அஷ்அரிய்யா அகீதா - 02 அஸ்ஸவாதுல் அஃலம் என்னும் அடர் கருப்பு கூட்டம்


அஹ்லுஸ் ஸுன்னா அல்‌ அஷாயிரா.

பாகம் 2.

عن أنس بن مالك:] تفترقُ هذه الأمةُ على ثلاثٍ وسبعين فرقةً كلها في النارِ إلا فرقةٌ واحدةٌ، ما أنا عليهِ اليومَ وأصحابي...

இந்த சமுதாயம் 73 பிரிவுகளாக பிரியும். அதில் அனைவரும் நரகத்திலே, ஒரே ஒரு பிரிவினரை தவிர. (அவர்கள் யாரென்றால்) நானும் என் தோழர்களும் எதன் மது இருக்கிறோமோ (அந்த கொள்கையில் இருப்பவர்கள்).

தப்ரானீ அல் அவ்ஸத் 4886.
மீஸானுல் இஃதிதால் 2/320.

மற்றொரு அறிவிப்பில்....

كُلُّها في النّارِ إلّا واحدةً، وهي الجماعةُ».

அனைவரும் நரகத்திற்கு போவார்கள் ஒரே ஒரு கூட்டத்தாரை தவிர அவர்கள் தான் 'அல் ஜமாஅத்' ஆகும்.

மற்றொரு அறிவிப்பில்....

அபூதாவூத் 7/50
ஷுஐப் அர்னாஊத் : ஸஹீஹ்.

 «كُلُّها في النّارِ إلّا السَّوادُ الأعظمُ».

அனைவரும் நரகத்திற்கு போவார்கள் ஒரே ஒரு கூட்டத்தாரை தவிர அவர்கள் தான் அஸ் - ஸவாதுல் அஃலம் ( பெறும் திரள் அடர்கருப்பு கூட்டம்).

அபூதாவூத் 7/60.
ஷுஐப் அர்நாஊத் : ஹஸன்.

வேறுவிதமான ஹதீஸ்களில்...

عن بريدة بن الحصيب الأسلمي:] خَيرُ هذه الأُمَّةِ القَرْنُ الذين بُعِثتُ أنا فيهم،

நான் அனுப்பப்பட்டு இருக்கும் இந்த நூற்றாண்டு இந்த உம்மத்துக்கு நலவாக இருக்கும்...

 ثم الذين يَلونَهم، 

பிறகு அடுத்த நூற்றாண்டு..

ثم الذينيَلونَهم،

பிறகு அடுத்த நூற்றாண்டு...

 ثم الذين يَلونَهم، 

பிறகு அடுத்த நூற்றாண்டு...

முஸ்னது அஹ்மத்: 23024,
ஷுஐப் அர்நாஊத் : (ஸஹீஹ்).
ஷரஹு முஷ்கிலுல் ஆஸார்: 2466.

வேறு சில ஹதீஸ்களில் மூன்று நூற்றாண்டு என்று வந்துள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நூற்றாண்டையும் சேர்த்து...

ஆனால் இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நூற்றாண்டைத் தாண்டி மூன்று நூற்றாண்டுகள் கூடுதலாக சொல்லப்பட்டுள்ளது...

எனவே மொத்தம் நான்கு நூற்றாண்டுகள் வாக்களிக்கப்பட்ட தாக இருக்கிறது...

تركتُ فيكم أَمْرَيْنِ لن تَضِلُّوا ما تَمَسَّكْتُمْ بهما: كتابَ اللهِ وسُنَّةَ نبيِّهِ ﷺ

நான் உங்களிடத்தில் இரண்டு காரியங்களை விட்டுச் செல்கிறேன் அதைப் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறி செல்ல மாட்டீர்கள். 1. குர்ஆன் 
2. அல்லாஹ்வின் நபியின் (ﷺ) சுன்னத்.

முஅத்தா : 2/899
அத் தம்ஹீது: 24/331.

குர்ஆன், சுன்னா ஆகிய இரண்டும் மார்க்க ஆதாரம்...

குர்ஆன், ஹதீஸ் என்று வரவில்லை, மாறாக குர்ஆன், சுன்னா என்று வந்துள்ளது....

ஏனெனில் சுன்னதுக்கும், ஹதீஸுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு...

عن أبي سعيد الخدري:] «إنِّي قد ترَكْتُ فيكمُالثَّقَليْنِ، 

கனம் பொருந்திய பளுவான இரண்டு விஷயங்களை நான் உங்களிடத்தில் விட்டுச் செல்கிறேன்.

أَحَدُهما أكبرُ منَ الآخَرِ:

அதில் ஒன்று மற்றதை விட மிகவும் பெரியது...

 كتابُ اللهِ عزَّ وجلَّ حَبلٌ ممدودٌ منَ السَّماءِ إلى الأرضِ، 

வானத்திலிருந்து பூமி வரை நீட்டப்பட்ட கயிறாகிய அல்லாஹ்வின் வேதம்.

وعِتْرَتي أهلُ بَيْتي،

என் சந்ததியாகிய என் குடும்பம்.

 ألا إنَّهما لن يَفتَرِقا حتى يَرِدا عليَّ الحَوضَ».

