கிலாபத் சாத்தியமா????
கிலாஃபத்தை கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்படுபவர்களா நீங்கள்???
மீண்டும் இஸ்லாமிய ஆட்சி வர வேண்டும் என்று ஆசைப்படுபவர்களா நீங்கள்???
முஸ்லிம்கள் பயன் அளிக்கப்பட வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள்???
இன்ஷா அல்லாஹ் நம்மால் இப்போதைக்கு என்ன முடியும் என்று பார்க்கலாம்...
நம்மால் முடிந்த ஒரு சிறிய பங்களிப்பை இந்த சமுதாயத்தில் செயல்படுத்தலாம்...
முழு ஆட்சியையும் உலகம் முழுக்க நாங்களே கொண்டுவந்து விடுவோம் என்ற சாத்தியமின்மையை விட்டுவிட்டு, மன முரண்பாடுகளைத் தவிர்த்து விட்டு, இயக்க வெறிகளை நீக்கிவிட்டு இந்த மார்க்கம் மூலமாக முஸ்லிம்களுக்கு பயனளிக்கும் விஷயங்களை செயல்படுத்தும் விதமாக முதல் எட்டு வைக்கலாம்...
கிலாஃபத் என்றால் என்ன???
அல்லாஹ்வுடைய அவனுடைய தூதருடைய, நேர்வழி பெற்ற கலீபாக்களின் ஒரு அழகிய ஆட்சி முறை...
இன்று இந்த ஒருஆட்சிக்குத் தான் உலகமே ஏங்கி கிடக்கிறது...
ஆனால் பலஸ்தீனம் வீழ்ந்து விட்டால் அது இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வரும்வரைக்கும் சாத்தியமாகாது என்று தீட்சண்யமாக அன்றே உலமாக்கள் கூறிவிட்டார்கள்...
அதற்காக முயற்சி செய்யக்கூடிய ஒரு குறிப்பிட்ட சாராரை தடை செய்யவில்லை.
மாறாக வரம்பு மீற வேண்டாம் என்று கூறினார்கள்...
மேலும் கூடுதல் செய்தியையும் முன்வைத்தார்கள்.
நீ முயற்சி செய்தாலும் கொலையில் தான் முடியும், தோல்வியில்தான் முடியும்.
இதன் இறுதி முடிவு இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான்...
ஏனெனில் முன்னறிவிப்பின் ஹதீஸ்கள் அதைத்தான் கூறுகின்றன.
எனவே கிலாபத் உடைய சிறு சிறு அம்சங்களை நம்மால் செய்ய முடியும்.
கிலாபத் என்ற ஒரு மலையை உடைத்து விட்டார்கள். உடைந்த மழையை ஒட்ட வைப்பது சாத்தியமில்லை என்றாலும் அதில் சிறு சிறு பகுதிகளை நாம் செயல்படுத்தலாம்.
உலக ஆட்சியை தரக்கூடியவர்கள் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களும், ஹஜ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஆகிய இருவரும்தான்...
இந்த பாரிய பொறுப்பை அல்லாஹ்வின் அருளால் அவர்கள் செய்து முடிப்பார்கள். அவர்கள் வரும் வரைக்கும் நாம் இவ்வளவு பெரிய முழு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது...
ஆனால் நம்மால் முடிந்த அளவிற்கு இந்த கிலாஃபாவிற்கு உதவி செய்யலாம்...
சரியான அகீதாவில் வருவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.
மனத்தூய்மையுடன் கூடி எந்த ஒரு சிறு காரியத்தையும் செய்ய வேண்டும்...
ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் , குறிப்பாக முஸ்லிம்களுக்கு...
இந்த கிலாபத் எனும் ஆட்சியை அதன் பங்குகளை மூன்று வகையாக பிரிக்கலாம்...
1. அரசியல் சாசன சட்டங்கள்.
2. குற்றவியல் சட்டங்கள்.
3. பொருளாதாரவியல்.
மற்ற அநேக காரியங்கள் அனைத்தும் இந்த இஸ்லாமிய ஆட்சியில் இருந்தாலும் இந்த மூன்றும்தான் அடிப்படை தூண்கள்.
மற்றவைகள் கிளை சட்டங்களாக வரும். ஒரு இஸ்லாத்தின் ஜனாதிபதி மற்ற காரியங்களையும் பொறுப்பேற்பார் அவரின் அத்தியாவசியமான அடிப்படை தூண்களாக இந்த மூன்று காரியங்களும் இருக்கும்...
