ஷிர்க் வாங்கலயோ ஷிர்க்...
ஃபர்ஸ்ட் கிரேடு ஷிர்க்...
தய்மியிஸம் பிராண்ட் ஷிர்க்...
கல்ஃப் ஃபுல்லா விற்கும் ஷிர்க்...
என்ன அண்ணே சொல்றீங்க???
ஷிர்க் வியாபாரமா???
ஆமாம் ...
எப்படினே???
எங்களைத் தவிர அனைவரும் முஷ்ரிக்கள்!!!
அப்ப ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் ஷிர்க் வச்சுடாங்களா அண்ணே ???
தம்பி : நாங்கள் ஸலஃப் ஸாலிஹீன்கள் என்று சொன்னது எங்க டீம் மவ்லவிகளை மட்டும் தான் சொன்னோம் !!!!!
அப்ப ஏன்ணே உங்கள ஜமாஅத்னு சொல்றீங்க???
ஃபிர்க்கா (புதிதாக உருவாகிய கூட்டம்னு) சொல்ல வேண்டியது தானண்ணே !!!!
தம்பி இந்த மாதிரி கேள்வி கேட்காதே !!!
எனக்கு ஷிர்க் என்று லேபிள் மட்டும்தான் குத்த தெரியும்!!!
இருக்கிற ஹதீஸையும், இமாம்களின் கருத்தையும் மறைக்க தெரியும்!!!!
இல்லையென்றால் ஹதீசை பலவீனமாக்கத் தெரியும்!!!
அதுவும் முடியாமல் நாங்கள் மாட்டிக்கொண்டால் அது இட்டுக்கட்டப்பட்டது என்று சொல்ல தெரியும் !!!!
அதையும் தாண்டி அந்த விஷயம் உண்மையானது என்று சொன்னால் வேறு விதமான மாற்று விளக்கம் சொல்லி எஸ்கேப் ஆகத் தெரியும்!!!
ஹதீஸில் வரும் பலமான அறிவிப்பாளரை ஓட்டாண்டியாக்கத் தெரியும்!!!
ஆக மோசமான பொய்யான அறிவிப்பாளரை மாஸாக காட்ட தெரியும்!!!
மாற்றி மாற்றி பொரட்டி பொரட்டி வளைத்து நெளித்து பேச தெரியும்!!!
இதே போல நீ தொடர்ந்து எங்களை எதிர்த்துக் கொண்டே இருந்தால் உன் மீது பரேலவி, ஷியா, சூஃபி ஆகிய லேபில் குத்தி உன் மீது அமெரிக்காவின் நேட்டோ படைகளை அனுப்ப தெரியும்....
இல்லை என்றால் உள்நாட்டு கலவரங்களை தூண்டத் தெரியும்!!!
உங்களிடமே படித்து வளர்ந்து வந்த உலமாக்களை எங்கள் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தர்பியா கிளாஸ் எடுக்கத் தெரியும்!!!
போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது!!!!
எப்பா !
நீங்கள் ஷிர்க் ஷிர்க்னு வியாபாரம் பண்ணுவதில் இந்த உலமாக்களையும் இனிமேல் சேர்த்துக் கொள்ளப் போகிறீர்களா என்று நமக்கு கூறுங்கள்....
روى الطبراني وأبو يعلى في مسنده وابن السني في عمل اليوم والليلة
தப்ரானீ, அபூ யஃலா, இப்னு ஸின்னீயுடைய அமலுல் யவ்மி வல்லய்லா ஆகிய கிதாப்களில் வரக்கூடிய ஹதீஸ்
عن عبد الله ابن مسعود قال رسول الله صلى الله عليه وآله وسلم:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
(إذا انفلتت دابة أحدكم بأرض فلاة
ஒரு விசாலமான பூமியில் உங்களுடைய ஒட்டகம் ஓடிவிட்டால்
فليناد: يا عباد الله احبسوا علي،
அல்லாஹ்வின் அடியார்களே எனக்கு உதவி செய்யுங்கள்,
يا عباد الله احبسوا علي،
அல்லாஹ்வின் அடியார்களே எனக்கு உதவி செய்யுங்கள் என்று
அவர் கூவி அழைக்கட்டும் :
فإن لله في الأرض حاضرا سيحبسه عليكم.