அறிந்துகொள்ளுங்கள்!!! 
குர்ஆனும் என்னுடைய குடும்பமும் என்னிடத்தில் ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்தை அடையும் வரைக்கும் (ஒன்றை விட்டு மற்றது) பிரியவே பிரியாது...

அஹ்மத்: 11211.
திர்மிதீ: 3788.
ஷுஐப் அர்நாஊத்: (ஸஹீஹ்)

இதில் இத்ரதீ ‌என்ற வார்த்தையுடன் சேர்த்து அஹ்லுல் பைத் என்றும் வந்துள்ளது.

இந்த இரண்டும் குடும்பத்தை குறிக்கும் என்றாலும் கூட இதில் ஒரு ஹிக்மத் இருக்கிறது...

இரண்டு வார்த்தையில் இத்ரதீ என்ற வார்த்தை தனக்குப் பின்னால் வரும் சந்ததியை குறிக்கும்.

அஹ்லுல்பைத் என்பது தன்னுடன் இருக்கும் உறவுகளையும் குறிக்கும்.

எனவே இந்த இரண்டு வார்த்தையை பயன்படுத்தி இருப்பது ஷியா பிரிவினருக்கு எதிரான ஆதாரமாக இருக்கிறது...

அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் வரக்கூடிய வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்...

ஆனால் அவர்களுடன் இருந்த உறவுகளுக்கும், அவர்களின் மனைவிமார்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை....

 குறிப்பாக அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் விஷயத்தில் வரம்பு மீறி நடந்து கொள்கிறார்கள்...

எனவேதான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அஹ்லுள் பைத் என்ற வார்த்தையை சேர்த்து பயன்படுத்தி இருக்கிறார்கள்...

அதில் பெருமானாரின் குடும்பத்தவர்கள் அனைவரும் வருவார்கள்...

வேறு சில ஹதீஸ்களில்....

فعليكُم بسُنَّتِي 

என்னுடைய சுன்னத்துகளைப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்.

وسُنَّةِ الخلفاءِ الرّاشِدين المهديِّينَ بَعدي،

எனக்குப் பின்னால் வரும் நேர்வழி காட்டப் பட்ட கலீபாக்களின் சுன்னத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.

 அபூதாவூத்: 4607.
திர்மிதீ: 2676.
இப்னுமாஜா: 42.

பல்வேறு காலகட்டங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனித் தனியாக நாம் யாரைப் பின்பற்ற வேண்டும் என்று கை காட்டி உள்ளார்கள்...

எனவே அந்தப் பட்டியலை நாம் ஒருங்கிணைத்து பார்க்கலாம்..

இந்த ஒட்டுமொத்த பண்புகளும் யாரிடம் இருக்கிறதோ அவர்கள்தான் நேர்வழியாளர்கள்.

1.குர்ஆன்.
2.ஹதீஸ்.
3.அஹ்லுல் பைத்.
4. நபிகளாரின் பின்வரும் வாரிசுகள்.
5. அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு.
6. உமர் ரலியல்லாஹு அன்ஹு.
7. உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு.
8.அலி ரலியல்லாஹு அன்ஹு.
9. ஹிஜ்ரி 1 லிருந்து 100 வரை.
10. ஹிஜ்ரி 101 லிருந்து 200 வரை.
11. ஹிஜ்ரி 201 லிருந்து 300 வரை.
12. ஹிஜ்ரி 301 லிருந்து 400 வரை.
13. ஒட்டுமொத்த ஸஹாபாக்கள்.
14. அல் ஜமாஅத் எனும் கூட்டம்.
15. அஸ் ஸவாதுல் அஃலம் எனும் அடர் கருப்பு கூட்டம்.

எனவே இந்தப் பாரம்பரியம் பேணப்பட வேண்டும்.

இவ்வளவு பெரிய கூட்டத்தின் சிந்தனையும், நம்பிக்கையும், செயல்பாடுகளும் தவறாக மாறாது என்பதற்காகத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தி கூறினார்கள்.

 إِنَّ اللهَ تعالى لا يجمَعُ أمتي على ضلالَةٍ، 

நிச்சயமாக அல்லாஹ் தஆலா என்னுடைய ஒட்டு மொத்த உம்மத்தை வழிகேட்டின் மீது ஒன்று சேர்க்க மாட்டான்.

ويدُ اللهِ على الجماعَةِ

அல்லாஹ்வின் உதவி கரம் ஜமாஅத்தின் மீதே இருக்கிறது.

ஷஹீஹுல் ஜாமிஃ: 1848.

இத்தனை ஹதீஸ்களும் பாரம்பரியமான விஷயங்களை பேசிக் கொண்டிருக்கும் பொழுது நவீன தவ்ஹீது வாதம் பேசும் ஹவாரிஜ்கள் எங்களுக்கு குர்ஆன் சுன்னா தான் மார்க்கம் என்று தங்களை தாங்களே மார்தட்டிக் கொள்கிறார்கள்...

என்னமோ மற்றவர்களெல்லாம் ராமாயணத்தையும் ,பகவத்கீதையும் மார்க்கமாக கொண்டதைப் போல இவர்கள் மட்டும் நபி (ﷺ) அவர்களைப் பின்பற்றுவது போல காட்டிக் கொள்கிறார்கள்...