முதலாவது அரசியல் சாசனச் சட்டம்...
இதற்குப் பகரமாக தான் சோஷியலிசம், கம்யூனிசம், சியோனிசம், செக்யூலரிஸம், ஜி-8 இது போன்ற ஏராளமான கொள்கை கூட்டமைப்புகள் உலகில் தோன்றி ஒவ்வொன்றும் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றன...
இவைகளை விட்டு ஒரு தனி மனிதனும், எந்த ஒரு நாடும் பிரிந்து விட முடியாத அளவில் முழுமையான கண்ட்ரோலில் வந்துவிட்டார்கள்...
ஹதீஸின் அடிப்படையில் ஹஸ்ரத் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை மிக நெருங்கி விட்டது அல்லாஹ்வே மிக அறிந்தவன்...
قال ابن العربي رحمه الله: كذب الوقاتون
மேலும் இப்னுல் அரபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அவர்கள் கூறுகிறார்கள்:
மஹ்தீ அலைஹிமஸ்ஸலாம் அவர்கள் இப்பொழுது தான் வருவார்கள் என்று திட்டவட்டமாக நேரம் குறிப்பிட்டு கூறுபவர்கள் பொய்யர்கள் ஆவார்கள்.
எனவே நாம் பேணுதலை கடைபிடித்து மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிக விரைவில் வரக்கூடும் என்று கூறுகிறோம்...
எனவே அரசியலமைப்பை நம்மால் மாற்ற முடியாது.
அவ்வாறு மாற்ற நினைத்தால் சிமி போன்ற அமைப்புகளை போன்று முஸ்லிம்களின் ரத்தம் ஓட்டப்பட்டு தீவிரவாத கும்பல்களாக சித்தரிக்கப்படும்.
(இதில் போலியான நிறைய அமெரிக்க கிலாஃபா கூட்டங்களும் உருவாகி இருக்கின்றன.
தாலிபான், லஷ்கரே தய்பா, ஐஎஸ்ஐஎஸ் போன்றவை....)
இரண்டாவது குற்றவியல் பிரிவு.
இஸ்லாமிய அரசியல் சாசன சட்டப்பிரிவு இல்லாமல் இதை செயல்படுத்த முடியாது.
மேலும் இந்திய அரசியல் சட்டம் நம் மார்க்கத்தில் சிவில் சட்டங்களாகிய திருமணம், தலாக், வாரிசுரிமை, ஜமாஅத் கூட்டமைப்பு போன்றவற்றிற்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது.
எனவே அதை மட்டும் தான் நாம் இந்த நாட்டில் செயல்படுத்த முடியும்.
மாறாக இஸ்லாமிய குற்றவியல் தண்டனைச் சட்டங்களை திருட்டு, விபச்சாரம், கொலை போன்றவற்றிற்கு கொடுக்க முடியாது...
இவ்வாறு வாழ்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதும் கிடையாது.
ஏனெனில் நமக்கு மார்க்கம் இரண்டு விஷயங்களைச் சொல்லித் தருகிறது.
இஸ்லாமிய நாட்டில் வாழும் முஸ்லிமின் கடமைகள் என்ன??? இஸ்லாமிய நாடு அல்லாத நாட்டில் வாழும் ஒரு முஸ்லிமின் கடமைகள் என்ன???
இஸ்லாமிய ஆட்சியின் கீழ் உள்ள நாட்டுக்கு தாருல் இஸ்லாம் என்று சொல்வார்கள்.
இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இல்லாத நாட்டுக்கு தாருல் ஹர்ப் என்று சொல்வார்கள்.
தாருல் ஹர்பில் வாழும் ஒரு முஸ்லிமின் சட்டங்கள் பற்றி இமாம் அபூ ஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஏராளமான சட்டங்களை கூறியுள்ளார்கள்.
எனவே தாருல் ஹர்பின் கீழ் வாழ்பவர் அந்த நாட்டுக்கு விசுவாசமாக இருப்பதும், அந்த நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சூழ்நிலைகளில் ஈடுபடாமல் இருப்பதும், ஷாமின் ஆட்சியை நாங்கள் பிடிக்க போகிறோம் என்று ஐஎஸ்ஐஎஸ் செய்யக்கூடிய கொலை வெறியாட்டங்களை போன்று ஈடுபடாமல் இருப்பதும் முக்கியமாகும்.