நிச்சயமாக அல்லாஹ்வுக்கு உரிய (உதவி தேவைப்படும் பொழுது) ஆஜராக கூடிய அடியார்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
وفي رواية أخرى لهذا الحديث:
மற்றொரு அறிவிப்பில் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
(إذا ضل أحدكم شيئا،
எந்தவிதமான உதவியாளரும் இல்லாத ஒரு சூழ்நிலையில்
உங்களில் ஒருவர் ஏதேனும் ஒன்றை தொலைத்து விட்டால்
أو أراد أحدكم غوثا،
அல்லது உங்களில் ஒருவர் ஒரு உதவியாளரை நாடினால் அவர் கூறட்டும்:
وهو بأرض ليس بها أنيس فليقل:
எந்த உதவியாளரும் இல்லாத ஒரு பூமியில் (தனியாக மாட்டிக்கொண்டவராக) அவர் இருந்தால் அவர் கூறட்டும்:
يا عباد الله أغيثوني،
அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவி செய்யுங்கள்.
يا عباد الله أغيثوني،
அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவி செய்யுங்கள்.
فإن لله عبادا لا نراهم.
ஏனெனில் நிச்சயமாக நாம் பார்க்காத விதத்தில் அல்லாஹ்விற்கு பல அடியார்கள் இருக்கிறார்கள்.
رواها الطبراني في الكبير
இந்த ஹதீஸ் தப்ரானீ முஃஜமுல் கபீரில் வருகிறது...
இந்த ஹதீஸை அறிவித்ததற்கு பின்னால் எவனும் இந்த ஹதீஸை மறுத்து விடுவான் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை இமாம் தப்ரானி விளக்கமாக கூறுகிறார்கள் :
وقال بعد ذلك: وقد جرب ذلك.
நிச்சயமாக இது அனுபவத்தால் கண்ட உண்மையும் கூட !!!!!
எனவே வழக்கம் போல நாம் ஒரு ஹதீஸை வைத்தால் அதை தட்டுவதற்கும் அதை பலவீனமாக்கவும் இவர்கள் முயற்சி செய்வார்கள் !!!
ஒரு இமாமின் கூடுதல் விளக்கமும் இதற்கு வரும்பொழுது அது இவர்களுக்கு ரிவிட்டாக அமைகிறது...
ஏனெனில் ஸலஃப் ஸாலிஹீன்கள் இந்த ஹதீஸ்களுக்கு நல்ல விளக்கத்தை புரிந்து மக்களுக்கு எத்தி வைத்து உள்ளார்கள் என்ற உறுதி இதில் இருக்கிறது...
வஹ்ஹாபிகளே இமாம் தப்ரானி இதை அனுபவத்தில் கண்டு இருக்கிறார் !!!!
இதை இணைவைப்பு என்று அவர்கள் மட்டுமல்ல எந்த இமாம்களும் சொல்லவில்லையே???
உங்கள் பார்வையில் அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி தேடிய இந்த இமாம் யார்???
நோய் வந்தால் மருத்துவரிடம் உதவி.....
நீச்சல் தெரியாதவன் கடலில் விழுந்தால் நீச்சல் தெரிந்தவனிடம் உதவி....
பொருளாதாரத்தில் பிறரிடம் உதவி....
அரசியலில் பிறரிடம் உதவி....
வியாபாரத்தில் பிறரிடம் உதவி....
கல்வியில் பிறரிடம் உதவி....
விவசாயத்தில் பிறரிடம் உதவி....
இந்த அனைத்து உதவிகளும் மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகும்...
அவர்களை இறைவனாக பார்க்காமல் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட காரணியாக பார்த்தால் இணைவைப்பு இல்லை....
ஆன்மீகத்தில் உதவி என்று வந்தவுடன் மட்டும் இவர்களுக்கு இணைவைப்பாக மாறிவிடுகிறது!!!
பஸ்ஸார் என்னும் ஹதீஸ் கிதாபில் அந்த நல்லடியார்கள் என்பவர்கள் வானவர்கள் என்றும் வந்துள்ளது.
ورواه البزار عن ابن عباس رضي الله عنهما مرفوعا بلفظ:
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்;
إن لله ملائكة في الأرض سوى الحفظة
பாதுகாவலுக்கு உரிய வானவர்கள் அல்லாது வேறு சில வானவர்கள் அல்லாஹ்விற்கு என்று இருக்கிறார்கள்...