உண்மையில் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றக் கூடியவர்கள் அவர்கள் சொன்ன இந்த பாரம்பரியத்தையும் முழுமையாக பின்பற்ற வேண்டும்...

அதே நேரத்தில் கூட்டம் என்பதும் நேர்வழிக்கு ஆதாரம் இல்லை...

அந்தக் கூட்டம் என்பது நேர்வழியில் உள்ள ஸாலிஹீன்களாக இருக்க வேண்டும்...

ஏதாவது ஒரு நூற்றாண்டில் வாழும் மக்களின் கூட்டம் வழிகேட்டில் இருக்கிறது என்றால் உதாரணத்திற்கு ஹவாரிஜ்கள் லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்தாலும் அவர்கள் வழிகேடர்கள் தான்...

சஹாபாக்களின் மீது சாபமிடும் ஷீஆக்கள் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்தாலும் அவர்கள் வழிகேடர்கள் தான்...

எனவே மார்க்க பயபக்தி உடைய இந்த தீனின் அமானிதத்தை கடத்திச் செல்லும் ஸாலிஹீன்களின் மிக நீண்ட பட்டியல் தான் நமக்கு முக்கியத்துவம்...

யாரெல்லாம் இந்த மார்க்கத்தையும், அந்த மார்க்கத்தில் விளக்கத்தையும், குர்ஆன், ஹதீஸ், தப்ஸீர், ஹதீஸ் விரிவுரை, நபிமொழி விளக்க நூல்கள், இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர்கள், சீர்திருத்தவாதிகள் என்று பெரும் பாரம்பரியமாக அறியப்பட்டார்களோ அவர்களின் வழி நிற்பது வெற்றிக்கு காரணமாக அமையும்..

[عن إبراهيم بن عبدالرحمن العذري:] يحملُ هذاالعِلمَ مِن كلِّ خَلَفٍ عُدُولُهُ

ஒவ்வொரு நூற்றாண்டில் மிக நீதமானவர்கள்தான் இந்த கல்வியை சுமந்து செல்வார்கள்.

இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களின்,
லிஸானுல் மீஸான் 1/2130.

எனவே ஹதீஸ் துறை உலமாக்கள், வரலாற்றுத்துறை உலமாக்கள், தப்ஸீர் துறை உலமாக்கள், போராளிகள் என்று யாரெல்லாம் இந்த மார்க்கத்தின் நீதவான்கள் என்று அறியப்பட்டார்களோ அவர்கள் அனைவரும் அஹ்லுஸ் ஸுன்னா அல் அஷாயிரா எனப்படும் அஷ்அரிய்யா அகீதாவில் இருந்தார்கள்.....

இவர்கள் எழுதிய அனைத்து கிதாபுகளும் உலகப் புகழ் பெற்றவை என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை...

அகீதா அஹ்லுஸ் ஸுன்னா அஷ்அரிய்யாவின் ஹதீஸ் துறை அறிஞர்களின் பட்டியல்....

(1) இமாம் இப்னு ஹிப்பான்.

(ஸஹீஹ் இப்னு ஹிப்பானின் ஆசிரியர்)

(2) இமாம் பைஹகீ.

(ஸுனன் அல் பைஹகீ, தலாயிலுந் நுபுவ்வாவின் ஆசிரியர்)

(3) இமாம் இப்னு அஸாகீர்.

(தாரீஹ் இப்னு அஸாகிர், தப்யீனு கிதுபுல் முஃப்தரீயின் ஆசிரியர்)

(4) இமாம் அபூநுஐம்.

(ஹுல்யதுல் அவ்லியா எனும் ஹதீஸ் கிதாபை எழுதியவர்கள்)

(5) இமாம் அபூதர் அல் ஹர்வீ

(6) அபூதாஹிர் அஸ் ஸலஃபீ

(7) அபூஸயீத் அஸ் ஸம்ஆனி

(8) அல் காழீ இயால்.

(9) இப்னுஸ் ஸலாஹ்

(10) இஸ்ஸுப்னு அப்துஸ் ஸலாம்.

(11) அப்துல்லாஹ் இப்னு ஸஃதுப்னு அபீ ஜம்ரா.

(பஹ்ஜதுந் நுஃபூஸ் கிதாபின் ஆசிரியர்)

(12) ஷம்ஷுத்தீனுல் கர்மானீ...

அல் கவாகிபுத் துரரீ எனும்
புகாரியின் விரிவுரையாளர்.

(13) இப்னு ஹஜர் அஸ்கலானி.

ஃபத்ஹுல் பாரி எனும் உலகப் புகழ்பெற்ற புகாரியின் விரிவுரையாளர்.

(14) ஷிஹாபுத் தீன் அல் கஸ்தலானீ.

இர்ஷாதுஷ் ஷாரீ எனும் 
புகாரியின் விரிவுரையாளர்.

(15) யஹ்யப்னு ஷரஃபுந் நவவீ

ஸஹீஹ் முஸ்லிமின் விரிவுரையாளர்,
ரியாலுஸ்ஸாலிஹீன், அல் அர்பஈனந் நவவிய்யாவின் ஆசிரியர்.