அந்த நாட்டின் கீழ் ஆட்சிக்கு உட்பட்ட அரசாங்கப் பணிகளை செய்வதில் எந்த விதமான தடையும் கிடையாது.
இதை தவறு என்று சொல்வது வழிகேடு.
மார்க்கத்தின் வெளிப்படையான நஸ்ஸு எனும் தெளிந்த வசனங்களும், சட்டங்களும் இதை எந்த விதத்திலும் தடுக்கவில்லை...
அதே நேரத்தில் குறிப்பிட்ட சில அரசாங்கப் பணிகளை செய்யவில்லை என்றால் இந்த உம்மத்திற்கே பெறும் அழிவு ஏற்பட்டுவிடும் என்று இருந்தால் அந்த பொறுப்பை ஒரு குறிப்பிட்ட சாரார் கையில் எடுப்பது வாஜிபு...
ராணுவ தளத்தில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் முழுக்க முழுக்க பாசிச வாதிகள் ராணுவத்தை ஆக்கிரமித்து இந்த நாட்டையே ஹிட்லரைப் போல் ராணுவ ஆட்சியாக மாற்றி விடுவார்கள் என்ற அச்சம் இருக்கும் பட்சத்தில் முஸ்லிம்களில் ஒரு சாரார் ராணுவத்தின் பங்கேற்ப்பது கட்டாயமாகி விடும்...
அப்படி பங்கும் இல்லை என்று சொன்னால் அந்த ராணுவ தளங்களில் பணிபுரிவது மார்க்கத்தில் ஜாயிஸ் எனும் அனுமதிக்கப்பட்ட காரியம் தான்...
எனவேதான் மன்னராட்சியின் கீழ் ராணுவத் தளபதிகள் ஆக எத்தனையோ முஸ்லிம் அறிஞர்கள் இருந்திருக்கின்றனர்...
முஸ்லிம் மன்னர்களின் கீழ் எத்தனையோ இந்து தளபதிகள் பணி புரிந்திருக்கின்றனர்...
இதுவரை வாழ்ந்த எந்த அறிஞர்களும் இதை மார்க்கத்தில் தடுக்கப்பட்டது இறைநிராகரிப்பு, நயவஞ்சகம் என்று கூறவில்லை.
தாருல் ஹர்பில் அரசாங்கப் பணிகளில் பங்கேற்பதை குப்ரு மற்றும் நயவஞ்சகம் எனும் அளவிற்கு கொண்டு செல்பவர்கள் சையது குதுபு போன்ற அரசியலில் extremism பேசும் நவீனவாதிகளே....
இந்தியாவில் இருக்கும் பல்வேறுபட்ட இன மக்களுக்கு இன்று தேவையான இட ஒதுக்கீடு கிடைக்காமல் இருப்பதற்கு மிகப்பெரிய காரணம் இந்த பிராமணர்கள் மிக உயர்ந்த பதவியில் வைத்துக்கொண்டு கீழ் இருக்கும் மக்களை சுரண்டுவது தான் காரணம்...
எனவே ஒரு முஸ்லிம் என்பவன் இஸ்லாமிய ஆட்சி மலரும் வரைக்கும் காத்து கொண்டு இருந்து தான் வாழும் சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் மடையன் அல்ல...
இப்பொழுது அந்த நிலைமை தானே நம் நாட்டில் நிலவுகிறது...
அப்படி ஆட்சிக்கு உண்டான வாய்ப்பு இருந்தால் அதை மிகவும் முக்கியமாக செயல்படுத்தவும் செய்வான்...
அது அல்லாத பட்சத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்காக இருக்கக்கூடிய சூழ்நிலையில் எந்த ஒரு உயர்ந்த பதவி இருக்கிறதோ அது மார்க்கம் தடுக்காத வகையில் அதில் பணிபுரிந்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யக்கூடியவனாகவும், பிராமணர்கள் போன்ற மக்களை ஒடுக்கி இரத்தம் குடிக்கும் விஷக்கிருமிகளை விடும் மக்களை பாதுகாப்பவர்களாகவும் முஸ்லிம்கள் இருப்பார்கள்.
எனவே நாம் வாழும் இந்த இந்திய நாடு பெருமானார் காலத்திலிருந்து கூட இஸ்லாமிய நாடாக மாற வில்லை...
அதற்குப் பின் இத்தனை ஆண்டு மாறவில்லை.
ஈஸா நபியின் வருகைக்குப் பின் உலகமே இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வரும் போது இதுவும் வந்துவிடும்.