يكتبون ما يسقط من ورق الشجر،
மரத்தின் இலைகள் விழுவதை கூட கணக்கில் எழுதி விடுவார்கள்.
فإذا أصابت أحدكم عرجة بأرض فلاة فليناد:
ஆள் அரவமற்ற ஒரு பூமியில் உங்களுக்கு ஏதேனும் ஒரு கஷ்டம் வந்துவிட்டால் அவர் இவ்வாறு அழைக்கட்டும்...
يا عباد الله أعينوني
அல்லாஹ்வின் அடியார்களே எனக்கு உதவி செய்யுங்கள்....
وحديث البزار هذا حسنه الحافظ ابن حجر العسقلاني في أمالي الأذكار كما في شرح ابن علان على الأذكار (5 / 151).
பஸ்ஸாரில் வரும் இந்த ஹதீஸ் ஹஸன் தரத்தை உடையது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.
அமாலில் அதுகார் 5 / 151
وقال الحافظ الهيثمي عنه في المجمع (10 / 32)
ஹாபிழ் அல் ஹய்ஸமீ ரஹிமஹுமுல்லாஹ் தங்களின் மஜ்மஃ ஸவாயிதில் கூறுகிறார்கள்
رجاله ثقات
இதில் வரும் அறிவிப்பாளர்கள் அனைவரும் உறுதியானவர்கள்.
وزاد الحافظ الهيثمي مؤكدا على رواية الطبراني مقرا قوله:
ஹாபிழ் ஹைஸமீ ரஹிமஹுமுல்லாஹ் அவர்கள் இமாம் தப்ரானி இமாம் சொன்ன வார்த்தையை உறுதிப்படுத்தி கூறுகிறார்கள்
وقد جرب ذلك.
"இவ்வாறு உதவி தேடுவது அனுபவத்தில் கண்ட உண்மையாகும்"
மஜ்மஃ ஸவாயித் 10 /32
அல்பானி உடைய நயவஞ்சகமான இரட்டை முகத்தை நாம் இங்கே பார்க்கலாம்...
அவர் மீது நமக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை!!!
ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ் விஷயத்தில் கொள்கை முரண்டு வைத்துக்கொண்டு இவ்வாறு செய்வதாலும், சுன்னத்தில் உள்ளதை மார்க்கத்தில் இல்லாதது ஷிர்க், பிதுஅத் என்று சொல்லி மக்களை குழப்புவதும், குஃப்ரு ஃபத்வா கொடுப்பது தான்
கண்டிக்கத்தக்கதாக நாம் பார்க்கிறோம்...
ஏனென்றால் இந்த ஹதீஸ்களின் ஞானங்களை சுமந்து செல்பவர்கள் நீதவான் களாக இருப்பார்கள் என்று ஹதீஸில் வந்திருக்கிறது...
يحمل هذا العلم من كل خلف عدوله
இந்த கல்வியை ஒவ்வொரு நூற்றாண்டின் நீதவான்கள் சுமப்பார்கள்...
(ஹதீஸ் சுருக்கம்)
- பைஹகி
எனவே இரட்டை வேஷம் போடுவது, தன் மனோ இச்சைக்கு ஒத்து வரவில்லையென்றால் ஸஹாபாக்களையும் இமாம்களையும் தரம் தாழ்ந்து பேசுவது,
இரட்டை நாக்குடன் இருப்பது,
ஒவ்வொரு இடத்திலும் மாற்றி மாற்றி புரட்டி,புரட்டி பேசுவது
இதுவெல்லாம் ஒரு ஹதீஸ் கலை அறிஞரிடம் இருக்கக் கூடாத பண்புகள்...
இவரைப் போலவே ஹதீஸ்களின் தரம் பிரிக்கும் மிகச் சிறந்த அறிஞர் என்று பல மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட அறிஞர்தான் ஷுஐப் அர்னாஊத்...
இந்த அறிஞரிடம் ஒரு நடுநிலை இருக்கும்.
சரியான கண்ணோட்டம் இருக்கும் யாரையும் சார்ந்து இல்லாமல் ஒரு ஹதீஸை அமானிதமாக கருதி அதில் பலவீனம் மற்றும் உறுதித்தன்மையை மக்களுக்கு எத்தி வைப்பார்...