(16) முஹம்மது இப்னு ஹலீஃபதுல் உபை.

ஸஹீஹ் முஸ்லிமின் விரிவுரையாளர்.
(இக்மாலுல் முஅல்லிமி பிஃபவாயிதில் முஸ்லிமி).

(17)முஹம்மது இப்னு அப்துல் பாகீஜ் ஜர்கானீ.

முஅத்தா மாலிக்கின் விரிவுரையாளர்.

(18) முஹம்மது இப்னு அப்துர் ரஊஃபுல் மனாவீ.

(19 நூருத்தீன் ஹைஸமீ.

மஜ்மஃ ஸவாயித் எனும் பிரபல்யமான ஹதீஸ் கிதாபின் ஆசிரியர்....

(20) இப்னுல் முனீர்.

(21)இப்னுல் கத்தான் அல் ஃபாஸீ.

(22) ஜைனுத்தீன் அல் இராகீ.

(23) வலிய்யத் தீன் அல் இராகீ.

(24) இமாம் இப்னு ஜமாஆ.

(25) இமாம் பத்ருத் தீனுல் அய்னீ.

(26) ஸலாஹுத் தீன் அல் அலாயீ.

(27) அபூபக்கர் இப்னு ஃபூரக்...

(28) இப்னுல் முலக்கின்.

(29) இப்னுல் அலான்.

(30) இப்னு தகீகில் ஈது. 

(31) இமாம் ஸைலயீ.

ஹிதாயா கிதாபிற்கு தஹ்ரீஜு கிதாபாகிய புகழ்பெற்ற நஸபுர் ராயாவின் ஆசிரியர்....

(32) இமாம் சுயூத்தீ.

(33) ஷம்ஷுத்தீன் அஸ் ஸஹாவீ.

(34) இமாம் முல்லா அலீ காரீ.

மிஷ்காத் ஹதீஸ் கிதாபுக்கு விரிவுரையான மிர்காதுல் மஃபாதீஹின் ஆசிரியர்....

(35) இமாம் பைகூனி

(36) இமாம் முன்திரிய்.

(அத் தர்ஃகீப் வத் தர்ஹீபு, முஹ்தஷர் ஸஹீஹ் முஸ்லிம், முஹ்தஷர் ஸுனனு அபீதாவூது ஆகிய கிதாபுகளின் ஆசிரியர்.)

(37) அப்துல் ஹை அல் லக்னவீ...

(38) ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவீ.

(அல் இன்ஷாஃப் ஹுஜ்ஜதுல்லாஹில் பாலிஹாவின் ஆசிரியர்)

(39) இப்னு ஹஜர் அல் ஹைதமீ.

(40) தகிய்யுத்தீன் அஸ்ஸுப்கீ

(41) தாஜுதீன் அஸ்ஸுப்கீ.

(42) முர்தலா அஸ்ஸபீதீ.

இவர்கள் அனைவரும் ஹதீஸ் துறை வல்லுனர்களே. ஏனைய துறைகளில் இவர்கள் சிறந்து விளங்கியவர்கள் தான் என்றாலும் ஹதீஸ் துறையில் முஹத்திஸ்கள் என்று அறியப்பட்டவர்கள்.

இன்னும் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஈராக் போன்ற பல நாடுகளில் 14ம் நூற்றாண்டு வரை உள்ள ஹதீஸ் துறை அறிஞர்கள் இருக்கிறார்கள்.
 அவர்களின் பெரும் பட்டியலயே அல்லாஹ்வின் அருளால் நாம் தர முடியும்...

சுருக்கத்திற்கு பிரபல்யமான முகத்திஸ்களை மட்டும் கொண்டு வந்திருக்கிறோம்...

இது அல்லாத தப்ஸீர் துறை அறிஞர்கள்...

தப்ஸீர் துறை அறிஞர்கள் மிகமிக கவனிக்கத்தக்கவர்கள்.

காரணம் குர்ஆன் ஓதுதல் ஸப்அ கிராஅத் எனும் 7 விதமாக ஓதும் முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறக்கப்பட்டுள்ளது...

أتاني جِبريلُ وميكائيلُ، فقعَدَ جبريلُ عن يَميني، وميكائيلُ عن يَسارِي، 

ஜிப்ரயீலும், மீகாயிலும் என்னிடம் வந்தார்கள் எனவே ஜிப்ரயீல் என் வலப் பக்கமும், மீக்காயீல் என் இடப் பக்கமும் அமர்ந்தார்கள்...

فقال جِبريلُ: يا محمَّدُ: اقرأِ القرآنَ على حَرفٍ،

ஜிப்ரீல் கூறினார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே ! குர்ஆனை ஒரு கிராஅத்தில் ஓதுங்கள்...

 فقال ميكائيلُ استَزِدْه،

மீக்காயில் கூறினார் அதை அதிகப்படுத்திக் கொள்வீராக...

 فقُلتُ: زِدني، 

எனவே நான் கூறினேன் எனக்கு அதிகப்படுத்த(கற்றுத் தரு)வீராக

فقال: اقرأْهُ على ثلاثةِأحرُفٍ،

மேலும் ஜிப்ரயீல் கூறினார் மூன்றுவிதமான கிராஅத்தில் ஓதுங்கள்..