ஆனால் இந்த நாட்டைப் பற்றி பல இடங்களில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிறப்பித்துக் கூறி இருக்கிறார்கள்...
ஜய்ஷுல் ஹின்து எனும் இந்தியப்படை சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஸ் மிகவும் பிரபல்யமானது.
இந்தியாவில் ஒரு படை தோன்றும் அந்த படையானது இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகைக்குப் பின்னால் உதவி செய்வதற்காக இங்கிருந்து புறப்பட்டு செல்லும் அது கடைசியில் ஹஜ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்திக்கும் என்ற செய்தியும் சொல்லப்பட்டுள்ளது...
எனவே நாம் வாழும் இந்த பல்வேறுபட்ட மதங்கள் வாழும் நாட்டில் ஜனநாயக ஆட்சி ஒரு தவறானதாக இருந்தாலும், அது மார்க்கம் போதிக்காததாக இருந்தாலும் நாம் ஏற்கனவே இருந்த பெரும் இழப்பாக கிலாஃபத்தை விட்டுவிட்டதால் இதையும் இழுந்துவிட முடியாது...
எனவே புத்திசாலி என்பவன் தன்னையும் தன் இனத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் பாதுகாக்கும் விதமாக அந்த நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்கு உதவி செய்யும் விதமாக உயர் பணிகளில் வகிக்கலாம்...
இந்த நாட்டிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்..
இதன் ராணுவ ரகசியங்களை நாம் அந்நிய நாடுகளுக்கு சொல்வதின் மூலமாக இந்த இந்திய நாட்டு மக்களுக்கு ஒரு பேரழிவு வரும் என்று சொன்னால் அவன் மார்க்கத்தின் அடிப்படையில் மிகப்பெரும் நயவஞ்சகன் ஆவான்....
எனவே கிலாபத்தின் முக்கிய மூன்று அம்சங்களில் அரசியல் சாசன சட்டமும் குற்றவியல் பிரிவு நம்மால் இப்போதைக்கு செயல்படுத்த முடியாது என்பது மிகவும் முக்கியமான விஷயம் நாம் அறிந்த விஷயமும்...
ஆனால் மூன்றாவதாக இருக்கும் பொருளாதாரவியல் என்ற இந்தக் கொள்கையை நாம் முழுவதுமாக செயல்படுத்த முடியவில்லை என்றாலும் கூட நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஸஹாபாக்கள், இமாம்கள் காட்டித்தந்த வழிமுறையில் ஜக்காத் எனும் எக்கனாமிக் பவரை நாம் ஜமாஅத் மூலமாக செயல்படுத்த முடியும்...
எனவே யாரெல்லாம் எங்களுக்கு கிலாபத்து வேண்டும் என்று சொல்கிறார்களோ. அவர்களுக்கு நாம் சொல்லக்கூடிய மிகப்பெரிய அறிவுரை இதுதான்...
கிலாபத்தின் மூன்றில் ஒரு பகுதியான பொருளாதாரவியலை நீங்கள் செயல்படுத்தி காட்டுங்கள்...
அதாவது பைத்துல்மால்...
ஒட்டு மொத்த பணமும் ஒரே இடத்தில் குவிய கூடிய ஒரு சிஸ்டம்...
இஸ்லாம் சொல்லக்கூடிய அனைத்து விதமான பொருளாதாரவியல் நம்மால் வர முடியாவிட்டாலும் கூட...
உதாரணத்திற்கு சுரங்கங்கள் பற்றி மார்க்கம் கூறுகிறது.
சுரங்கத்தில் இருந்து கிடைக்கும் தங்கம், வெள்ளி, வைரம் போன்ற உயர்ரக பொருட்களில் ஒரு பகுதியை அந்த நாட்டின் கலீபாவுக்கு ஒதுக்க வேண்டும்...
தங்கம் வெள்ளி போன்ற உயர்ரக பொருட்கள் நாணயங்களாக பயன்படுத்தப்படுவது...
மிக மிக முக்கியமான ஒரு அம்சம்மாகிய பண்டமாற்று முறை...
இந்த பொருளாதாரவியல் நம்மிடத்தில் கொண்டுவருவது சட்டப்படி குற்றம் என்ற அடிப்படையில் வந்துவிட்டது...
எனவே அதன் ஒரு பகுதியான பைத்துல்மால் அமைப்பை நம் ஜமாஅத் நிர்வாகம் கையாண்டு வருகிறது...
