யா ரஸூலல்லாஹ் என்று அழைக்கலாமா?!




யாரசூலல்லாஹ் என்று அழைப்பதின் ஃபத்துவாக்கள்..

யா ரசூலுல்லாஹ் என்று அழைப்பது கூடுமா???

கூடாது என்றால் ஏன் கூடாது???

கூடும் என்றால் எந்த அடிப்படையில் கூடும்???

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போல யாரும் தன்னுடைய சமுதாயத்திற்காக மிகவும் கவலைப்பட்டது கிடையாது...

ஆனால் அவர்கள் கூட இந்த சமுதாயம் ஷிர்க் வைத்து விடும் என்று பயப்படவில்லை...

وإنِّي واللَّهِ ما أخافُ علَيْكُم أنْ تُشْرِكُوابَعْدِي، ولَكِنِّي أخافُ علَيْكُم أنْ تَنافَسُوا فِيها.

அல்லாஹ்வின் மீது ஆணையாக எனக்கு பின்னால் நீங்கள் இணை வைத்து விடுவீர்கள் என்றெல்லாம் நான் அஞ்சவில்லை. மாறாக ஒருவருக்கொருவர் போட்டி போட்டு (பிரித்து விடுவீர்கள் என்பதை அஞ்சுகிறேன்)..

புகாரி 4085

இந்த சமுதாயம் கருத்து வேறுபாடுகளால் தான் வழி கெட்டுப்போகும்...

மாறாக இணைவைப்பை நான் பயப்படவில்லை என்று பெருமானாரே கூறுகிறார்கள்...

ஆனால் இந்த அரைவேக்காடுகள் யாரைப் பார்த்தாலும் அவன் தவ்ஹீதுக்கு மாற்றமாய் இருக்கிறான் என்றும், தாங்கள் முழுநேர பிதுஅத் ஒழிப்பு பணியை செய்து கொண்டு இருக்கிறோம் என்றும் தங்களை காட்டிக் கொள்கிறார்கள்...

நம்முடைய முந்தைய பதிவுகளில் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பாதையை அறிவித்துக் கொடுப்பதற்காக உதவி தேடினார்கள் என்ற ஹதீஸை பதிவு செய்திருந்தோம்...

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய மகனார் அப்துல்லாஹ் அவர்கள் தங்களுடைய அல் மஸாயில் என்ற கிதாபிலும் 

 
சரியான சனது தொடர் என்று அறியப்பட்ட வழியில் 

 سمعت أبي يقول: 

என் தந்தை (அஹ்மத் பின் ஹம்பல்) சொல்ல நான் கேட்டுள்ளேன்...

حججت خمس حجج منها ثنتين راكبا وثلاثة ماشيا،

நான் ஐந்து ஹஜ் பயணம் செய்துள்ளேன். அதில் இரண்டு பயணம் வாகனித்த நிலையிலும் மூன்று பயணம் நடந்தும் சென்றுள்ளேன்.

 أو ثنتين ماشيا وثلاثة راكبا،

அல்லது இரண்டு நடந்து நிலையிலும், மூன்று வாகனித்த நிலையிலும்...

 فضللت الطريق في حجة وكنت ماشيا

நான் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அதில் ஒரு ஹஜ்ஜில் வழி தவறி விட்டேன்...

 فجعلت أقول: 

எனவே நான் கூறினேன்

(يا عباد الله دلونا على الطريق)

அல்லாஹ்வின் அடியார்களே எங்களுக்கு பாதையை அறிவித்துக் கொடுங்கள்...

 فلم أزل أقول ذلك حتى وقعت على الطريق....

நான் அவ்வாறு சொல்லிக் கொண்டே இருந்த பொழுது கடைசியாக நான் சரியான பாதைக்கு வந்து விட்டேன்...

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய மகன் அப்துல்லாஹ் அவர்களின் புத்தகமாகிய
அல் - மஸாயில், பக்கம் 217.

இது சரியான ஹதீஸாக இருப்பதால் திருடனுக்கு தேள் கொட்டியது போன்று இது இவர்களுக்கு உள்ளது...

எனவே மாற்று விளக்கம் கொடுக்கிறோம் என்ற பெயரில் வசமாக மாட்டிக் கொண்டார்கள்...

மேலும் இது வரைக்கும் அஹ்லுஸ் சுன்னாவின் மீது வைத்த அவதூறுகள் அனைத்தும் இவர்களின் பதிலிலேயே தவிடுபொடி ஆகி விட்டது..