இஸ்லாமிய வரலாற்றில் ஏராளமான ஹதீஸ் கலை வல்லுனர்கள் வந்துள்ளனர்....
இமாம் இராக்கீ, இமாம் மிஸ்ஸி, இமாம் அய்னீ, இமாம் இப்னு ஹஜர், இமாம் தஹபி ரஹிமஹுமுல்லாஹ்.......
இவர்களில் யாரும் இந்த அளவுக்கு புதுக்கருத்தை கூறியதும் இல்லை, கடுமையான போக்கை கையாண்டதுமில்லை, இவ்வளவு தூரம் தவறு இழைத்து விமர்சிக்கப்பட்டதுமில்லை...
ஆனால் அல்பானி புதுப்புது கொள்கைகளை உருவாக்கி அதற்கு எதிராக வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களையும் மறுக்கக்கூடிய பிடிவாத குணம் கொண்டவராக இருந்தார்...
உதாரணத்திற்கு தராவீஹ் 20 ரக்காத் சஹாபாக்கள் ஏற்படுத்தினார்கள் என்பது சம்பந்தமாக வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களையும் மறுத்தல்....
அனைத்திலும் பலவீனம் பலவீனம் என்று சொல்லி மறுப்பது...
இதில் ஆச்சரியம் என்னவென்றால் சொன்னால் இவர் சொன்ன கருத்துக்களை மக்கா,மதினா உடைய உலமாக்கள் கூட ஏற்று செயல்படுத்தவில்லை!!!!!
அதற்கென்று தனி புத்தகத்தை அவர் எழுதினார் அதற்கு மறுப்பு கொடுத்தும் உலமாக்கள் இவர் பலவீனம் என்று சொன்ன அனைத்தும் பலமானது தான் என்று மறுப்புக்கு புத்தகம் எழுதி நிரூபித்துள்ளார்கள்...
அதேபோல பெண்கள் முகத்தை மறைப்பது சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஸ்கள் அனைத்தையும் பலவீனமானது என்று சொல்லி மறுத்து ஒரு புத்தகம் எழுதினார் அதன் பெயர் ஜில்பாபுல் மர்அதில் முஸ்லிமா...
இந்த புத்தகத்தை மூலமாக வைத்து தான் ததஜ மதத்தவர் பெண்கள் முகத்தை மூடத்தேவையில்லை என்று ஆரம்பத்தில் ஃபத்வா கொடுத்தனர்...
பிறகு அது முத்திப்போய் முகத்தை மூடுவது ஹராம் எனும் அளவுக்கு வந்துவிட்டனர்...
அல்பனி இப்னு தைமிய்யாவுடைய கொள்கையை வேதவாக்காக வைத்துக்கொண்டு இப்னு தைமியாவின் கொள்கையை பாதிக்கக் கூடிய ஹதீஸ்கள் வந்தால் அதை மறுத்து பலவீனமாக்குகிறார்...
அவருக்கு ஆதாரமும் தேவைப்பட்டால் அடி மட்டத்தில் இருக்கும் அறிவிப்பாளரையும் சரியானவர் என்று கூறுகிறார்...
எனக்குத் தெரிந்தவரையில் 30 க்கும் நெருக்கமான கிதாபுகள் அல்பானிக்கு எதிராக எழுதப்பட்டுள்ளன...
எனவே இந்த பஸ்ஸாரில் வரும் ஹதீஸில் அல்பானி நடந்து கொண்டதை நீங்களே பாருங்கள்...
வழக்கம் போல இந்த ஹதீஸை அல்பானியால் தட்ட முடியவில்லை...
தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்...
أن الألباني اعترف بحسن حديث البزار هذا في ضعيفته (2 / 111)
وقفت على إسناد البزار في زوائده ص 303.... قلت: وهذا إسناد حسن كما قالوا....
பஸ்ஸாரில் வரும்இந்த ஹதீஸ் ஹசன் தரத்தை உடையது...
மேலும் கூறுகிறார் பஸ்ஸாரில் வரும் அந்த ஹதீஸ் அதன் ஸனது தொடர் அவர்கள் சொன்னதைப் போல ஹஸன் தான்...
ஸில்ஸிலதுல் அஹாதீஸில் லயீஃபா 2/ 111.
