறைத்து விட்டு இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை ஸலஃபிகளின் இமாம் என்று சொல்கிறார்கள்!!!!
இமாம் நவவீ தங்கள் கிதாபுல் மஜ்மூஃயில் கூறுகிறார்கள்...
المجموع (8 / 274)
ما يستحب أن يقوله من يزور النبي (صلى الله عليه وسلم)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஜியாரத் செய்யக்கூடிய நபருக்கு விரும்பத்தக்க காரியம் என்னவென்றால்...
إذا وقف أمام القبر الشريف مخاطبا رسول الله (صلى الله عليه وسلم)،
கண்ணியத்திற்குரிய அந்த மண்ணறைக்கு முன்னால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருகில் பேசக் கூடியவராக நிற்கவேண்டும்....
ما نصه: ثم يرجع إلى موقفه الأول قبالة وجه رسول الله صلى الله عليه وآله وسلم
பிறகு தன்னுடைய முதலாவது நிலைக்கு நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடைய முகத்திற்கு முன்னால் வந்து நிற்க வேண்டும்...
ويتوسل به في حق نفسه
அவர்களுடைய உன்னதத்தை வைத்து அவர்களிடம் வஸீலா தேட வேண்டும்...
ويستشفع به إلى ربه سبحانه وتعالى
பிறகு அல்லாஹு ஸுபுஹானஹு தஆலாவிடம் அவர்களுடைய ஹக்கைவைத்து சபாஅத்து தேடவேண்டும்...
ومن أحسن ما يقول
அவ்வாறு அவர் (வசீலா தேடுவதிலேயே) மிகவும் அழகிய சொல் என்னவென்றால்
ما حكاه الماوردي والقاضي أبو الطيب وسائر أصحابنا - يعني سائر الشافعية - عن العتبي مستحسنين له
இமாம் மாவுர்தீ, அல் காழீ, மேலும் ஷாபி மத்ஹபைச் சார்ந்த எங்களுடைய அனைத்து தோழர்களும் உத்பாவை தொட்டும் பதிவு செய்திருக்கும் ஹதீஸ் (அதில் வரும் வாசகத்தை போல் சொல்லுதல் மிக அழகானது)
அந்த ஹதீஸ் ஆனது...
قال: (كنت جالسا عند قبر رسول الله صلى الله عليه وآله وسلم فجاء أعرابي
நான் நபி ஸல்லல்லாஹு இஸ்லாம் அவர்களுடைய ரவ்லாவுக்கு அருகில் அமர்ந்து இருந்தேன் அப்பொழுது ஒரு காட்டரபி வந்தார்...
(அவருடைய பெயர் பிலால் இப்னு ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறுகிறார்கள்)
فقال: السلام عليك يا رسول الله،
அந்த சஹாபி கூறினார்:
அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்...
سمعت الله يقول:
அல்லாஹ் தஆலா சொல்லியிருக்கிறதை நான் கேட்டுள்ளேன்
وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَـهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِيْمًا
ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து விட்டு உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் அவர்கள் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக தூதராகிய (நீங்களும்) மன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 4:64)
وقد جئتك مستغفرا من ذنبي مستشفعا بك إلى ربي.....)
(அல்லாஹ்வின் தூதரே)
நான் உங்களிடத்தில் எனக்காக அல்லாஹ்விடம் நீங்கள் மன்னிப்பு தேட வேண்டும் என்று வந்துள்ளேன்.
மேலும் உங்களை வைத்து அல்லாஹ்விடம் நான் பரிந்துரை தேட வேண்டும் என்றும் வந்துள்ளேன்...
இமாம் நவவீயுடைய கிதாபுல் மஜ்மூஃ 8/274
இந்த சம்பவம் எவ்வளவு தெளிவாக உள்ளது!!!!
மேலும் ஸியாரத் செய்பவர் இவ்வாறு சொல்வது முஸ்தஹப்பான காரியம் என்று இமாம் நவவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தீர்ப்பு கூறுகிறார்கள்....
ஸலஃப் ஸாலிஹீன்களிடம் முஸ்தஹப்பாக சொல்லப்பட்ட விஷயம் இந்த வஹாபிகளுக்கு மட்டும் எப்படி ஷிர்க்காக மாறியது???
இப்பொழுது என்ன செய்ய போகிறீர்கள்???
இமாம் நவவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இணை வைத்துவிட்டார்கள் என்று சொல்லப் போகிறீர்களா???
அல்லது அவர்கள் சலஃபு அறிஞர் இல்லை என்று சொல்லப் போகிறீர்களா???
இமாம் நவவீ அவர்கள் தங்கள் புத்தகத்தில் பதிவு செய்திருக்கும் இந்த விஷயத்தை மக்களிடம் சொல்லாமல் மறைப்பதன் நோக்கம் என்ன???
அவர் எழுதிய ரியாளுஸ்ஸாலிஹீன் எனும் புத்தகத்தை மக்களுக்குப் படித்துக் காட்டும் பொழுது அவர்களை இவ்வளவு தூரம் புகழ்கிறீர்கள்...
ஆனால் இவ்வாறு நபியிடம் உதவி தேடியதை இணைவைப்பு என்று கூறிவிட்டு அவர்களை தவ்ஹீது உடைய இமாம் என்று எப்படிக் கூறுகிறீர்கள்???