وقال الشيخ صالح آل الشيخ :

ஷேஹ் ஸாலிஹ் ( ஸலஃபீ ) கூறுகிறார்:

 " والحديث لا يدل على ما يدعيه المبطلة من سؤال الموتى ونحوهم

வழிகேடர்கள் சொல்வது போல இந்த ஹதீஸ் இறந்தவர்களையோ அது போல் உள்ளவர்களையோ அழைப்பதை பற்றி பேசவில்லை....

 ، بل إنه صريح في أن من يخاطبه ضالُّ الطريق

பாதை தவறிய ஒருவர் சொல்லக் கூடிய ஒரு விஷயத்தைப் பற்றி தெளிவு படுத்துகிறது

 هم : الملائكة ، 

(அழைக்கப்படக்கூடிய) அவர்கள் வானவர்கள் தான்...

وهم يسمعون مخاطبته لهم ، 
அவர்கள் (அழைக்கக்கூடியவர்களின்) சொற்களை கேட்கிறார்கள்...

ويقدرون على الإجابة بإذن ربهم ؛

ரப்பின் அனுமதி கொண்டு அவர்களுக்கு பதில் அளிப்பதன் மீது (அந்த வானவர்கள்) சக்தி பெறுகிறார்கள்....

 لأنهم أحياء ممكَّنون من دلالة الضال ،

ஏனெனில் அவர்கள் உயிருள்ளவர்கள், பாதை தவறியவனுக்கு வழி காட்டும் சக்தி உடையவர்கள்...

 فهم عباد لله ، أحياء يسمعون ، 

(வானவர்கள்) அல்லாஹ்வின் அடியார்கள், மேலும் (எதைச் சொன்னாலும்) கேட்கக்கூடிய உயிருள்ளவர்கள்.

ويجيبون بما أقدرهم عليه ربهم ،

அவர்களின் ரட்சகன் அவர்களுக்கு வல்லமை கொடுத்த அளவுக்கு பதிலளிப்பார்கள்...

 وهو إرشاد ضالي الطريق في الفلاة ، 

பொட்டல் பூமியிலே வழிதவறியவனுக்கு பாதையை காட்டுதல் தான் இது.

(அதாவது இணைவைப்பு இல்லை!!!!!)

ومن استدل بهذه الآثار على نداءِ شخص معين باسمه ،

யார் ஒருவர் ஒரு குறிப்பிட்ட மனிதரின் (வலியுல்லாஹ்வின்) பெயரை அழைப்பதற்காக இந்த ஹதீஸைக் கொண்டு ஆதாரம் பிடிக்கிறாரோ...

(யா முஹியத்தீன் , யா ரிஃபாயீ, யா பதவீ என்பதைப் போல...‌‌......)

 فقد كذب على رسول الله ، 

நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் தூதர் மீது பொய் உறைத்தவராவார்.

(ஏனெனில் இது வலிமார்களை அழைப்பது பற்றி பேசவில்லை).

ஹாதிஹீ மஃபாஹீமுனா ,
பக்கம் 56.

ஷேக் சாலிஹ் ஸலஃபீ என்பவர் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஹதீஸிலிருந்து சொல்ல வருவது....

(1) இமாம் அஹ்மத் அவர்கள் உதவி தேடியது என்பது உண்மை தான் !!!

(2) அவர்கள் வானவர்கள் தான் !!!

(3) அவ்வாறு உதவி தேடுவது இணைவைப்பு இல்லை !!!

(4) அது பாதை தவறியவனக்கு வழிகாட்டுவது தான்!!!

(அதாவது அல்லாஹ்வினுடைய வல்லமை வானவர்களுக்கு கிடையாது, ஜஸ்ட் உதவி மட்டும் தான்!!!!)

(5) மேலும் அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு உதவி செய்கிறார்கள்!!!!!

(6) மேலும் வானவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் !!!!

(7) மேலும் அதற்கு பதிலளிக்கிறார்கள் !!!

இவ்வாறு கூறுகிறார்.
எவ்வளவு ஒரு ஆச்சரியமான தகவல்..

வானவர்களுக்கு இவர்கள் என்னவெல்லாம் சொன்னார்களோ அவை அனைத்தும் நபிமார்களுக்கு கன கச்சிதமாக பொருந்தும்...

எனவே நபிமார்கள் உயிருடன் இருக்கிறார்கள், கேட்கிறார்கள், அழைப்புக்கு பதில் அளிக்கிறார்கள், துஆ செய்கிறார்கள், பாவமன்னிப்புத் தேடினார்கள், ஹஜ் செய்கிறார்கள் என்பதெல்லாம் ஹதீஸில் மிகத் தெளிவாக இருக்கின்றன...