 فقال ميكائيلُ: استزِدْهُ،

மீக்காயில் கூறினார் அதை அதிகப்படுத்திக் கொள்வீராக...

 فقلتُ: زِدني،

எனவே நான் கூறினேன் எனக்கு அதிகப்படுத்த(கற்றுத் தரு)வீராக

 كذلكَ حتّى بلَغَ سبعةَ أحرُفٍ،

இவ்வாறு (சொல்லிக் கொடுக்கப்பட்டு கொண்டிருந்தது) இறுதியாக அது ஏழு விதமான ஓதுதல்களை அடைந்தது...

 فقال: اقرأهُ على سَبعةِ أحرفٍ، كلُّها شافٍ كافٍ

எனவே அவர் கூறினார் 7 விதமாக (குர்ஆனை) நீங்கள் ஓதுங்கள். அந்த அனைத்து (ஓதுதல்களும்) நிவாரணியாகவும், போதுமானதாகவும் இருக்கிறது.

 - ஸஹீஹுல் ஜாமிஃ 78.

ஏழு விதமான ஓதுதல்கள் என்பது குர்ஆன், சுன்னாவில் உறுதியான விஷயமாகும்...

எனவே ஏழு விதமாக ஓதும் கிராஅத் முறையிலிருந்து சஹாபாக்கள் ஒரு சில சட்டங்களை எடுப்பார்கள்...

இமாம் ஷாஃபி ரஹிமஹுல்லாஹ் 7 விதமாக ஓதும் கிராஅத்திலிருந்து ஃபிக்ஹு சட்டங்களை எடுத்திருக்கிறார்கள்...

சஹாபாக்கள் காலத்தில் இருந்த அந்த ஏழு விதமான கிராஅத்களை குர்ஆனின் காரிகளிடமிருந்து வாழையடி வாழையாக இன்றுவரை தப்சீர் துறைகளின் மூலமாகவே கற்றுத்தரப்படுகிறது...

தப்ஸீர் துறை அறிஞர்களில் மிகச்சிறந்த ஹதீஸ் மேதைகளும் இருந்திருக்கிறார்கள்...

இமாம் இப்னு ஜரீர் அத் தப்ரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தான் முதன்முதலில் தப்ஸீரை ஹதீஸ் உடன் இணைத்து விளக்கம் கொடுத்தவர்கள்...

ஒவ்வொரு வசனத்திற்கும் உண்டான ஹதீஸ் ஆதாரத்தின் சங்கிலித் தொடரை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இருந்து தன்னிடம் வரைக்கும் மர்ஃபூஃ முஸ்னதாக வைத்திருப்பார்கள்...

ஹஜரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்து ஏராளமான அறிவிப்புகளை சனது தொடருடன் கொண்ட அறிஞராக இருக்கிறார்கள்...

எனவே ஹதீஸ் துறை என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே போல தப்ஸீர் துறை என்பது குர்ஆனின் பலவிதமான ஓதுதல்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு துறையாகும்...

ஒரு பெரும் கொண்ட முஃபஸ்ஸிரீன்களின் கூட்டம் பாரம்பரியமாக முதல் மூன்று நூற்றாண்டுகளில் இருந்து அஷ்அரிய்யா அகீதாவில் அப்படியே தொடர்கிறது...

أبو منصور المَاتُرِيدي(ت 333 هـ)صاحب تفسير تأويلات أهل السنة.

(1) அபூமன்ஸூர் அல் மாதுருதீ.

أبو الليث السمرقندي(ت 373 هـوقيل 375 هـ)صاحب تفسير بحر العلوم.

(2) அபுல்லய்ஸு அஸ் ஸமர்கன்தீ.

أبو إسحاق الثعلبي(ت 427 هـ)صاحب تفسير الكشف والبيان عن تفسير القرآن.

(3) அபூ இஸ்ஹாக் அஸ் ஸஃலபீ.

مكي بن أبي طالب(ت 437 هـ)صاحب تفسير الهداية إلى بلوغ النهاية.

(4) மக்கீ இப்னு அபீ தாலிப்.

أبو الحسن الماوردي(ت 450 هـ)صاحب تفسير النكت والعيون.

(5) அபுல் ஹஸன் அல் மாவுர்தீ.

أبو القاسم القشيري(ت 465 هـ)صاحب تفسير لطائف الإشارات.

(6) அபுல் காசிம் அல் குஷைரீ.

الواحدي النيسابوري(ت 468 هـ)صاحب تفسير الوسيط في تفسير القرآن المجيد.

(7) அல் வாஹிதீ அந் நைஸாபூரி 

البغوي(ت 516 هـ)صاحب تفسير معالم التنزيل.

(8) அல் பஹவீ 

أبو بكر بن العربي(ت 543 هـ)صاحب كتاب أحكام القرآن.

(9) அபூபக்கர் இப்னுல் அரபி

ابن عطية الأندلسي(ت 546 هـ)صاحب تفسير المحرر الوجيز في تفسير الكتاب العزيز.

(10) இப்னு அதிய்யா அல் உன்துலுஸீ.