எனவே பைத்துல்மாலுக்கு உயிரோட்டம் கொடுப்பது கிலாபத்தின் ஒரு பகுதியை உயிர்ப்பிப்பது ஆகும்.
நம்மால் அரசியலில் மக்களை ஒன்று சேர்க்க முடியாது...
அரசியல் பலம் இருந்தால்தான் தண்டனைச் சட்டங்கள் வரும் அதுவும் சாத்தியமில்லை...
ஆனால் பொருளாதாரத்தை வைத்து இப்பொழுது நம்முடைய சமுதாயத்தின் ஏழ்மையை போக்க முடியும்...
இஸ்லாத்தின் பல சங்கிலிகள் ஒன்று ஒன்றாக உடைந்துவிட்டது அதில் முதலாவது சங்கிலி கிலாபத்.
எனவே ஒரு சில சங்கிலிகளையாவது நம்மால் முடிந்த அளவுக்கு பாதுகாக்கலாம்.
மேலும் இன்றைய சூழ்நிலையில் லாக் டவுனில் இருக்கும் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்...
இந்த இளைஞர்கள் எல்லாம் ஏதேனும் ஒன்றை சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் இதை சாதித்து காட்டவும்...
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்திலும், நான்கு கலீபாக்களின் காலத்திலும் இந்த பணம் குவியும் சிஸ்டம் ஆனது மிகவும் கண்காணிக்கப்பட்டு வந்தது...
எனவே தான் இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:
ஜகாத் பணத்தை உள்ளூர்வாசிகளுக்கு கொடுத்து முடிக்காமல் வெளியூருக்கு கொடுப்பதென்பது கூடாது என்று சட்டம் இயற்றினார்கள்.
நம் இந்திய நாட்டிலே நாம் இஸ்லாமிய ஆட்சியின் வாசனையை நுகர விட்டாலும்கூட பைத்துல்மாலின் பலன்களை பல வருடங்களாக நாம் அனுபவித்திருந்தோம்...
ஆனால் கடந்த 40 வருடங்களாக வஹாபிய சூழ்ச்சியின் காரணமாக அந்த பொருளாதாரக் கொள்கை சின்னாபின்னமாக சிதறிக் கிடக்கிறது....
பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து இவர்கள் சூழ்ச்சி செய்தால் வெளிப்படையாக தெரிந்து விடும் என்பதற்காக கொள்கைகளை அடிப்படையாக வைத்து இந்தப் பிரச்சாரம் தீவிரமாக கையாளப்பட்டது.
அதன்பிறகுதான் தமிழகத்தில் குறிப்பாக பல்வேறுபட்ட பிரிவுகள் தோன்றி விட்டன...
தலைமைப் பதவிகளை விரும்பக்கூடிய, தனக்கு பின்னால் ஆள் சேரவேண்டும் என்று அகம்பாவம் கொள்ளக்கூடிய, மக்களின் ஜக்காத் எனும் டாக்ஸ் பணத்தை தன் சுய லாபத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று விரும்பு கூடிய ஒவ்வொரு துரோகிகளாலும் இன்னும் பல கூட்டங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும்.
துரோகிகள் எவ்வளவுக்கு எவ்வளவு புதிதாக உருவாகுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு புதுப்புது பிரிவுகள் வரும்...
இவர்கள் சொல்வது என்னவென்றால் ஒவ்வொரு பிரிவினரும் மக்களுக்கு நன்மை தானே செய்கிறார்கள்???
நல்ல தொண்டு தானே இவர்கள் புரிகிறார்கள்???
ஆம் அதைத்தான் நாமும் சொல்கிறோம்...
எதற்குப் பின்னால் இவர்கள் செய்கிறார்கள்...
ஒவ்வொரு ஊர்களில் இருக்கும் முஸ்லிம் ஜமாத்தை பல கூறுகளாக உடைத்ததற்குப் பின்னால்...
ஜமாஅத் தலைவரையும் அங்கு இருக்கும் உலமாக்களையும் தங்களால் முடிந்த அளவுக்கு அவமானப்படுத்தியதற்கு பின்னால்....
மக்களுக்கு கல்விக்கு உண்டான எந்த வாசலையும் திறக்காமல் அடைத்து விட்டதற்குப் பின்னால்...