ஏனென்றால் இமாம் நவவீ அவர்களை நீங்கள் மறுத்தாள் ஹதீஸ் துறையின் பெரும் பகுதியே அடிபட்டு விடும்...
எனவே அந்த இமாமை இன்னும் முஷ்ரிகாக ஆக்காமல் வைத்திருக்கிறீர்கள் !!!!!!
ஏன் ஷிர்க் இல்லாத ஒன்றை ஷிர்க் ஷிர்க் என்று ஊளையிடுகிறீர்கள்???
இது ஹவாரிஜ்களின் பண்புகள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்...
ஹவாரிஜ்களின் பண்பு அவர்கள் காஃபிர்களை விட்டு விடுவார்கள்...
(நீங்கள் யூத நசாராக்களை உங்கள் நாடுகளில் உல்லாசமாக உலாவ விடுகிறீர்கள்....)
மற்றொரு ஹதீஸில் தஜ்ஜாலை பின்பற்றும் யூதர்களுடன் கை கோர்ப்பார்கள்...
முஸ்லிம்களை காபிர்கள் என்று கூறுவார்கள்..
மேலும் கொலை செய்வார்கள்...
இந்த அனைத்து அம்சங்களும் இப்னு அப்துல் வஹ்ஹாபையும் அவனை பின்பற்றும் அனைத்து வஹ்ஹாபிய கூடாரத்திற்கும் பொருந்தும்...
இந்த சஊது குடும்பம் ஆரம்பத்தில் பிரிட்டனுடன் கை கோர்த்து பலஸ்தீனத்தை தாக்கி அவர்களின் கையில் நமது இரண்டாம் கிப்லாவை காட்டிக் கொடுத்தது..
இன்றைய அவர்களின் வாரிசுகள் இல்லுமினாட்டி யூதர்களுடன் கை கோர்த்து அவர்களின் திட்டங்களுக்கு துணை போகிறது...
அப்பொழுது இருந்த உஸ்மானியப் பேரரசின் மீது ஸூஃபி, தரீக்கா, தர்ஹா போன்ற விமர்சனங்களை வைத்து காஃபிர்களாக சித்தரித்து அவர்களை கொலை செய்வது ஹலால் என்று கூறியது....
இன்றும் ஸலஃபுஸ் சாலிஹின்களை பின்பற்றுபவர்களை பார்த்து இணைவைப்பாளர்கள் என்று கூறுகிறது...
எனவே ஹவாரிஜ்களுக்கு சொல்லப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தும் இவர்களுக்கு கச்சிதமாக பொருந்துகிறது...
அப்படியே வாருங்கள்,
இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை இவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம் !!!!
روى الترمذي في جامعه في كتاب الدعوات عن الصحابي عثمان بن حنيف قال :
உஸ்மான் இப்னு ஹனீஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் வரக்கூடிய ஹதீஸை இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் பதிவு செய்கிறார்கள்:
أن رجلا ضرير البصر أتى النبي صلى الله عليه وسلم فقال :
பார்வை பறிபோன ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார்:
ادعُ الله أن يعافيني
எனக்கு அல்லாஹ் சுகம் தரவேண்டும் என்று துவா செய்யுங்கள்
قال : إن شئتَ دعوتُ ، وإن شئتَ صبرتَ فهو خير لك
நீ விரும்பினால் உமக்காக நான் துவா செய்கிறேன், மேலும் நீ பொறுமையுடன் இருக்க நாடினால் அது உனக்கு மிகவும் சிறந்தது இன்று பெருமானார் கூறினார்கள்.
. قال : فادْعه ،
அவர் கூறினார் அந்த (விஷயத்திற்காக எனக்கு) நீங்கள் துவாவே செய்து விடுங்கள்.
قال : فأمره أن يتوضّأ فيحسن وضوءه
அழகிய முறையில் உளூச் செய்ய பெருமானார் ஏவினார்கள்.
ويدعو بهذا الدعاء
மேலும் இந்த துவாவை ஓதச் சொன்னார்கள்.
بعد أن يصلي ركعتين
இரண்டு ரக்அத் தொழுததற்கு பின்னால்.
: " اللهم إني أسألك وأتوجّه إليك بنبيك محمد نبي الرحمة ،
யா அல்லா உன்னிடத்தில் நான் கேட்கிறேன் மேலும் ரஹ்மத்தான நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களை உன்பக்கம் வைத்து அவர்களை முன்னோக்கி உன்னிடம் கேட்கிறேன்
يا محمد
ஓ முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே!!!
إني توجهت بك إلى ربي
நிச்சயமாக நான் என் ரப்பின்பக்கம் உங்களை கொண்டே முன் நோக்கினேன்...
في حاجتي لتقضى لي ،
என்னுடைய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக...
اللهم شفعه فيّ "
யா அல்லாஹ் அவர்கள் என்னுடைய விஷயத்தில் செய்யும் ஷஃபாஅத் எனும் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயா...
وفي الحديث إن الرجل لم يغادر المجلس إلا وقد عافاه الله .
அந்த மனிதர் அந்த சபையை விட்டு போவதற்கு முன்னால் அல்லாஹ் அவருக்கு நிவாரணம் அளித்து விட்டான்...