 ஆனால் அதற்குண்டான ஆதாரத்தை நாம் இந்த தலைப்பில் அலசப் போவதில்லை...

இவர்கள் கொடுத்த பதில் எவ்வளவு அபத்தமானது, இவ்வளவு நாள் இவர்கள் செய்த பிரச்சாரத்திற்கு இது எதிரானது, இவர்களின் குருமார்களுக்கே இவர்கள் முரண்படுகிறார்கள் என்பதையே நாம் முன்வைக்கின்றோம்...

மேலும் அல்பானி கூறுவதைப் பாருங்கள்...

ان المراد بقوله في الحديث الأول يا عباد الله انما هم الملائكة

அல்லாஹ்வின் அடியார்களே (என்று உதவி தேடும்) முதலாவது ஹதீஸ் அதன் நோக்கமானது அவர்கள் வானவர்கள் தான்..

 فلا يجوز ان يلحق بهم المسلمون 

எனவே முஸ்லிம்கள் இதை தொடர்பு படுத்தி விடக்கூடாது...

من الجن والانس ممن يسمونهم برجال الغيب من الاولياء والصالحين 

மனிதர்களிலும், ஜின்களிலும் மறைவாக வாழக்கூடிய இறைநேசர்கள் ஸாலிஹீன்களிடம்( உதவியைப் பற்றி பேசவில்லை)

سواء كانوا أحياء او امواتا

அவர்கள் உயிருடனோ அல்லது இறந்து இருந்தாலும் சரியே...

 فان الاستغاثة بهم وطلب العون منهم شرك بين
அவர்களைக் கொண்டு உதவி தேடுவதும் அல்லது அவர்களிடம் ஏதேனும் உதவியை தேடுவதும் தெளிவான ஷிர்க் ஆகும்..

 لأنهم لا يسمعون الدعاء 

ஏனெனில் அவர்கள் அழைப்பை செவிமடுக்க மாட்டார்கள்...

ولو سمعوا لما استطاعوا الاجابة 

ஒருகால் செவிமடுத்தாளும் பதிலளிக்க சக்தி பெற மாட்டார்கள்.‌.

ஸில்ஸிலதுல் அஹாதீஸில் லயீஃபா 2/111. 

அல்பானி இதில் சொல்ல வரும் விஷயம்...

(1) அஹ்மது பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் உதவி தேடியது வானவர்களிடம் தான் !!!

(2) மனிதர்கள் மற்றும் ஜின்களில் உதவி தேடவில்லை !!!

(3) வலிமார்களில் உயிருடன் இருப்பவரிடமோ, மரணித்தவரிடமோ இல்லை !!!

(4) அவர்களிடம் உதவி தேடுவது இணைவைப்பு !!!

(5) அவர்கள் செவியேற்க மாட்டார்கள், செவியேற்றாலும் பதில் அளிக்க மாட்டார்கள்...

இவ்வளவு நாளாக அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுவதை இணைவைப்பு என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தவர்கள் வானவர்களிடம் உதவி தேடுவது இணைவைப்பு இல்லை எனும் அளவிற்கு இறங்கி வந்து விட்டார்கள்...

அப்படி என்றால் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுவது இணைவைப்பு என்று செய்த பொய் பிரச்சாரம் சுக்குநூறாக உடைந்து விட்டது...

 பொத்தாம் பொதுவாக இது ஷிர்க் என கூறி இவ்வளவு நாளாக பொய் பிரச்சாரம் செய்தது உண்மை தானே???

இவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களை உருவாக்கியது பெரும் பாவம் தானே???

உதவி தேடுவதற்கும், துவாவுக்கும் வித்தியாசத்தை சொல்லிக் கொடுக்காமல் இருந்தது ஹதீஸில் செய்த மோசடி தானே???

அல்லாஹ்வின் கட்டளைப்படி ஒருவர் நமக்கு ஒன்றை செய்து கொடுத்தால் அது இணைவைப்பு இல்லை, மாறாக அது அல்லாஹ் செய்த உதவிதான் என்று இப்பொழுது ஒத்துக்கொள்வது நயவஞ்சகம் தானே???

ஒருவரிடம் நாம் உதவி தேடி விட்டாலே அவரை நாம் கடவுளாக ஆக்கி விடுகிறோம் என்று பொய் பிரச்சாரம் செய்வது குர்ஆனின் சட்டத்தில் கை வைப்பது தானே???