முஸ்லிம்களின் அனைத்து ஓட்டுகளையும் ஒரே இடத்தில் குவிந்து விடக்கூடாது என்பதற்காக முஸ்லிம்களையே பல கூறுகளாகப் பிரித்து இரண்டு பெரும் கட்சிகளுக்கும், சுயேட்சைகளுக்கும் பிரித்துவிட்டு காயிதே மில்லத் கட்டி தந்ததை உடைத்து நாசமாக்கி பிச்சை எடுக்க வைத்ததற்கு பின்னால்...
இதற்க்குப் பின்னால் முஸ்லிம்களின் பணத்தை வசூல் செய்து முஸ்லிம்களுக்கே கொடுப்பது ஒரு பாராட்டத்தக்க பார்க்கப்படுகிறது !!!!!
எனவே ஒவ்வொரு ஊர்களிலும் கிலாபத்தை நீங்கள் கொண்டு வாருங்கள்...
எல்லா ஊர்களிலும் கண்டிப்பாக முதன் முதலில் கட்டப்பட்ட ஜாமியா மஸ்ஜித் என்று அழைக்கப்படும் பெரிய பள்ளிவாசல் இருக்கும்...
அதுதான் அந்த ஊரின் அனைத்து முஸ்லிம்களையும் நிர்வாகம் செய்து கொண்டிருக்கும்..
முஸ்லிம்களுக்கு மத்தியில் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதும், பொருளாதார விநியோகம் செய்வதும், திருமணம் முடித்து வைப்பதும், கல்விக்கு உதவி செய்வதும், வெளியூரில் இருந்து வரக்கூடிய பிரச்சினைகளை சரி செய்வதும், உள்ளூர் கலவரங்களை தடுப்பதும் என்ற பல காரியங்களையும் இந்த பெரிய பள்ளிவாசல் தான் இத்தனை காலங்களாக செய்து வந்தது...
நம்மிடம் இருந்த மிகச்சிறிய கிலாபத் என்பது ஒவ்வொரு ஊரில் இருக்கும் இந்த பெரிய பள்ளிவாசல் தான்...
அதை நாம் பாதுகாப்பதே இப்போது நமக்கு மிகப்பெரிய சாதனை...
அந்த ஊரில் இருக்கும் பல்வேறுபட்ட கருத்து வேற்றுமைகளை களையுங்கள்...
அந்த ஜமாஅத் தலைவருடைய கட்டுப்பாட்டுக்குள் அனைத்து இயக்கங்களையும் ஒன்று கூடுங்கள்...
அந்தப் பெரிய பள்ளிவாசலில் இமாமை தலைமை நீதிபதியாக ஆக்குங்கள்...
சொல்லப்போனால் அவர் தான் அந்த ஊரின் தலைவராக இருக்க வேண்டும்...
நம்முடைய போதாத காலம் மார்க்கம் தெரியாத மட சாம்பிராணிகளெல்லாம் ஊர் ஜமாஅத்தின் தலைவர்களாக ஆகிவிட்டனர்...
சில நல்ல தலைவர்கள் சமுதாயத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்...
ஆலிம்கள் எல்லாம் ஜமாத்தின் தலைவராக ஆகிவிட்டால் இந்த திமிர் பிடித்த ஜமாஅத் தலைவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துவிடும்...
அவர்களின் பெரும்பான்மையான சத்தியக் கொள்கையை வெளியே சொல்வதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது இந்த தீவட்டி தடியன்களாகிய மார்க்கம் அறியாத முட்டாள் தலைவர்கள்தான்...
எனவே முடிந்த வரைக்கும் உலமாக்களை ஊரின் தலைவர்களாக ஆக்க முயற்சிக்க வேண்டும்...
அது இல்லாதபட்சத்தில் நேர்மையான மனிதரையும், சத்தியக் கொள்கையில் இருப்பவரையும், நல்ல மனிதர்களையும் தலைவர்கள் ஆக்கி அந்த ஊரின் தலைமை நீதிபதியாக உலமாக்களை ஆக்க வேண்டும்...
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை கணக்கெடுத்ததைப் போன்று அந்த ஊரின் அனைத்து மக்களின் கணக்கெடுப்பு நடக்க வேண்டும்.
அதன் ஃபுல் டீடெய்ல்ஸ் ஜமாஅத் இடம் இருக்க வேண்டும். அதில் ஏழைகள் மற்றும் செல்வந்தர்களை பற்றிய விளக்கமும் இருக்க வேண்டும்.
திருமணம் ஆகாத ஏழை கன்னிகள் எத்தனை என்பது கணக்கிட வேண்டும்.