ابن الجوزي(ت 597 هـ)صاحب تفسير زاد المسير في علم التفسير.

(11) இப்னுல் ஜவ்ஸீ..

فخر الدين الرازي(ت 606 هـ)صاحب تفسير مفاتيح الغيب.

(12) ஃபஹ்ருத் தீன் ராஸீ.

ناصر الدين البيضاوي(ت 685 هـ)صاحب تفسير أنوار التنزيل وأسرار التأويل.

(13) காழீ பைழாவீ.

حافظ الدين النسفي(ت 710 هـ)صاحب تفسير مدارك التنزيل وحقائق التأويل.

(14) ஹாஃபிழுத் தீன் நஸஃபீ.

علاء الدين الخازن(ت 725 هـ)صاحب تفسير لباب التأويل في معاني التنزيل.

(15) அலாஉத் தீன் அல் ஹாஸின்.

نظام الدين النيسابوري(ت 728 هـ)صاحب تفسير غرائب القرآن ورغائب الفرقان.

(16) நிஜாமுதீன் அந் நய்ஸாபூரி...

ابن جزي الغرناطي(ت 741 هـ)صاحب تفسير التسهيل لعلوم التنزيل.

(17) இப்னு ஜிஸ்யுல் ஹர்னாதீ...

أبو حيان الأندلسي(ت 754 هـ)صاحب تفسير البحر المحيط.

(18) அபூ ஹய்யான் அல் உன்துலுஸி...

السمين الحلبي(ت 756 هـ)صاحب تفسير الدر المصون في علوم الكتاب المكنون.

(19) அஸ் ஸமீனுல் ஹலபீ....

بدر الدين الزركشي(ت 794 هـ)صاحب البرهان في علوم القرآن.

(20) பதுருத்தீன் அஸ் ஸரக்ஷீ.

ابن عرفة(ت 803 هـ)صاحب تفسير ابن عرفة.

(21) இப்னு உர்ஃபா.

ابن الجزري(ت 833 هـ)

(22) இப்னுல் ஜிஸ்ரீ

جلال الدين المحلي(ت 864 هـ)صاحب تفسير الجلالين.

(23) ஜலாலுதீன் மஹல்லீ

عبد الرحمن الثعالبي(ت 875 هـ)صاحب تفسير الجواهر الحسان في تفسير القرآن.

(24) அப்துர் ரஹ்மான் ஸஆலபீ 

ابن عادل(ت 880 هـ)صاحب تفسير اللباب في علوم الكتاب.

(25) இப்னு ஆதில்

برهان الدين البقاعي(ت 885 هـ)صاحب تفسير نظم الدرر في تناسب الآيات والسور.

(26) புர்ஹானுத்தீனுல் பாகியீ.

جلال الدين السيوطي(ت 911 هـ)صاحب الإتقان في علوم القرآن،والدر المنثور في التفسير بالمأثور.

(27) ஜலாலுதீன் அஸ் ஸுயூத்தீ

أبو السعود أفندي(ت 951 هـ)صاحب تفسير إرشاد العقل السليم إلى مزايا الكتاب الكريم.

(28) அபுஸ் ஸுஊதுல் அஃப்னிதி.

الخطيب الشربيني(ت 977 هـ)صاحب تفسير السراج المنير في الإعانة على معرفة بعض معاني كلام ربنا الحكيم الخبير

(29) அல் ஹதீபுஷ் ஷர்பீனி...

.إسماعيل حقي البروسوي(ت 1127 هـ)صاحب تفسير روح البيان في تفسير القرآن.

(30) இஸ்மாயீலுல் ஹக்கீ....

أحمد بن عجيبة(ت 1224 هـ)صاحب تفسير البحر المديد في تفسير القرآن المجيد.

(31) அஹ்மத் இப்னு அஜீபா....

محمد عبد العظيم الزرقاني(ت 1367 هـ)صاحب كتاب مناهل العرفان في علوم القرآن.

(32) முஹம்மது அப்துல் அழீம் அஸ்ஸர்கானீ...

أحمد بن مصطفى المراغي(ت 1371 هـ)صاحب تفسير المراغي.

(33) அஹ்மது இப்னு முஸ்தபா அல் முராஹீ...

بديع الزمان سعيد النورسي(ت 1379 هـ)صاحب تفسير رسائل النور.

(34) பதீஉஸ் ஸமான் நூரிஸீ...

محمود شلتوت(ت 1383 هـ)صاحب تفسير القرآن الكريم.

(35) முஹம்மது ஷல்தூம்...

محمد الطاهر بن عاشور(ت 1393 هـ)صاحب تفسير التحرير والتنوير.

(36) இமாம் இப்னு ஆஷூர்...

محمد أبو زهرة(ت 1394 هـ)صاحب تفسير زهرة التفاسير.

(37) முஹம்மது அபூ ஸஹ்ரா...

إبراهيم القطان(ت 1404 هـ)صاحب تفسير تيسير التفسير.

(38) இப்ராஹீமுல் கத்தான்...

حسنين محمد مخلوف(ت 1410 هـ)صاحب تفسير كلمات القرآن تفسير وبيان.

(39) ஹுஸ்னைன் முஹம்மது மஹ்லூஃப்.