ஆனால் திருடனுக்கு தேள் கொட்டியதால் இப்பொழுது வானவர்கள் விஷயத்தில் இவர்கள் இறங்கி வந்து விட்டார்கள்...

காரணம் என்னவாம்?

அவர்கள் உயிருடன் இருக்கிறார்களாம்?

 அல்லாவின் அனுமதி கொண்டு உதவி செய்வார்களாம்?

அதனால் உதவி தேடுவது இணைவைப்பு இல்லையாம்?

சரிப்பா நபிமார்களிடம் உதவி தேடுவதில் உனக்கென்ன வலிக்குது ???

ஏனெனில் அவர்கள் மரணித்து விட்டார்கள் !!!

அவர்கள்தான் மரணிக்கவில்லை, உயிருடன் இருக்கிறார்கள் என்று ஹதீஸில் வருகிறதே???

ஹதீஸில் வந்தாலும் அவர்கள் அழைத்தால் பதிலளிக்க மாட்டார்கள்!!!!

அப்ப வானவர் மட்டும் உனக்கு பதில் அளிப்பாரா ???

ஆமாம், பதிலளிப்பார்..

நபிமார்களிடம் உதவி தேடினால் உனக்கு இணை வைப்பு???

ஆமாம், தெளிவான இணைவைப்பு !!!

அப்படி என்றால் உங்கள் குருநாதரின் சொல்படி நீயே காஃபிர் தான்...

வானவர்களிடம் யார் உதவி தேடுகிறார்களோ அவர்களும் காஃபிர் என்று உன் முப்பாட்டன் கூறியுள்ளான்...

فال ابن تيمية :

இப்னு தைமியா கூறுகிறார்:

فمن جعل الملائكة والأنبياء وسائط

வானவர்களையும் நபிமார்களையும் யார் (அல்லாஹ்வுக்கும், தனக்கும்) மத்தியில் வைத்து

 يدعوهم ويتوكل عليهم

அவர்களை அழைத்து அவர்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்களா...

 ويسألهم جلب المنافع ودفع المضار

நன்மை ஏற்படவும், தீமை விலகிப்போகவும் அவர்களிடம் கேட்கிறார்களோ...

 مثل أن يسألهم غفران الذنب

பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்பதைப் போல...

 وهداية القلوب

உள்ளங்களுக்கு நேர்வழி கிடைக்க வேண்டுமென்று 

 وتفريج الكروب وسد الفاقات

கஷ்டங்களில் இருந்து விடுதலை, வறுமையை தடுத்தல் (ஆகியவற்றை அவர்களிடம் கேட்பது)

 فهو كافر بإجماع المسلمين . "

முஸ்லிம்களின் ஏகோபித்த கருத்தின்படி அவன் காபிர் ஆவான் !!!!

 மஜ்மூஉல் ஃபதாவா ( 1 / 124 ) .

என்னப்பா இது அல்பானிக்கும் ஷேஹ் ஸாலிஹுக்கும், ஸலஃபிகளுக்கும் வந்த சோதனை ????

வானவர்களிடம் ஏதேனும் உதவி தேடுபவன் காபிர்கள் என்று உன் முப்பாட்டன் உனக்கு எதிராக எழுதி வைத்திருக்க வசமாக வந்து மாட்டிக் கொண்டாயே!!!

இப்பொழுதுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன ஹதீஸ் ஞாபகம் வருகிறது...

ஒரு முஸ்லிமைப் பார்த்து ஒருவன் காபிர் என்று சொன்னால் அது உண்மை அல்லாத பட்சத்தில் இவன் காபிராகி விடுவான்...

அஹ்லுஸ் சுன்னா மக்களைப் பார்த்து நீங்கள் காபிர் காபிர் என்று கூறிக் கொண்டு இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் வானவர்கள் விஷயத்தில் சொன்ன கருத்தை எவன் சொல்கிறானோ அவன் காபிர் என்று உங்களின் குருட்டு குருநாதரும் எழுதி வைத்திருக்கிறார்!!!

அவர் எழுதி வைத்ததையும் பார்க்காமல் குருட்டுத்தனமாக நீங்களும் உளறியுள்ளீர்கள்!!!

முஸ்லிம்களை காபிர்கள் என்று நீங்கள் கூறியதற்கு நீங்கள் காபிர்கள் என்று உங்கள் குருவை வைத்தே அல்லாஹ் கூற வைத்துவிட்டான்...