படிக்க முடியாத இளைஞர்கள் எத்தனை என்று கணக்கிடப்பட வேண்டும்.
அதில் செல்வந்தர்கள் ஜகாத் கொடுப்பதை ஜமாஅத் தலைவர் வலியுறுத்த வேண்டும்.
அவரிடம் இருக்கும் சொத்துக்களில் ஜகாத் உடைய பணம் எவ்வளவு என்பதை ஜமாஅத்தார் நிர்வகிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான நபர் வசூல் செய்து அதை யாரிடம் வினியோகிக்கப்பட்டது என்பது முதற்கொண்டு அனைத்தும் தெளிவான சான்றிதழ் வேண்டும்.
அந்த ஊரில் இருக்கும் பல்வேறுபட்ட இயக்கங்களை எல்லாம் இயக்கத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்...
எந்தவிதமான வசூலும் தரக்கூடாது...
எந்த செல்வந்தர் உடைய பணமும் 42 இயக்கங்களுக்கும் போகக்கூடாது...
அனைத்து பணமும் அந்த ஊரின் ஜாமிஆ மஸ்ஜிதிற்கு வரவேண்டும்...
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜகாத் வரி வசூல் செய்வதற்காக அனுப்பிய கூட்டம் திரும்ப வரும் போது ஒட்டு மொத்த பணத்தையும் பள்ளிவாசலுக்குள் கூட்டி வைத்து ஒரு பெரும் குவியலை ஏற்படுத்தி இருந்ததைப் போல அப்படியே அதை அமல்படுத்த வேண்டும்.
என்ன ஆலிம்சா இப்படி சொல்றீங்க??
இதெல்லாம் நடக்கிற காரியமா???
முஸ்லிம் இயக்கங்களில் உள்ளவர்கள் வசூல் செய்யக்கூடாது என்று சொன்னால் இதெல்லாம் யாரேனும் ஏற்றுக் கொள்வார்களா???
ஏம்பா சீதேவி உனக்கு இதுவே தலை சுத்துதுன்னு சொன்னா....
நீ எப்படிப்பா இஸ்லாமிய கிலாபத்தை கொண்டு வருவ???
இஸ்லாமிய கிலாபத்தில் இருக்கும் ஒரு அங்கமான பைத்துல்மாலில் 2,3,4 என்ற பிரிவு இல்லாமல் பணம் சிதறாமல் ஒரே இடத்தில் குவியும் இடமாக இருக்க வேண்டும்...
இது கிலாபத்தின் மிக முக்கிய அம்சமும் கூட...
இதற்கு எதிராக ஒரு ஊரின் செல்வத்தை ஒரே இடத்தில் குவிவதை விட்டும் சிதரடிப்பவர்கள் அனைவரும் ஜமாஅத்தின் துரோகிகளே....
பணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் ஒன்று சேர்வது பரக்கத்தை ஏற்படுத்தும்...
இன்று 40க்கும் மேற்பட்ட பிரிவினர் எவ்வளவு சேவைகள் செய்தாலும் பணத்திலும் முஸ்லிம்கள் இடத்திலும் எந்த விதமான பரக்கத்தும் நிலவுவது இல்லை.
இவை முடிந்த அளவிற்கு நீ செயல்படுத்தி விட்டால் நம் நாட்டில் இருக்கும் பெரும் பிரச்சனை தீர்ந்து விடும்...
42க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இயக்கங்கள் இந்த இஸ்லாமிய பொருளாதாரத்தை சிதரடிக்கிறார்கள்...
ஒரே இடத்தில் பணம் குவிப்பதை விட்டும் இவர்கள் மிகவும் லாபகரமாக கையாள்கிறார்கள்...
ஒரு ஊரின் தலைமை பள்ளிவாசலின் கீழ் அல்லது பள்ளி ஜமாஅத் தின் கீழ் அல்லது இமாமின் கீழ் ஒரு பைத்துல்மால் உருவாகிவிடக் கூடாது அந்த ஊரின் ஒட்டுமொத்த பணங்களும் ஒரே இடத்தில் குமியக் கூடாது என்பதில் இவர்கள் மிகவும் உஷாராக இருக்கிறார்கள்...