محمد متولي الشعراوي(ت 1418 هـ)صاحب تفسير خواطر محمد متولي الشعراوي.

(40) இமாம் ஷஃராவீ...

وهبة الزحيلي(ت 1436 هـ)صاحب التفسير المنير في العقيدة والشريعة والمنهج.

(41) வஹ்பதுஸ் ஸஹீலீ...

محمد علي الصابوني صاحب تفسير صفوة التفاسير

(42) முஹம்மது அலி அஷ் ஷாபூனி...

(ஷஃப்வதுத் தஃபாஸீர் எனும் பிரபல்யமான தப்ஸீரின் ஆசிரியர்.)

(43) அனைத்து முஃபஸ்ஸிர்களுக்கும் முன்னோடியான இமாம் இப்னு ஜரீர் அத் தப்ரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்.

இவர்களை விட்டு விட்டால் தப்ஸீர் துறை என்ற ஒன்றே இஸ்லாத்தில் இல்லாமல் போய் விடும்....

அதே போல்....

வரலாற்றுத் துறை உலமாக்களில் மிக முக்கியமான அறிஞர்களான..

(1) இமாம் தப்ரீ

(2) இமாம் இப்னு அஸாகிர்

(3) இமாம் இப்னு ஹல்தூன்.

(4) காழி இயாழ்

(5) இப்னு ஹஜர்

(6) மிக்ரீஜீ

(7) ஷிப்தீ

(8) தாஜுஸ் ஸுப்கீ

(9) ஸஹாவீ 

(10) இப்னுல் ஹாஜிப்

ஆகியோர் அஷ்அரிய்யா அகீதாவில் தான் இருக்கிறார்கள்...

இலக்ண, இலக்கிய உலமாக்களில் மிகவும் பிரபலமான...

(1) ஹமவீ

(2) ஜுர்ஜானீ

(3) சுயூத்தி

(4) முர்தழா ஸபீதீ

முஜாஹிதீன்களில் மிகப்பிரபல்யமான மேலும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவிய மேலும் பலஸ்தீனை வெற்றி கொண்ட அறிஞர் பெருமக்கள் எல்லாம் அஷ்அரிய்யாவில் உள்ளனர்...

(1) நூறுத்தீன் ஸன்கீ.

(2) சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி.

(3) முஹம்மதுல் ஃபாதிஹ்.

இவர்களெல்லாம் சத்தியக் கொள்கையில் இருந்து தீனுக்காக உயிர் விட்டவர்கள்...

இன்னும் நிறைய போராளிகள் இருக்கின்றனர்...

இது அல்லாமல்...

ஃபிக்ஹுத் துறை ,ஷாஃபி,ஹனஃபீ,ஹன்பலீ,
மாலிகீ என்று எடுத்துப் பார்த்தால் லட்சக்கணக்கான உலமாக்கள் இருக்கின்றனர்...

இவர்கள்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அல் ஜமாஅத், கருந்திரள் கூட்டம், மா அன அலைஹி வ அஸ்ஹாபீ என்று கூறினார்களே அவர்களாவார்கள்...

«كُلُّها في النّارِ إلّا السَّوادُ الأعظمُ».

அனைவரும் நரகத்திற்கு போவார்கள் ஒரே ஒரு கூட்டத்தாரை தவிர அவர்கள் தான் அஸ் - ஸவாதுல் அஃலம் ( பெறும் திரள் அடர்கருப்பு கூட்டம்).

அபூதாவூத் 7/60.
ஷுஐப் அர்நாஊத் : ஹஸன்.

இந்த அனைத்து துறை உலமாக்களும் பிக்ஹு சட்டத்தில் நான்கு மத்ஹபுகளில் ஏதேனும் ஒன்றிலும் அகீதாவில் ஒரு அஷ்அரிய்யாகவோ அல்லது மாதுருதிய்யாகவோ தான் இருந்திருக்கிறார்கள்...

இவர்கள் யாரை வழிகேடர்கள் என்று சொல்கிறார்கள்???

 இந்த மாபெரும் அறிஞர்களையா???

இவர்களை விட்டு விட்டு நீ எந்த சலப்பு சாலிஹீன்களை பின்பற்றுகிறாய்?

அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்...

ஒரு கட்டுரையை நீ எழுதினால் கூட நான் சொன்ன இந்த அறிஞர்களின் புத்தகங்களில் இருந்தும், அவர்களின் கருத்துக்களிலிருந்தும், அவர்களின் ஆய்வுகளில் இருந்தும் இல்லாத எந்த கட்டுரையும் நீ எழுதவே முடியாது....

சவுதி கொள்கை கொண்ட ஸலபிகளின் வெப்பு பேஜுகளில் இந்த அறிஞர்களின் கிதாபுகளை தான் புழக்கத்தில் வைத்திருப்பார்கள்.
 எந்த ஒரு மேற்கோளையும் இந்த அறிஞர்கள் இல்லாமல் ஸலஃபிகளால் எழுதவே முடியாது...

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இத்தனை அறிஞர் பெருமக்களின் அஷ்அரிய்யா கொள்கையை இவர்கள் வழிகேடு என்று சொல்கிறார்கள்???