நீங்களும் உங்களின் குருவும் முஸ்லிம்களை காபிர்கள் காபிர்கள் என்று கூறியதன் காரணமாக டிஎன்டிஜே மதத்தவர்களை வைத்து அல்லாஹ் உங்களையும், உங்கள் குருட்டு குருநாதரையும் காபிர்கள் என்று அவர்கள் வாயால் சொல்ல வைத்து விட்டான்...

தர்காவுக்கு போகக்கூடியவன் காபிர் என்று உங்களோடு சேர்த்து டிஎன்டிஜே மதத்தவர்களும் அனைத்து முஸ்லிம்களையும் காபிராக்கி கொண்டிருந்தார்கள்...

பிறகு சூனியத்தை நம்பும் காரணத்தினால் சலஃபிகளையும் சேர்த்து காபிர்கள் என்று உங்களுக்கு ஃபத்வா கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்...

எனவே ஹதீஸில் சொல்லப்பட்ட முஸ்லிமைப் பார்த்து காபிர் என்று சொன்னால் அவனின் பக்கம் காஃபிர் ஃபத்வா திரும்பும் என்பது உண்மையாகிவிட்டது...

டிஎன்டிஜே கூறுவதற்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை...

சூனியக்காரனுக்கு ஆற்றல் இருக்கிறது என்று நம்பினால் அது இணைவைப்பு !!!

இது ததஜ உடைய வாதம்...

வலிமார்கள் ஆற்றல் இருக்கிறது என்று நம்பினால் அது இணைவைப்பு !!!!

இது சலஃபீகள் வாதம்...

ஆனால் சலபிகளிடம் முந்தையது ஈமானைச் சார்ந்தது, பிந்தியது இணைவைப்பை சார்ந்தது!!!

இன்றைய ததஜ விற்கு இரண்டுமே இணைவைப்பை சார்ந்தது !!!

உண்மையான அஹ்லுஸ் ஸுன்னாவின் கொள்கை;

 சூனியக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆற்றலும்,

 அவ்லியாக்களுக்கு அல்லாஹ் கொடுத்த ஆற்றலும்,

 தஜ்ஜாலுக்கு அல்லாஹ் கொடுத்த ஆற்றலும் உண்மைதான்...

இவை அனைத்தும் அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த ஆற்றல்....

இவை அனைத்தும் ஹதீஸ்களில் வருகிறது நாம் நம்புகிறோம்...

யார் உண்மையான சலஃபீ ???

சூனியக்காரன் அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு தீங்கு விளைவிக்கிறான்...

இதை நம்பக்கூடிய நீ முஃமின் என்றால்....

அவன் வைத்த சூனியத்தை அல்லாவின் அனுமதி கொண்டு இறை நேசர்கள் எடுக்கிறார்கள் என்று நம்பும் நான் எப்படி முஷ்ரிக் ஆவேன் !!!!!

இரண்டும் அல்லாஹ்வுடைய ஆற்றல்தான்....

ஒன்று எதிர்மறை...

மற்றொன்று நேர்மறை...

இதில் ஆச்சரியம் என்னவென்றால் எதிர் மறையை நம்புபவன் முஃமினாம் !!!!

நேர்மறை நம்புபவன் முஷ்ரிகாம்!!!!!

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்...

எனவே நாம் முடிவுக்கு வருகிறோம் ஒரே ஒரு ஆதாரத்தை வைத்து...

இமாம் அஹ்மத் அவர்கள் உதவி தேடியது வானவர்களை மட்டும்தான் குறிக்கும்...

அவர்கள் அல்லாது வேறு யாரையும் அழைப்பது அகீதா ரீதியில் இணைவைப்பு இல்லை என்று அவர்களே ஒத்துக் கொண்டார்கள்...

ஏனெனில் அதற்கு உண்டான காரணத்தை அல்பானி கூறும் பொழுது அவர்கள் கேட்க மாட்டார்கள் கேட்டாலும் பதில் அளிக்க மாட்டார்கள் என்று மட்டும் சொல்லி முடித்துவிட்டார்...

மேலும் அல்லாஹ்வின் நல்லடியார்களே என்று மட்டும்தான் கூறுவதற்கு அனுமதி இருக்கிறது குறிப்பிட்ட இறைநேசரின் பெயரை சொல்ல அனுமதி இல்லை என ஷேஹ் ஸாலிஹ் கூறினார்...

ومن استدل بهذه الآثار على نداءِ شخص معين باسمه ،

யார் ஒருவர் ஒரு குறிப்பிட்ட மனிதரின் (வலியுல்லாஹ்வின்) பெயரை அழைப்பதற்காக இந்த ஹதீஸைக் கொண்டு ஆதாரம் பிடிக்கிறாரோ...
(யா முஹியத்தீன் , யா ரிஃபாயீ, யா பதவீ என்பதைப் போல...‌‌......)