அவ்வாறு ஒரு ஊரில் ஒட்டுமொத்த பணங்களும் ஒரே ஒரு தலைமையின் கீழ் ஒரு இமாமின் கீழ் ஒரு தலைவரின் கீழ் குவிய ஆரம்பித்து விட்டால் அல்லாஹ்வின் அருளால் அந்த ஊரில் இருக்ககூடிய ஏழ்மை முழுவதுமாக அகற்றிவிடலாம்...
அந்த ஊரில் இருக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் கல்வி உதவி பெறப்படும்.
சொந்த வீடுகளை உடைய முஸ்லிம்கள் உருவாகுவார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் மருத்துவமும், கல்வி ஸ்தாபனங்களும், மதரஸாக்களும் உருவாகும்.
முஸ்லிம்கள் போதுமான அளவிற்கு செல்வம் உடையவர்களாக மாறி விடுவதால் மார்க்கத்திற்காக பெரும் பகுதியை தியாகத்திற்கு ஒதுக்கி விடுவார்கள்.
முஸ்லிம்கள் அல்லாத மாற்று மத சகோதரர்களுக்கும் கூட ஒரு தலைமையின் கீழ் இருந்து உதவி செய்யக் கூடியவர்களாக மாறிவிடலாம்...
அரசாங்கத்தின் உதவி அன்றி விவசாய நிலங்களை ஏற்படுத்தி ஆடுமாடுகளையும், பண்ணைகளையும், மரங்கள் வளர்ப்பு களையும் ஏற்படுத்தி ஒரு குட்டி அரசாங்கத்தை நடத்தலாம்...
இதைத்தான் பிடல் காஸ்ட்ரோ செய்தான்...
க்யூபா என்ற ஒரு சிறிய நாட்டின் வெற்றிக்கு காரணம் இஸ்லாமிய பொருளாதாரத்தை அடிப்படையாக செய்த உத்தியாகும்.
நாம் இலவு காத்த கிளியாக உடைந்துபோன உஸ்மானிய கிலாஃபத்தின் பற்றி கதறிக் கொண்டு இருக்கிறோம்...
உன்னால் முடிந்தால் உன் ஊரில் இவ்வாறு உருவாக்கி காட்டிவிடு...
ஜாமியா மஸ்ஜிதை விட்டு தனியாக பிரிந்து சின்ன சின்ன குட்டி மர்கஸுகளையும், பள்ளிவாசல்களை கட்டி ஜும்ஆ நடத்துதல் நிறுத்தப்பட வேண்டும்.
ஈது பெருநாள் என்றால் ஒரே பள்ளியின் தலைமையின் கீழ்தான் நடத்தப்பட வேண்டும்..
மிகவும் உசாரய்யா உசாரு ஓரஞ்சாரம் உஷார்...
ஈது பெருநாளில் ஒரே பள்ளிவாசலில் தொழுதால் அம்புட்டு பெருநாள் காசும் ஒரே இடத்தில் வந்துரும்ல.....
அப்ப எனக்கு காசு ??????
இந்த பிளடி பக்கர்களின் மைண்ட் வாய்ஸ் நமக்கு கேட்கிறது....
இந்த இயக்க வெறியர்களை விட்டும் இந்த இஸ்லாமிய சமூகம் எப்பொழுது பாதுகாக்கப்பட்டு அந்த ஊரில் இருக்கும் ஜாமியா மஸ்ஜிதில் தலைமையின் கீழ் விருப்பு வெறுப்பின்றி எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் ஒரே தலைமையின் கீழ் இவர்கள் என்று இணைகிறார்களோ அப்போது ஒவ்வொரு ஊரிலும் இஸ்லாமிய கிலாபத்தின் ஒரு பகுதி வந்துவிடும்...
எனவே கிலாபத்தின் மூன்றில் ஒரு பகுதியை நிறைவேற்றிவிட்டு பிறகு மூன்றில் இரண்டு பகுதியையும் நிறைவேற்றி விட்டு பிறகு ஒட்டுமொத்த ஹிலாபத்தையும் கேட்டாள் அது கேட்பதற்கு தகுதியாக இருக்கும்....
கிலாபத் உடைய ஒரு அம்சத்தையும் செயல்படுத்தாமல் எங்களுக்கு உலக ஆட்சி வேண்டும் என்று சொன்னால் எப்படி ஒரு கோமாளித்தனமாக இருக்கும்!!!!
எனவே நீங்கள் இதை செய்து முடித்துவிட்டு பெரிய கிலாபத்தை எதிர்பாருங்கள்...
அல்லாஹ்வே மிக அறிந்தவன்...
- இப்னு கபீர்
Comments
Post a Comment