எனவே தன்னுடைய புத்தகத்தில் இதை மறுப்பதற்கு வேறு எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் மேலும் மூத்த அறிஞர்கள் இதை ஹஸன் தரம் உள்ளது என்று சரி கண்டதாலும் மேலும் இந்த ஹதீஸ் உண்மை என்பதை அனுபவ பூர்வமானதாகவும் கூறியுள்ளதால் இதை அவரால் மறுக்க முடியவில்லை..
அதே நேரத்தில் இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இப்னு தைமியா தன்னுடைய அல்கலிமுத் தய்யிபு எனும் துஆக்கள் சம்பந்தப்பட்ட கிதாபில் நிர்பந்தத்தில் மாட்டிக் கொண்ட ஒருவர் ஓதும் துவா என்று இந்த ஹதீஸை கொண்டுவந்து விட்டார்...
என்ன அடிப்படையில் அவர் இதை கொண்டு வந்தது என்று தெரியவில்லை ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இதை அவர் ஏற்றுக்கொண்டார்...
நிர்ப்பந்தத்தில் நெருக்கடியில் இருக்கும் ஒருவன் அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவி செய்யுங்கள் என்ற இந்த ஹதீஸை இப்னு தைமியா ஏற்றுக் கொண்டு விட்டார்...
எனவே இப்பொழுது இதை மறுக்க வேண்டிய நிர்பந்தம் அல்பானிக்கு ஏற்பட்டுவிட்டது...
இப்னு தைமியா உடைய அந்தப் புத்தகத்தின் அடிக்குறிப்பில் அவர் எழுதுகிறார்
இரண்டு விதமான எதிர் வாதங்களை வைக்கிறார்...
இந்த இரண்டு வாதங்களும் அல்பானியின் கொள்கைக்கு எதிரானது...
ஒன்று: இந்த ஹதீஸ் பலவீனம் என்று தன்னுடைய முந்தைய சொல்லுக்கு மாற்றமாக இங்கு கூறுகிறார்...
இரண்டு: இதை இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அவர்கள் வேதக்காரர்கள் இடமிருந்து எடுத்திருப்பார் என்று அபாண்டத்தை இமாம் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு மீது திருப்புகிறார் !!!!
أنه موقوف على ابن عباس رضي الله عنهما بغير أدلة علمية مقبولة،
இது இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் வரக்கூடிய ஏற்றுக் கொள்ளத்தக்க அடிப்படை ஆதாரம் இல்லாத மவ்கூஃப் ஹதீஸ் !!!!!
وتكهن أن ابن عباس ربما أخذ ذلك من أهل الكتاب،
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அவர்கள் இதை வேத காரர்களிடம் இருந்து எடுத்து இருக்கலாம்!!!
அதாவது வேதக்காரர்கள் தெரியாமல் இணை வைத்து கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் வைத்த இணைவைப்பை இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் தெரியாமல் எடுத்து இணைவைப்பு செய்திருக்கிறார்கள்...
அதை மற்ற ஹதீஸ்களை உலமாக்களும் இணைவைப்பு என்று தெரியாமல் இந்த உம்மத்திற்கு சரிகண்டு கொடுத்துள்ளார்கள்...
அதை சரிகண்டு இணைவைப்பு என்று தெரியாமல் இமாம் தப்ரானி அதேபோல உதவி தேடி இணை வைத்து இருக்கிறார்கள்..
இப்னு ஹஜார் ஹைசமீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் இதே போன்று சொல்லி இணை வைத்து இருக்கிறார்கள்..!!!!
இமாம் நவவீ இதே போல காணாமல் போன வாகனத்திற்கு உதவி தேடி இணை வைத்திருக்கிறார்கள்!!!!
இவனுங்கள் மட்டும் யோக்கியனுங்க????
பச்சை தவ்ஹீத்வாதிகள்????
தவ்ஹீத் எது?
ஷிர்க் எது? வசீலா எது? என்று லவ்ஹுல் மஹ்ஃபூல் பலகையில் படித்து பேசுபவர்கள்???
இதுல இவனுங்க சஹாபாக்களை பின்பற்றுகிறார்களாம்???
ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இவர்கள் குத்தும் முத்திரை வேதக்காரர்களிடமிருந்து இந்த இணைவைப்பை எடுத்துக் கொண்டார்!!!
ஒன்று,
முடிந்த அளவுக்கு ஹதீஸை பலவீனமாக்குவது...