فقد كذب على رسول الله ، 

நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் தூதர் மீது பொய் உறைத்தவராவார்.

நாம் அவரிடத்தில் கேட்பது இதுதான்...

நீங்கள் யா முஹ்யத்தீன் என்றோ

யா ரிபாயி என்றோ

யா பதவி என்றோ வலிமார்களின் பெயரை அழைக்க வேண்டாம்...

மாறாக யாரசூலல்லாஹ் 
யா நபியல்லாஹ் 
யா ஹபீபல்லாஹ்
 யா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று அழைக்கிறீர்களா ???

சஹாபாக்கள் அழைத்தால் நீங்களும் அழைப்பீர்களா ???

வலிமார்களுக்கு பதிலாக நபிமார்களை அழைத்து உதவி பெறுவதற்கு மட்டும் அனுமதி இருக்கிறதா???

 சஹாபாக்கள் தங்களுக்கு ஒரு சிக்கல் வரும் பொழுது இவ்வாறு அழைத்திருக்கிறார்களா? அதன்மூலம் பயன்பெற்று இருக்கிறார்களா? என்பதை பார்ப்போம்...

روى الإمام البخاري في كتابه "الأدب المفرد"

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களுடைய அல் அதபுல் முஃப்ரத் எனும் கிதாபில் பதிவு செய்திருக்கிறார்கள்...

 تحت باب ما يقول الرجل إذا خدرت رجله:

ஒரு மனிதர் அவருடைய கால் மரத்துப் போய் விட்டால் என்ன ஓதவேண்டும் என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள்..

 قال حدثنا أبو نعيم قال حدثنا سفيان عن أبي إسحاق عن عبد الرحمن بن سعد قال: خدرت رجل ابن عمر

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கால் (நரம்பு நோயால்) மரத்துப் போய்விட்டது...

 فقال له رجل: اذكر أحب الناس إليك

எனவே வந்தவர் கூறினார் (அப்துர் ரஹ்மான் இப்னு சஃது);

 உங்களுக்கு மக்களிலேயே மிகவும் நேசத்திற்குரியவரை அழையுங்கள்....

 فقال: يا محمد. 

எனவே (இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்)
 கூறினார்கள்;

 யா முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

அறிவிப்பாளர்களின் தொடரில் இந்த ஹதீஸ் வந்துள்ளது...

1) இந்த விஷயத்தை உறுதிப்படுத்தி அல் ஹாபிள் சம்சுதீன் சஹாவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:

وهذا الحافظ شمس الدين السخاوي من أهل القرن التاسع الهجري أثبت في كتابه "القول البديع في الصلاة على النبي الشفيع"

அல் கவ்லுல் பதீஉ ஃபிஸ் ஸலாத்தி அலந் நபிய்யிஷ் ஷஃபீஃ எனும் நூலில்...

"، فقال ما نصه: "وللبخاري في الأدب المفرد من طريق عبد الرحمن بن سعد قال: خدرت رجل ابن عمر فقال له رجل : اذكر أحب الناس إليك فقال: يا محمد" 

அப்துர் ரஹ்மான் இப்னு ஸஃது அவர்களின் வழியாக வரும் அறிவிப்பை உறுதிப்படுத்தி கூறுகிறார்கள்....

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வருகிறது அதற்கான முழு விபரமும் தேவைப்படும்போது இன்ஷா அல்லாஹ் நாம் வெளியிடுவோம்...

ஏனெனில் இதை மறுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் இப்போதைக்கு நாம் வெளியிடவில்லை...

 சலபிகளின் இமாம் என்று சொல்லக்கூடிய இப்ராஹிம் அல் ஹர்பி ரஹிமஹுல்லாஹ் இந்த ஹதீசை ஹரீபுல் ஹதீஸ் என்றகிதாபில் கொண்டு வருகிறார்கள்.

அதில் கூடுதல் வார்த்தையையும் இடம்பெற்றுள்ளது...

فقلت: ما لرجلك؟ قال : اجتمع عصبها قلت: ادع أحب الناس إليك قال : يا محمد، فبسطها.

உங்கள் காலுக்கு என்ன ஆனது என்று கேட்கப்பட்ட பொழுது நரம்புகள் சுருண்டு விட்டன என்று இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்...

எனவே யா முஹம்மத் என்று கூறினார்கள். (உடனே தனது காலை) நீட்டி விட்டார்கள்...