قال الترمذي : هذا حديث حسن صحيح
இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள் இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ்...
திர்மிதீ 3578
நஸயில் குபுரா 10495
அஹ்மது 17279
இந்த வார்த்தையைச் சொல்லி வஹ்ஹாபிகளே எந்த ஒரு நாளாவது நீங்கள் தொழுது இருப்பீர்களா???
யாஅல்லாஹ் என்று மட்டும்தான் சொல்வதற்கு அனுமதி இருக்கிறது...
யா ரசூலுல்லாஹ் என்று சொல்வது ஷிர்க் என்று ஊளையிடும் ஓநாய் கூட்டங்களே...
இவ்வாறு தொழுகையில் ஓத வேண்டும் என்று சொல்லி இமாம்கள் ஸலஃப் ஸாலிஹீன்கள் தங்கள் கிதாபுகளில் தலைப்பிட்டது உங்கள் குருட்டுக் கண்களுக்கு தெரியாதா ???
ذكر ذلك الإمام النووي في كتاب الأذكار باب أذكار صلاة الحاجة )
இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களுடைய கிதாபுல் அதுகாரில் தேவையை நிறைவேற்றித் தொழுகும் ஸலாத்துல் ஹாஜத் எனும் தொழுகையில் ஓதும் திக்ருகள் என்ற தலைப்பில் இந்த ஹதீஸை கொண்டு வருகிறார்கள்...
நபியின் மரணத்திற்குப் பின்னாலும் ஒருவர் இவ்வாறு தொழுது யா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று தன் துஆவில் சேர்க்க வேண்டும் என்று ஸலஃப் ஸாலிஹீன்கள் சொல்லி இருக்கும் பொழுது மேலும் அது முஸ்தஹப்பு எனும் விரும்பத்தக்க காரியம் என்றும் சொல்லி இருக்க அதை இணைவைப்பு என்று சட்டமியற்ற உனக்கு யார் அனுமதி கொடுத்தது???
இந்த துஆக்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்கு பின்னால் ஸஹாபாக்கள் பிறருக்கு கற்றுக் கொடுத்து அதை அங்கீகரித்துள்ளுர்கள்...
மேலும் இந்த அறிவிப்பை ஏராளமான ஹதீஸ்களை உலமாக்கள் பதிவு செய்து அதற்கு நற்சான்று பகிர்ந்துள்ளார்கள்
١- [عن عثمان بن حنيف:] أنَّ رجلًا كان يختلِفُ إلى عثمانَ بنِ عفانَ رضي اللهُ عنه في حاجةٍ له،
ஒரு மனிதர் தனக்கு உரிய தேவையை நிறைவேற்றித் தர
உஸ்மான் ரலியல்லாஹ் அன்ஹு
(அவர்களிடம் சந்தித்து பேசுவதற்கு அனுமதி வேண்டி) வாதித்துக் கொண்டு இருந்தார்...
فكان عثمانُ لا يلتَفِتُ إليه،
உஸ்மான் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் அவரின் பக்கம் திரும்பி பார்க்கவில்லை...
ولا ينظرُ في حاجتِه
அவரின் தேவையை கண்டுகொள்ளவில்லை.
فلقِيَ عثمانَ بنَ حُنَيفٍ، فشكا ذلك إليه،
எனவே உஸ்மான் இப்னு ஹுனைஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்து முறையிட்டார்...
فقال له عثمانُ:
அவருக்கு கூறினார்கள்:
ائتِ الْمِيضأةِ،فتوضَّأَ،
ஒழு செய்யும் இடத்திற்கு சென்று ஒழு செய்...
ثم ائْتِ المسجدَ، فصَلِّ فيه ركعتَينِ،
பிறகு பள்ளிவாசலுக்கு வந்து இரண்டு ரக்அத் தொழு....
ثم قل: اللهمَّ إني أسألُك وأتوجَّهُ إليك بنبيِّنا محمدٍ ﷺ نبيِّ الرحمةِ،
பிறகு துஆ செய்....
யா அல்லாஹ் ! ரஹ்மத்தான நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வைத்து உன்னை நான் முன்னோக்குகிறேன்....
يا محمدُ
ஓ முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே
إني أتَوَجَّه بك إلى ربِّك عزَّ وجلَّ،
உங்களை வைத்தே உங்கள் இறைவனை நான் முன்னோக்குகிறேன்....
فيقضى لي حاجَتي، -
(எதற்காக என்றால்) என் தேவை எனக்கு நிறைவேறுவதற்காக வேண்டி (இவ்வாறு பிரார்த்திக்கிறேன்)
உஸ்மான் இப்னு ஹுனைஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த துஆவை சொல்லி விட்டு சொல்கிறார்கள்...
وتذكَّر حاجتَك -
உன் தேவையை நீ (இவ்வாறு) கூறு...
ورُحْ إليَّ حتى أروحَ معك،
என்னோடு வா நானும் உன் கூடவே வருகிறேன்...
فانطلق الرجلُ فصنع ما قال،
அந்த மனிதர் நடந்து சென்றார், அவ்வாறே கூறினார்...
ثم أتى بابَ عثمانَ بنِ عفانَ رضيَ اللهُ عنه،
பிறகு உஸ்மான் இப்னு அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் (வீட்டின்) கதவுக்கு அருகில் வந்தார்...