முடியாத பட்சத்தில் சஹாபாக்கள் மீது அபாண்டத்தை போடுவது...
இதைத்தான் நாம் ஹவாரிஜ்கள் உடைய பண்பு என்று நாம் கூறுகிறோம்...
சஹாபாக்களையே இணைவைப்பை கற்றுக் கொண்டார் என்று கூறும் இந்த பரதேசிகள் அவர்களை பின்பற்றும் மக்களை பார்த்து என்னவெல்லாம் கூறுவார்கள்???
இவர்கள் செயல்பாட்டில் தான் வேறு வேறாக இருக்கிறார்களே தவிர கொள்கையில் ஒன்றாகத்தான் இருக்கிறார்...
துல் ஹுவைஸிரதுத் தமீமீ என்ற ஹவாரிஜ்களின் தந்தை ஹுனைன் யுத்தத்தில் கிடைத்த பொருட்களை பெருமானார் பங்கு வைத்துக் கொண்டிருந்த பொழுது பெருமானாரையே " நீதமாக நடந்து கொள்ளும் " என்று பெருமானாருக்கு தவ்ஹீது, இறையச்சம் பாடம் எடுத்தான்!!!!
அவன் வாரிசு பிஜே என்ற பரதேசி தன் பயானில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 12 வருடம் அறியாத நுணுக்கமான இணைவைப்பில் இருந்தார்கள், ஒரு யூதன் வந்துதான் தவ்ஹீதை திருத்தி கொடுத்தான் என்று கூறினான்...
இந்த துல் ஹுவைஸிரா, பிஜே ஆகியோரின் கூற்றுக்கும் அல்பானி உடைய கூற்றுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை...
ஹஸரத் இப்னு அப்பாஸ் அவர்கள் ஷிர்க்கான ஹதீஸை கற்றுக் கொண்டார்கள் என்பது போல அல்பானி கூறுகிறார்.....
நேரடியாக இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து இணைவைப்பை தேடி விட்டார் என்று இவர்களால் சொல்ல முடியவில்லை ....
எனவே தெரியாமல் கற்றுக்கொண்டார் என்று சமாளிக்க பார்க்கிறார்கள் !!!!
ஏனெனில் உதவிக்காக அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பது இவர்களைப் பொறுத்தவரைக்கும் இணைவைப்பு தான்!!!
ஏதோ சூனியத்தையும், மந்திர தந்திரங்களையும், நட்சத்திர கலைகளையும் கற்றுக் கொண்டதைப் போன்று குற்றம் சாட்டி இந்த ஹதீஸைத் தட்டப் பார்க்கிறார்!!!!
ஆனால் சலஃபுஸ் ஸாலிஹீன்கள் ஹஜரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னது சரியாகத்தான் கூறி உள்ளார்கள் என்று ஒட்டுமொத்த உலமாக்களும் நம்பியதாக இமாம் பைஹகீ ரஹ்மத்துல்லாஹி அவர்கள் கூறுகிறார்கள் !!!!
قال البيهقي: " هَذَا مَوْقُوفٌ عَلَى ابْنِ عَبَّاسٍ ، مُسْتَعْمَلٌ عِنْدَ الصَّالِحِينَ مِنْ أَهْلِ الْعِلْمِ لِوُجُودِ صِدْقِهِ عِنْدَهُمْ فِيمَا جَرَّبُوا ". انتهى من " الآداب " (ص: 269).
இமாம் பைஹகீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:
இது இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படக்கூடிய மவ்கூஃபான ஹதீஸ் தான்.
கல்வியாளர்களின் ஸாலிஹீன்களிடத்தில் அமல் செய்யப்பட்ட (ஹதீஸாக) இருக்கிறது.
அவர்களிடம் இருக்கக்கூடிய வாய்மையை தங்கள் வாழ்க்கையில் அனுபவமாகக் கொண்டு வந்ததின் காரணமாக (இதை உலமாக்கள் உறுதிப்படுத்துகிறார்கள்)
கிதாபு : அல் ஆதாபு ,
பக்கம் 269.
எனவே ஒட்டு மொத்த சலஃபுஸ் சாலிஹீன்களின் கருத்துக்கு அல்பானி முரண்படுகிறார் !!!!
இவருடைய இந்த கருத்துக்களை சலஃபி உலமாக்கள் கூட ஏற்றுக் கொள்ளவில்லை!!!!