உடனடி மருத்துவம் கிடைத்திருக்கிறது!!!!!

இமாம் இப்னு ஸின்னீ தன்னுடைய அமலுல் யவ்மி வல்லய்லாவில் ஒரு மனிதனுக்கு கால் மரத்துப் போய் விட்டால் என்ன ஓதுவது என்ற தலைப்பின் கீழ் புஹாரியில் வராத வேறு அறிவிப்பை கொண்டு வருகிறார்கள்...
 
فقال:يا محمداه، فقام فمشى.

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்;

 "யா முஹம்மதாஹ்"  

எனவே (அவ்வாறு கூறியதன் காரணமாக)
 எழுந்து உடனே நடக்க ஆரம்பித்து விட்டார்கள்..

அதே கிதாபில் அபூ இஸ்ஹாகை தொட்டும் இஸ்ராயீல் அறிவிக்கும் ஹதீஸ்

فقال :يا محمد، فقام فكأنما نشط من عقال.

யா முஹம்மது என்று கூறினார்கள்,

கயிற்றின் (முடிச்சுலிருந்து) அவிழ்க்க பட்டதைப் போல எழுந்து நின்றார்கள்.

பின்னால் வந்த அல்பானி எப்படியும் இதன் தரத்தை தட்ட பார்ப்பார் என்று முன் கூட்டியே நம்முடைய உலமாக்கள் இதன் தரத்தை நமக்கு கூறிவிட்டார்கள்...

ثم بين الإمام الحربي أن الذي سمع من ابن عمر هو عبد الرحمن بن سعد الثقة

இரண்டாம் அஹ்மது இப்னு ஹன்பல் என்று அழைக்கப்படும் ஹாபிழ் அல் ஹர்பீ கூறுகிறார்கள்;

 இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிப்பவர் உறுதியான அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் இப்னு ஸஃது தான்...

எனவே இந்த ஹீதிசை சரி காண்பவர்கள் அனைவரும் சாதாரணமானவர்கள் அல்ல..

ஹதீஸ் கலை ஜாம்பவான்கள்...

இமாம் மிஸ்ஸீ, இமாம் ஸஹாவீ, இமாம் அல் ஹர்பீ, இமாம் நவவீ, இமாம் புகாரி, இமாம் இப்னு ஸின்னீ.......

இதுவே அல்லாஹுவின் அருளால் போதுமான ஆதாரம்...

இவ்வளவு அறிஞர்களையும் கூற்றையும் மீறி இவர்கள் இதை வெறிபிடித்து பலவீனம் ஆக்குவதற்கு முயற்சி செய்வார்கள் என்று சொன்னால் அது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை...

எனவே அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் உடைய கொள்கையின்படி ஹதீஸ் கலை வல்லுனர்கள் இந்த ஹதீசுக்கு என்ன தலைப்பு கொடுத்து இருக்கிறார்கள் என்பதை பார்த்தால் போதும் இந்த ஹதீஸ் அனைத்து அறிஞர்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று...

ما يقول الرجل إذا خدرت رجله

ஒரு மனிதனுடைய கால் மரத்துப் போய் விட்டால் அவன் என்ன துவா ஓத வேண்டும்???

இந்த தலைப்பை இட்டது யார் தெரியுமா???

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களுடைய அல் அதபுல் முஃப்ரத் என்ற கிதாபில்...

இமாம் நவவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களுடைய அல் அதுகார் என்ற கிதாபில்....

இமாம் இப்னு ஸின்னீ அமலுல் யவ்மி வல்லய்லா எனும் கிதாபில்...

ஹாபிழ் அல் ஹர்பீ தங்களுடைய ஹரீபுல் ஹதீஸ் என்றகிதாபில்...

இமாம் ஜஸுரீ தங்களுடைய இத்ததுல் ஹிஸ்னுல் ஹஸீனில்...

இவர்கள் அனைவரும் காபிழ்கள்.

பொதுவாக இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு ஹதீஸைக் கொண்டு வந்தாலே ஏகோபித்த உலமாக்கள் அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்...

இதில் இரண்டாம் கட்ட உறுதி என்னவென்றால் இமாம் புகாரி இதற்கு கூடுதலாக தலைப்பும் சேர்த்துள்ளார்கள்...

அதாவது ஒரு மனிதருக்கு கால் மரத்துப் போய் விட்டால் அவர் இவ்வாறு அழைக்கட்டும்...

கால் மரத்துப் போய் விட்டால் யா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறவேண்டும் என்று இத்தனை உலமாக்களும் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்...