فجاء البوّابُ حتى أخذ بيدِه،
வாயிற் காவலர் வந்து அவரை தடுத்தார்...
فأدخلَه عليه،
(உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்) உள்ளே அனுமதித்தார்கள்...
فأجلَسه معه على الطَّنفَسةِ،
தன்னுடன் விரிப்பின் மீது அவரை அமரச் செய்தார்கள்...
وقال: حاجتَك؟
உங்களது தேவை என்ன என்று கேட்டார்கள்...
فذكر حاجتَه،
அவர் தன் தேவையை கூறினார்...
فقضاها له،
அதை அவருக்கு நிறைவேற்றி கொடுத்தார்கள்
ثم قال له: ما ذكرتُ حاجتَك حتى كانت هذه الساعةُ،
இந்த நேரம் வரை நான் உம்முடைய தேவை என்ன என்று எனக்குத் தெரியாமல் இருந்தது.
وقال: ما كانت لك من حاجةٍ فأْتِنا،
உமக்கு என்ன தேவை இருந்தாலும் நீர் நம்மிடம் வரலாம்.
ثم إنَّ الرجلَ خرج من عندِه،
பிறகு அந்த மனிதர் அவர்களிடமிருந்து விடை பெற்றுச் சென்றார்...
فلَقِيَ عثمانَ بنَ حُنَيفٍ،
உஸ்மான் இப்னு ஹுனைஃப் ரலியல்லாஹு அவர்களை சந்தித்தார்...
فقال له: جزاك اللهُ خيرًا،
உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக என்று கூறினார்.
ما كان ينظرُ في حاجتي، ولا يلتفِتُ إليَّ حتى كلَّمتَه فيَّ،
நீர் எனக்கு சொல்லிக் கொடுத்த விஷயம் இல்லாத வரைக்கும் அவர் என் தேவையை நிறைவேற்றவும் இல்லை, என் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை.
(அதாவது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வைத்து வசீலா தேடி செய்த துவாவின் மூலமாக அரசாங்க அலுவல் உண்டான ஒரு காரியம் மிக மிக விரைவாக முடிந்துவிட்டது)
فقال عثمانُ بنُ حُنَيفٍ: واللهِ ما كلَّمتُه،
உஸ்மான் இப்னு ஹுனைஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக அந்த விஷயத்தை நான் உனக்கு சொல்லித் தரவில்லை...
(மாறாக இந்த வார்த்தைகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்தது)
ولكن شهدتُ رسولَ اللهِ ﷺ وأتاه ضريرٌ، فشكا إليه ذهابَ بصرِه،
என்றாலும் பெருமானாரிடம் நான் இருந்த பொழுது கண் பாதிக்கப்பட்ட ஒருவர் பெருமானாரிடம் அவர் பார்வை பறிபோனது சம்பந்தமாக முறையிட்டார்...
فقال له النبيُّ ﷺ: فتصبِرُ؟
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.
நீர் பொறுமையாக இருப்பீரா???
فقال: يا رسولَ اللهِ إنه ليس لي قائدٌ، وقد شقَّ عليَّ،
அல்லாஹ்வின் தூதரே என்னை அழைத்துச் செல்பவர் யாரும் இல்லை அதனால் எனக்கு சிரமமாக இருக்கிறது...
فقال النبيُّ ﷺ: ائْتِ الميضَأةَ،
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஒழு செய்யும் இடத்திற்குப் செல்லும்...
فتوضأ ثم صلِّ ركعتَينِ،
உளுச் செய்து இரண்டு ரக்அத் தொழும்.....
ثم ادْعُ بهذه الدَّعواتِ
பிறகு இந்த துவாவை ஓதும் என்று கற்றுக் கொடுத்தார்கள்..
قال عثمانُ بنُ حُنَيفٍ: فواللهِ ما تفرَّقْنا، وطال بنا الحديثُ حتى دخل علينا الرجُلُ كأنه لم يكن به ضُرٌّ قطُّ.
அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் அவ்வாறு பேசிக்கொண்டே இருந்தோம். கடைசியாக அந்த மனிதர் எந்தவிதமான கஷ்டமும் இல்லாத நிலையில் எங்களிடத்தில் வந்தார்....
أخرجه ابن خزيمة (٢/٢٢٥) مختصراً، والطبراني (٩/١٧)، والحاكم في «المستدرك» (١/٧٠٧)
முஸ்ததுரகுல் ஹாகிம் 1/ 707
தப்ரானீ 9/17
இப்னு ஹுஸைமா 2/225
صححه امام منذري في الترغيب والترهيب 1/476
இமாம் முன்திரிய்யி அவர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்று சான்று கொடுத்துள்ளார்கள்.
وقال المنذري في كتابه ( الترغيب والترهيب ) باب صلاة الحاجة
தேவையை நிறைவேற்றக்கூடிய தொழுகை ஸலாத்துல் ஹாஜத் எனும் தலைப்பின் கீழ் இதை கொண்டு வந்துள்ளார்கள்.
அத் தர்ஃகீப் வத் தர்ஹீபு 1/476
باب صلاة الحاجة مثل الإمام النووي في كتاب الأذكار والإمام جلال الدين السيوطي صاحب تفسير الجلالين في عمل اليوم والليلة ) .
இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களுடைய கிதாபுல் அதுகாரில் தேவையை நிறைவேற்றும் தொழுகை ஸலாதுல் ஹாஜத் எனும் தலைப்பில்தான் இதை கொண்டு வந்துள்ளார்கள்...
அதேபோல இமாம் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் தங்களுடைய அமலுல் யவ்மி வல்லய்லாவில்
ஸலாத்துல் ஹாஜத் தேவையை நிறைவேற்றும் தொழுகை முறை எனும் தலைப்பில்தான் பதிவு செய்துள்ளார்கள்...
وصححه امام نور الدين الهيثمي
المجمع الزوائد 2/279
اتحاف الاذكياء ص 8 - 10
இமாம் இப்னு ஹஜர் ஹைஸமீ இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்று கூறியுள்ளார்கள்.
அல் மஜ்மஃ ஸவாயித் 2/279
இத்திஹாபுல் அதுகியா
பக்கம் 8 to 10.
قال الطبراني بعد أن ذكر طرق الحديث : والحديث صحيح .
இந்த ஹதீஸில் வரக்கூடிய அனைத்து பாதைகளையும் கவனித்து இமாம் தப்ரானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸ் ஸஹீஹானது.
அதாவது ஒருவர் ஹாஜத் நிறைவேற இந்த தொழுகையை தொழுது அல்லாஹ்விடம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களை வைத்து பரிந்துரை கேட்டு பெருமானாரின் பெயரை யா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நான் உங்களைக் கொண்டு முன்னோக்குகிறேன் என்று துவாவில் சொல்லவேண்டும் என்று இதில் தெளிவாக வந்துள்ளது...
மேலும் இவ்வாறு கூறுவது அவர்களின் நாட்டத்தை நிறைவேற்றும் என்றும் வந்துள்ளது...
மிக விரைவாக துவா ஒப்புக்கொள்ளப்படும் என்றும் சஹாபாக்கள் கூறியுள்ளார்கள்...
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையிலும் இவ்வாறு செய்துள்ளார்கள்...
பெருமானாரின் மரணத்திற்குப் பின்னாலும் சஹாபாக்கள் இதை செய்துள்ளார்கள்...
யா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களை நான் முன் நோக்குகிறேன் என்று ஒருவர் தன் துவாவில் கூறினால் அது எந்தவிதமான இணைவைப்பும் இல்லை என்று அனைத்து விதமான உலமாக்களும் சான்று பகர்ந்து இருக்க ஹிஜ்ரி 700 க்கு பின்னால் வந்த இப்னு தைமியா, இப்னுல் கையும், அவர்களின் அடிவருடிகள் அல்பானி, உசைமின், இப்னு பாஸ் ஆகியோருக்கு மட்டும் இது ஷிர்க்காக தெரிவது இவர்கள் சலஃபுஸ் ஸாலிஹீன்கள் பின்பற்றுகிறோம் என்ற பச்சை பொய் கூறுகிறார் என்பதை காட்டுகிறது...
மேலும் பின்னால் உள்ளவர்களை முஷ்ரிக்குகள் என்று சொல்வதன் மூலம் அவர்களுக்கு வழிகாட்டிய சலஃபுஸ் ஸாலிஹீன்களையும் இவர்கள் முஷ்ரிக்களாக ஆக்குகிறார்கள்!!!
இதில் எந்த இமாம்களும் இப்படி கூறவில்லை என்று பச்சை பொய்யை வேற சொல்லிக்கொள்வது!!!
ஸஹாபாக்கள் சொல்வது தான் எங்களுக்கு மார்க்கம்!!!!
3 நூற்றாண்டில் வாழ்ந்த இமாம்கள் சொல்வது தான் எங்களுக்கு மார்க்கம்!!!
என்று முழுக்க முழுக்க இப்னு தைமியா அவருடைய கொள்கைக்கு முட்டுக் கொடுத்து விட்டு சஹாபாக்கள் சொன்ன கருத்துக்கள் இப்னு தைமியாவுடைய கொள்கைக்கு முரணாக வந்தால் அவர்களையே வழிகேடர்களாக சித்தரித்து விடுவார்கள் இந்த அயோக்கியர்கள்!!!!!
இந்த ஹதீஸை அல்பானியாளும் மறுக்க முடியவில்லை!!!
அல்பானி தனக்கு ஒத்து வரவில்லை என்றால் அதை பலவீனமாக்க கூடிய பண்பு கொண்ட ஒரு நபர்!!!
அதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு இன்ஷா அல்லா பின்னால் பார்க்கலாம்!!!
அதுவே தனக்கு தோதுவாக வந்துவிட்டால் பொய்யராக இருந்தாலும் அவரை ஷேஹுல் இஸ்லாம் என்று தலையில் தூக்கிக் கொண்டாடி விடுவார்கள்...
அபுல் ஹஸன் அல் ஹகாரி என்பவர் பொய்யர் என்றும் இட்டுக்கட்டுபவர் என்றும் அறியப்பட்டவர்...
இவரை அனைத்து இமாம்களும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்...
ஆனால் இவரை இவர்கள் ஸலபிகள் ஷெய்குல் இஸ்லாம் என்று பட்டம் சூட்டுகிறார்கள்...
காரணம் நான்கு மத்ஹபு உடைய உலமாக்களின் மீதும் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் இருக்கின்றன...