ஸாலிஹ் ஆலுஷ் ஷேஹ் எனும் ஸலஃபீ வேறுவிதமான விளக்கம் தன் குரு நாதருக்கு மாற்றமாக கூறுகிறார் !!!
இதேபோல இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லும் பொழுது உதவி தேடிய சம்பவத்தை அவர்களின் மகனார் அப்துல்லா அவர்கள் தங்கள் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்கள்...
எனவே இந்த இரண்டு விதமான விஷயங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இதை பலவீனமாக்க முடியாமல் அவர்கள் ஒரு கட்டத்தில் இறங்கி வந்து விட்டார்கள்...
استغاثة الإمام أحمد:
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய இஸ்திஹாஸா
روى البيهقي في الشعب وابن عساكر من طريق عبد الله ابن الإمام أحمد،
இமாம் பைஹகீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களுடைய ஷுஃபுல் ஈமானிலும், இப்னு அஸாகிர் அவர்கள் தங்களுடைய தாரீஹிலும் பதிவு செய்துள்ளனர்.
وكذا عبد الله بن الإمام أحمد في المسائل (217)
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய மகனார் அப்துல்லாஹ் அவர்கள் தங்களுடைய அல் மஸாயில் என்ற கிதாபிலும்
சரியான சனது தொடர் என்று அறியப்பட்ட வழியில்
سمعت أبي يقول:
என் தந்தை (அஹ்மத் பின் ஹம்பல்) சொல்ல நான் கேட்டுள்ளேன்...
حججت خمس حجج منها ثنتين راكبا وثلاثة ماشيا،
நான் ஐந்து ஹஜ் பயணம் செய்துள்ளேன். அதில் இரண்டு பயணம் வாகனித்த நிலையிலும் மூன்று பயணம் நடந்தும் சென்றுள்ளேன்.
أو ثنتين ماشيا وثلاثة راكبا،
அல்லது இரண்டு நடந்து நிலையிலும், மூன்று வாகனித்த நிலையிலும்...
فضللت الطريق في حجة وكنت ماشيا
நான் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அதில் ஒரு ஹஜ்ஜில் வழி தவறி விட்டேன்...
فجعلت أقول:
எனவே நான் கூறினேன்
(يا عباد الله دلونا على الطريق)
அல்லாஹ்வின் அடியார்களே எங்களுக்கு பாதையை அறிவித்துக் கொடுங்கள்...
فلم أزل أقول ذلك حتى وقعت على الطريق....
நான் அவ்வாறு சொல்லிக் கொண்டே இருந்த பொழுது கடைசியாக நான் சரியான பாதைக்கு வந்து விட்டேன்...
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய மகன் அப்துல்லாஹ் அவர்களின் புத்தகமாகிய
அல் - மஸாயில் 217
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பார்த்து இவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்????
وذكر هذه القصة أيضا ابن مفلح الحنبلي تلميذ ابن تيمية
كتاب الآداب الشرعية 27
இப்னு தைமியா உடைய மாணவர் இபுனுல் முஃப்லிஹ் ஹம்பலி ரஹிமஹுமுல்லாஹ் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தி தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்....
அல் ஆதாபுஷ் ஷர்யிய்யா,
பக்கம் : 27
தெரிந்தோ தெரியாமலோ இந்த ஹதீஸை இப்னு தைமியா தன்னுடைய புத்தகமான அல் கலிமுத் தய்யிபில் 98 ம் பக்கத்தில் 177 வது ஹதீஸாக
கொண்டு வந்துவிட்டார்.
எனவே நாம் முன்னர் பதிவு செய்த இமாம் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அவர்களுடைய ஹதீஸுக்கும் அதே போல அஹமது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அவர்கள் இவ்வாறு உதவி தேடிய இந்த விஷயத்தையும் சேர்த்து இந்த சலபி விளக்கம் கொடுக்கிறார்...
இவ்வாறு யாரும் அரவமற்ற இடத்தில் உதவி தேடச் சொன்ன அந்த ஹதீஸ் என்பது வானவர்களை தான் குறிக்கும் !!!!