இந்த துவாவை ஒரு தடவையாக ஜும்ஆ பயானிலோ, அல்லது தங்களுடைய தர்பியா கிளாஸிலோ இவர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா?

ஒரு மனிதனுக்கு ஒரு இடத்தில் வலி ஏற்பட்டு விட்டால் அந்த இடத்தில் கை வைத்து மூன்று தடவை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று சொல்லிவிட்டு 

اعوذ بعزة الله وقدرته من شر ما اجد واحاذر
 
என்று ஒருவர் ஏழு தடவை கூறினால் அவருக்கு வலி போய்விடும்...

இப்னுமாஜா, திர்மிதீ, அஹ்மத்,இப்னுஹிப்பான்....

உடலில் எங்கேனும் வலி ஏற்பட்டால் ஓதும் துவா

என்ற தலைப்பின் கீழ் இந்த ஹதீஸ் எல்லா ஹதீஸ் கிதாபுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது...

அதேபோலத்தான் ஒரு மனிதனின் கால் மரத்துப் போய் விட்டால் யா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று அழைக்க வேண்டும் என்றும் எல்லா கிதாபுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது...

நாயகத்தின் பெயரை நேரடியாகக் கூறுவது கண்ணீர் குறைவு என் பதன் காரணமாகத்தான் நம்முடைய உலமாக்கள் அவர்களின் பெயரைச் சொல்வதற்குப் பதிலாக 

யா ரசூலல்லாஹ் !
 யா ஹபிபல்லா !
யா நபிய்யல்லாஹ் !

என்று அழைக்கிறோம்....

நாம் அல்லாஹ்விடம் உதவி தேடி வலிக்கு மருத்துவம் தேடிக்கொள்வதும் சொல்லப்பட்டுள்ளது...

பெருமானார் காலத்தில் யாரேனும் ஒருவருக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டால் அவர் நபியிடம் சென்று அவர்களை அழைப்பார்கள்,
 பிறகு அவர்களிடம் துஆ செய்யச் சொல்வார்கள் உடனே அவருக்கு அந்த நோய் சரியாகிவிடும்...

அதே விஷயம் தான் இந்த ஹதீஸில் கூறப்பட்டு இருக்கிறது...

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அருகில் இருக்கும் அப்துர்ரஹ்மான் எனும் தாபியி உங்களுக்கு வலி ஏற்பட்டால் உங்களின் நேசரை அழையுங்கள் என்று கூறுகிறார்கள். அதேபோல் அவர்கள் அவர்களின் துவா பரக்கத்தை நாடி யா முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்று அழைக்கிறார்கள்.
 எனவே உடனடியாக நோய் நிவாரணம் கிடைத்து விட்டது.

 அவர்களுடைய கால் சரியாகி விட்டது, அவர்கள் எழுந்து விட்டார்கள், நடக்க ஆரம்பித்தார்கள், கட்டப்பட்ட கயிற்றிலிருந்து அவிழ்க்கப்பட்டதைப் போன்று துள்ளி எழுந்தார்கள் என்று இத்தனை விஷயங்களும் ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது...

இதுவே ஸஹாபாக்களின் புரிந்துணர்வு, தாபியீன்களும் அவர்களைத் தொடர்ந்த இமாம்கள், ஸாலிஹீன்கள், இறைநேசர்கள் அனைவரின் நம்பிக்கையும் இவ்வாறு தான் இருந்தது இப்னு தைமியா வரும்வரைக்கும்....

"நாங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் தாங்களுடைய ஜீவியத்தில் எடுத்துக்காட்டப்படுவது போன்றே தாங்கள் மறைவுக்குப் பிறகும் (கப்ரிலும்) காட்டப்படுமா? என்று சில ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள், "ஒருவர் என் மீது
ஸலவாத் ஓதினால் அவர் ஓதி
முடிக்கின்றவரை அவருடைய ஸலவாத்துக்கள் ஒன்று விடாமல்
என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன என்று கூறியதுடன், "நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது" என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர் :- அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1706

எனவேதான் பெருமானாரின் துவா பரக்கத் என்பது அவர்களின் மரணத்திற்குப் பின்னாலும் தொடரும் என்பது சுன்னத்துவல் ஜமாஅத் உடைய நம்பிக்கை

فَبِاَىِّ حَدِيْثٍ بَعْدَهٗ يُؤْمِنُوْنَ 

எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?

(அல்குர்ஆன் : 77:50)

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

                                 - இப்னு கபீர்.

Comments