அவைகளை முட்டுக் கொடுப்பதற்காக பொய்யான ஒரு மனிதரை கூட இஸ்லாத்தின் தலைவராக இவர்கள் காட்டி விடுவார்கள்.
இமாம் ஷாஃபி ரஹிமஹுமுல்லாஹ் அவர்கள் மீது இந்த அபுல் ஹஸன் அல் ஹகாரி இட்டுக்கட்டி எழுதிய இஃதிகாதுஷ் ஷாஃபியீ என்ற புத்தகத்தை இந்த ஸலஃபிகள் தங்கள் மர்கஸில் கொள்கை பாடமாக எடுக்கிறார்கள்!!!!
காரியம் வந்தால் காலை நக்குதல் என்பது இதுதான்....
எனவே இந்த ஹதீஸை அல்பானி மறுக்கவே முடியவில்லை...
இந்த ஹதீஸை ஸஹீஹானது என்று சொல்லிவிட்டு
الحديث صحيح والقصة ضعيفة منكرة
இந்த ஹதீஸ் சரியானது தான் ஆனால் இதில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவம் பலவீனமானது மற்றும் மறுக்கதக்கது!!!!
என்னப்பா இது புதுசா இருக்கு!!!
சஹீஹான ஹதீஸ் அறிவிப்பு தொடர் சரியாகி விட்டால் அதன் கருத்துக்களை நம் அறிவைக் கொண்டு ஆய்வு செய்யக் கூடாது என்று இவர்கள் டிஎன்டிஜே மதத்தவருக்கு புத்திமதி சொல்லியுள்ளனர்!!!!
அறிவை மூலதனமாக்கி அதில் வரும் கருத்துக்களை மூலதனமாக்கி சஹீஹான ஹதீஸ்களை மறுக்கக் கூடாது என்று டிஎன்டிஜே மதத்தவருக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தவர்கள் இவர்கள்!!!!
இப்பொழுது இந்த ஹதீஸ் வலுவானதாக ஆகி விட்டதாலும்!!
இமாம் நவவி, இமாம் இப்னு ஹஜர், இமாம் முன்திரிய், இமாம் தப்ரானி, இமாம் ஹைசமி இதுபோன்ற பல இமாம்கள் இதை சரி கண்டதாலும் தன் கொள்கைக்கு மாற்றமாக இருப்பதால்
திருடனுக்குத் தேள் கொட்டியது போல் இந்த ஹதீஸ் இவர்களுக்கு கடுக்கிறது ....
எனவேதான் அல்பானியால் இதை மறுக்க முடியாமல் கூறுகிறார் இந்த சனது தொடர் சரியானதுதான் ஆனால் வரும் சம்பவம் மறுக்க தக்கது!!!!
வஹி என்று உறுதி செய்யப்பட்டபின் அதை இவர்கள் தங்கள் மனோ இச்சையின் படி ஆய்வு செய்கிறார்கள்!!!!
இதே விஷயத்தை டிஎன்டிஜே மதத்தின் தலைவர் பிஜே செய்ததால் காபிர் என்று பத்வா கொடுக்கிறார்கள்!!!!
இந்த சலஃபி களின் ரெட்டை நிலைகளை பாருங்கள்!!!!
பின்னால் வந்த எந்த சலபி களாலும் இந்த ஹதீஸை மறுக்க முடியவில்லை....
எனவே அதற்கு விமர்சனம் என்ற பெயரில் சம்பந்தமில்லாமல் இவர்கள் கொள்கைக்கு கூட ஒத்துவராத காமெடியான விமர்சனங்களை எல்லாம் வைக்கிறார்கள்!!!!
இந்த நூற்றாண்டில் ஒரு சலஃபி எழுதிய புத்தகம்
ரஸாயிலுன் ஃபில் அகீதா என்ற நூலில் சஹாபாக்களை இவர்கள் எவ்வளவு மட்டமாக பேசுகிறார்கள் என்று பாருங்கள்...
காரணம் என்னவென்றால் மேலே நாம் பதிந்து இருக்கும் அந்த ஹதீஸ் சரியானது...
அந்த ஹதீஸை மறுக்க முடியவில்லை என்ற ஒரு அவல நிலை இந்த வஹாபிகளுக்கு வந்த பின்னால் அவர் கதறியதை பாருங்கள்....
وقوله: )وإن كانت حاجة فعل مثل ذلك
இதைப்போன்ற ஒரு தேவை செய்யவேண்டி வந்தால்
قد يكون مدرجا من كلام
عثمان
இது உஸ்மான் இப்னு ஹுனைஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அதிகப்படியான சொல்லாகத்தான் கவனிக்கப்படும்...
لا من كلام النبي صلى الله عليه وسلم،
அது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன சொல் அல்ல...
அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் மரணத்திற்கு பின்னால் தன்னிடம் வந்து இஸ்திஃபார் கேட்க சொல்லவில்லை...
(......இது இவர்களால் புரிந்து கொண்ட கற்பனை!!!!)
என்ன ஒரு ஆச்சரியம்!!!
இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்லாவுக்கு போய் அவர்களிடம் நமக்காக பாவ மன்னிப்பு கேட்கச் சொல்வது சலஃபிகளை பொறுத்தவரைக்கும் மிகப்பெரிய ஷிர்க்!!!!