அதாவது அல்லாஹ் அல்லாத இறைநேசர்களிடம் உதவி தேடுவது தான் ஷிர்க் என்பதைப் போலவும் வானவர்களிடம் உதவி தேடினால் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அவர்கள் உதவி செய்வார்கள் என்ற தங்கள் கொள்கைக்கு எதிரான ஒரு கோமாளித்தனமான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்...
இவர் கொடுக்கும் இந்த விளக்கத்திற்கு தன்னுடைய புத்தகமாகிய " இது எங்களுடைய விளக்கம் "
" ஹாதிஹீ மஃபாஹீமுனா " என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டார்...
நல்லா இருக்குப்பா உங்க விளக்கம் !!!
وقال الشيخ صالح آل الشيخ : " الملائكة ، وهم يسمعون مخاطبته لهم ،
அவ்வாறு அவரு உதவி தேடும் பொழுது வானவர்கள் அவருடைய சொல்லை கேட்கிறார்கள்...
ويقدرون على الإجابة بإذن ربهم ؛
அல்லாஹ்வுடைய அனுமதி கொண்டு அதற்கு பதில் அளிப்பது மீது சக்தி பெறுகிறார்கள் !!!!
ஹாதிஹீ மஃபாஹீமுனா ,
பக்கம் 56.
هذه مفاهيمنا (ص: 56)
இதில் மிக மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்று சொன்னால் இந்த புத்தகத்தை எழுதிய சலபி இதை ஏன் எழுதினார் என்றால் அஸ் ஸய்யிது முஹம்மது இப்னு அலவீ அல் மாலிகீ என்ற அறிஞர் வசீலா, தபர்ருக்கு, மற்றும் உதவி தேடுதல் ஆகியவை மார்க்கத்தின் ஆதாரங்கள் என்ற அடிப்படையில் ஒரு புத்தகம் எழுதினார்கள் அதற்கு பெயர் "மஃபாஹீமுன் யஜிபு அன் துஸஹ்ஹஹ".
அதற்கு மறுப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் எழுதப்பட்ட புத்தகம் தான் இந்த ஹாதிஹீ மஃபாஹீமுனா என்ற புத்தகம்...
ஹதீஸ் ஸ்திரமாக நின்றதால் அவர்கள் அடுத்த தாவலுக்கு வந்துவிட்டார்கள்...
எனவே உதவி தேடுதல் என்பது கூடவே கூடாது என்று சொல்லிவிட்டு கடைசியில் அட்லீஸ்ட்
வானவர்களிடம் உதவி தேடுவது இணைவைப்பு இல்லை என்ற அளவிற்கு சலஃபிகள் இறங்கி வந்து விட்டதை நான் பாராட்டத்தக்கதாக பார்க்கிறேன்...
ஏனெனில் இந்தப் போலி தவ்ஹீத்வாதிகளின் கோஷமே அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் நாங்கள் கையேந்த மாட்டோம் என்ற நாடகம் தான்...
ஆனால் யூதர்களிடம், அமெரிக்காவிடமும் டாலர்களை கையேந்தி பிச்சை எடுத்துக் கொள்வார்கள்!!!!
அதுவெல்லாம் இணைவைப்பு ஆகாது !!!!
அதெல்லாம் தவ்ஹீதை சார்ந்தது!!!
ஆனால் இன்று இருக்கும் மன்னன் இப்னு சல்மான் உடைய அடிவருடி சலஃபி கூட்டம் இதையும் தங்கள் குஞ்சுகளுக்கு சொல்லிக் கொடுக்காமல் மறைக்கிறார்கள்...
அதாவது இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் வானவர்களிடமும் நீங்கள் உதவி தேடக் கூடாது அதுவும் ஷிர்க்கு தான் என்று நவீன சலஃபிகளாகிய முஜாஹித் இப்னு ரஸீன், முபாரக் மதனி, அன்ஸார் தப்லீஹி, முர்ஷித் அப்பாஸீ, ஹஸன் அலி உமரீ போன்றோர் கூறிவிடுவார்கள் !!!!!!
வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அதுதான் அவர்களின் கொள்கை....
ஏனெனில் இந்த விஷயங்களை ஆய்வுகளுக்கே அவர்கள் கொண்டு வர மாட்டார்கள்...
இவர்களின் முன்னோடிகளே தெரியாத்தனமாக வந்து மாற்று விளக்கம் கொடுத்து மாட்டிக் கொண்டார்கள்...
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
- இப்னு கபீர்
Comments
Post a Comment