எனவே அந்த விஷயத்தை உஸ்மான் எனும் அந்த சஹாபி புரிந்து கொள்ளாமல் தான் இணை வைத்தது மட்டுமல்லாமல் தன்னை நாடி வந்த அந்த மனிதரையும் இணைவைக்கும் தூண்டி இருக்கிறார்கள் என்பது போல் சொல்கிறார்கள்!!!!
பிறகு என்ன ------------ க்கு சஹாபாக்களின் புரிதல்கள் தான் நமக்கு மார்க்க வழிகாட்டுதல் என்று நீங்கள் கூறுகிறீர்கள்????
ஒரு சஹாபி புரிந்துகொண்டது உங்களுக்கு இணைவைப்பு அளவுக்கு இன்று உள்ளதென்றால்????
அவை அனைத்துமே சரிதான் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைத்து நபர்களையும் நீங்கள் என்ன முத்திரை குத்துகிறீர்கள்????
அவர்களும் ஷிர்க் எனும் இணைவைப்பை ஏவி இருக்கிறார்களா????
மேலும் அந்த புத்தகத்தில் அவர் கூறுகிறார்
وبالجملة فهذه الزيادة لو كانت ثابتة لم تكن فيها حجة
மொத்தத்தில் இந்த (சஹாபியின் புரிதலான) அதிகப்படியான வார்த்தை உறுதியானதாக இருந்தாலும் அதில் மார்க ஆதாரம் கிடையாது!!!!
(சஹாபாக்களின் புரிதல்கள் இவர்களுக்கு ஆதாரம் இல்லை!!!)
وانما غايتها ان يكون عثمان بن حنيف ظن ان الدعاء يدعى ببعضه دون بعض
சிலவற்றில் இல்லாமல் சிலவற்றைக் கொண்டு துவா செய்ய வேண்டுமென்று உஸ்மான் இப்னு ஹுனைஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் புரிந்துகொண்டார்கள் என்று நாம் நோக்கம் எடுத்துக்கொள்ளலாம்!!!!
(அதாவது அந்த சஹாபி செய்தது ஷிர்க் என்று சொல்வதற்கு இவர்களுக்கு வாய் வரவில்லை!!!
அப்படி ஒரு சலஃபீ சொல்லியிருந்தால் சஹாபாக்களை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று போலி நாடகம் வெளிச்சமாய் இருக்கும்....
فإنه لم يامره بالدعاء المشروع
நிச்சயமாக நபியவர்கள் ஷரீஅத்தில் இந்த துவாவை ஏவவில்லை !!!!
(.....என்னது ஏவ வில்லையா???
அடப்பாவிங்களா அந்த ஹதீஸில் தெளிவாக வருகிறது...
فأمره أن يتوضّأ فيحسن وضوءه
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை ஒழு செய்யச் சொல்லி பிறகு இரண்டு ரக்அத் தொழுது இந்த துவாவை போதும் படி ஏவினார்கள் என்று....)
بل ببعضه وظن ان هذا مشروع بعد موته صلى الله عليه وسلم على فرض صحة هذا الاثر
மாறாக அவற்றில் சிலவற்றை கொண்டுதான் ஏவினார்கள் !!!!
(......அதில் சில வார்த்தைகள் என்ன வார்த்தை என்று கொஞ்சம் அல்பானியிடம் கேட்டு சொல்கிறீர்களா......?
அப்படி ஷிர்கில்லாத வார்த்தையை நாமும் ஓதுவோம்......)
ரஸாயிலுன் ஃபில் அகீதா
பக்கம் 235.
رسائل في العقيدة 235
வாருங்கள் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இணை வைத்தார்களா? என்று பார்ப்போம்
روى الحافظ ابن حجر – صاحب فتح الباري بشرح صحيح البخاري – عن أبي سعيد السمعاني ، عن علي بن أبي طالب كرم الله وجهه .... الحديث :
ஹஜரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக் கூடிய ஹதீஸை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களுடைய ஃபத்ஹுல் பாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள்...
بعد دفنه صلى الله عليه وسلم بثلاثة أيام
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடக்கம் செய்யப் பட்டதற்கு மூன்று நாட்களுக்கு பின்..
جاءهم أعرابي فرمى بنفسه على القبر الشريف ،
ஒரு கிராமவாசி வந்து கண்ணியம் மிகுந்த அந்த அடக்க ஸ்தலத்தின் மீது அப்படியே விழுந்து விட்டார்...
وحثى من ترابه على رأسه وقال :
அதிலிருந்து மண்ணை எடுத்து தன் தலையில் போட்டவாறு கூறினார்:
يا رسول الله ، قلت فسمعنا قولك ،
யாரசூலல்லாஹ் நீங்கள் சொல்லிய அந்த சொல்லை நாங்கள் செவிமடுத்து இருக்கிறோம்...
ووعيت عن الله ما وعينا عنك ،
நீங்கள் அல்லாஹ்வை தொட்டும் செவிமடுத்த ஒன்றை உங்களைத் தொட்டும் நாங்கள் செவிமடுத்துள்ளோம்...
وكان فيما أنزله الله عليك قوله تعالى :
அல்லாஹுத்தஆலா உங்களுக்கு இறக்கிய விஷயத்தில் சொன்ன விஷயமாகிறது:
" ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما "
ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து விட்டு உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் அவர்கள் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக தூதராகிய (நீங்களும்) மன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 4:64)
وقد ظلمت نفسي وجئتك تستغفر لي إلى ربي .
எனக்கு நானே அநியாயம் செய்து விட்டேன்.
நீங்கள் எனக்காக பாவமன்னிப்பு என் இறைவனிடத்தில் தேட வேண்டும் என்று உங்களிடத்தில் வந்துள்ளேன்..
فنودي من القبر الشريف أن قد غُفِرَ لك .
கண்ணியம் நிறைந்த அந்த மண்ணரையின் உள்ளிருந்து ஒரு சப்தம் கேட்டது
"திட்டமாக உன் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டது" என்று
ஃபத்ஹுல் பாரி 4/81
ذكر ابن كثير في تفسيره عند هذه الآية من سورة النساء
என்னது இமாம் இப்னு கஸீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சலஃபிகளின் பார்வையில் இணைவைப்பாளரா???
சூரத்துன் நிஷா உடைய விளக்கவுரையில் இமாம் இப்னு கஸீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இதே விஷயத்தை பதிவு செய்கிறார்கள்...
قال : وقد ذكر جماعة منهم الشيخ أبو منصور الصباغ
இமாம் இப்னு கஸீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு பெரும் கொண்ட கூட்டமே அறிவித்து இருக்கக்கூடிய ஹதீஸ் அவர்களில் ஒருவராகிய
ஷேஹ் அபூ மன்ஸுர்
في كتابه الشامل الحكاية
தன்னுடைய புத்தகம் அஷ் ஷாமிலுல் ஹிகாயாவில்
المشهورة عن العتبي قال :
உத்பாவை தொட்டும் அறிவிக்கக்கூடிய மிகவும் பிரபல்யமான ஹதீஸ்...
(
கவனியுங்கள்: இமாம் இப்னு கசீர் இந்த ஹதீஸ் மிகவும் பிரபல்யமானது என்று முன்வைக்கிறார்)
كنت جالسا عند قبر النبي صلى الله عليه وسلم فجاء أعرابي فقال :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்லா ஷரீபுக்கு அருகில் நான் அமர்ந்து இருந்தேன் அப்போது ஒரு கிராமவாசி வந்து கூறினார்...
السلام عليك يا رسول الله ،
யாரசூலல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்க
سمعتُ الله يقول :
அல்லாஹ் சொல்ல நான் கேட்டுள்ளேன்...
" ولوأنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما "
ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து விட்டு உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் அவர்கள் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக தூதராகிய (நீங்களும்) மன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 4:64)
وقد جئتك مستغفرا لذنبي مستشفعا بك إلى ربي ، ثم أنشأ يقول :
உங்களிடத்தில் நீங்கள் என் பாவத்திற்காக வேண்டி பாவமன்னிப்புத் தேட வேண்டும் என்பதற்காகவும் உங்களை கொண்டு என் ரப்பிடத்தில் ஷபாஅத் தேட வேண்டும் என்றும்
நான் வந்துள்ளேன்...
பிறகு இந்தக் கவிதையை பாடினார்....
ياخير مَن دُفِنتْ بالقاع أعظمه ... فطاب من طيبهن القاع والأكم
மிகவும் கண்ணியம் வாய்ந்தவரான நிம்மதியான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டவரே
அந்த நிம்மதியான இடமும் அந்த மகத்துவமிக்க உயர்ந்த இடமும் அதற்குண்டான மணத்தைக் கொண்டு மணம் பெற்றுவிட்டது
نفسي الفداء لقبر أنت ساكنه.. ... فيه العفاف وفيه الجود والكرم
நீங்கள் தங்கியிருக்கும் அந்த மண்ணரைக்கு என் உயிர் அர்ப்பணம்...
அந்த மண்ணரையிலே பத்தினி தனமும் இருக்கிறது, அதிலே கொடைத் தன்மையும் வள்ளல் தன்மையும் இருக்கிறது...
ثم انصرف الأعرابي ،
பிறகு அந்தக் கிராமவாசி திரும்பிச் சென்றுவிட்டார்...
قال العتبي : فغلبتني عيني فرأيت النبي صلى الله عليه سلم في النوم
உதுபா கூறுகிறார்கள்:
என் கண்கள் (அங்கே) சொறுகி விட்டது நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் கண்டேன்...
فقال : يا عتبي ،
யாஉத்பா என்று கூறினார்கள்
الحقْ الأعرابي فبشره أن الله قد غفر له .
அந்தக் கிராமவாசியை சந்தித்து அவருக்கு சுபச்செய்தி கூறுங்கள்,
நிச்சயமாக அல்லாஹ் அவர் பாவத்தை மன்னித்து விட்டான்...
தஃப்சீர் இப்னு கஸீர்,
இரண்டாம் பாகம்
சூரத்துன் நிசா 64 ஆம் வசனத்தின் விளக்க உரை
அல்பிதாயா வந்நிஹாயா என்ற தன்னுடைய நூலில் இதே போல ஏராளமான சம்பவங்களை இமாம் இப்னு கஸீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் இன்ஷா அல்லாஹ் அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்...
அல்லாஹுவே மிக அறிந்தவன்.
- இப்னு கபீர்
Comments
Post a Comment