பிறகு எப்படி நாங்கள் ஸலஃப் ஸாலிஹீன்களை பின்பற்றுகிறோம் என்று வாய் கூசாமல் கூறுகிறார்கள்????

நாங்கள் சலஃபு சாலிஹீன்களை பின்பற்றுகிறோம் என்று பச்சை பொய்யை சொல்வது...

எனவே இவர்களுக்கு எதிராக அந்த இமாம்கள் இருக்கிறார்கள் என்று நாம் ஆதாரத்தை எடுத்து போட்டால்....

எங்களுக்கு குர்ஆன், சுன்னா தான் மார்க்கம் என்று எஸ்கேப் ஆக வேண்டியது !!!

குர்ஆன், சுன்னா தான் உனக்கும், எனக்கும் மார்க்க ஆதாரம்...

பைபிளும், பகவத்கீதையும் இல்லை...

இங்கு வாதமே சாலிஹீன்களை பின்பற்றுவது தான்....

நீ கொண்ட வழிகெட்ட கொள்கையை அந்த இமாம்களின் பேரில் இட்டுக்கட்டி பேசுகிறாய் ...

நாங்கள் அவர்களைத்தான் உண்மையில் பின்பற்றுகிறோம் என்றும் கூறிக் கொள்கிறாய்....

அந்த இமாம் உங்களின் கொள்கையில் இல்லை என்றவுடன் நாங்கள் குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றுகிறோம் என்று அடுத்த கட்டமாக குரங்கு போல குதிக்கிறாய்...

நாம் மேலே குறிப்பிட்ட அந்த பெரும் திரள் அறிஞர்கள் அஷ்அரிய்யாவில் தான் நிலை பெற்று இருக்கிறார்கள்....

இதில் ஒவ்வொரு துறையைச் சார்ந்த அறிஞர்களின் பெயர்ப்பட்டியலை கொடுத்தால் கட்டுரை தாங்காது...

எனவே நாம் சுருக்கமாக முடித்துக் கொள்கிறோம். ஒட்டுமொத்த கல்வித்துறையின் பெரும் அறிஞர்களின் கூட்டமே அஷ்அரிய்யா, மாதுருதிய்யா அகீதாவின் மீதுதான் தறிபட்டு இருக்கிறது...

இறைவனுக்கு உருவம் இல்லை, அவன் கற்பனைக்கு அப்பாற்பட்டவன், கை ,கால் ,முகம், கரண்டை போன்று வரக் கூடிய குர்ஆன் வசனங்கள் முதஷாபிஹ் வசனங்கள் என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏராளமான விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதையே நாங்கள் முன்மொழிகிறோம் என்று கூறும் இந்த உலமா பெருமக்கள் கூட்டமே அஹ்ளு சுன்னாஹ் வல் ஜமாஅத்....

இவர்கள்தான் சலப்பு ஸாலிஹீன்கள்,
நான்கு மத்ஹப் உடைய உலமாக்கள், தப்ஸீர் துறை அறிஞர்கள், ஹதீஸ் துறை அறிஞர்கள், இலக்கண துறை அறிஞர்கள், இலக்கியத் துறை அறிஞர்கள், வரலாற்று அறிஞர்கள்.

ஆனால் கொஞ்சம் கூட நாக்கு கூசாமல் நாங்கள் சலப்பு சாலிஹீன்களை பின்பற்றுகிறோம் என்று பொய் சொல்லி இத்தனை உலமாக்களையும் பார்த்து வழிகேடர்கள் என்று கூறுகிறார்கள் செலஃபீ வஹாபிகள் !!!

இத்தனை உலமாப் பெருமக்கள் ஒரு தராசில் நிற்க மற்றொரு தராசில் நிற்பது யார் என்று நினைக்கிறீர்கள்???

இப்னு தைமிய்யா , இப்னுல் கையூம், இப்னு ஹஸம், ஷவ்கானீ.......

அவர்களைப் பின்தொடர்ந்த நவீன ஹவாரிஜ்களாகிய இப்னு அப்துல் வஹ்ஹாப், அல்பானி, இப்னு பாஸ், உஸைமின், ஸாலிஹுல் ஃபவ்ஸான் .....

இதில் மிகப் பெரிய காமெடி என்னவென்றால் இவர்கள் தான் அந்த மாபெரும் கூட்டமான அல் ஜமாஅத் மற்றும் அஸ் ஸவாதுல் அஃலம் எனும் அடர் கருப்பு கூட்டமாம் !!!

புழுகுங்க டா....

ஆனா ஒரு அளவுக்கு புழுகுங்க...

கல்வித்துறையில் அனாதையாக நிற்கும் இப்னு தைமியாவும் அவரை பின்பற்றும் இந்த மாபெரும் கூட்டமான !!! மவ்லவிமார்களும் இப்பொழுது அரேபிய வளைகுடாவில் அரக்க பலத்தைக் கொண்டு சன்னி முஸ்லிம்களை கொலை செய்யும் அஸ் ஸலஃபியதுல் ஜிஹாதிய்யாவும் அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு எதிரான வழிகேடர்களே...

இவர்கள் தங்களின் இறைவனை அறிய வேண்டிய முறையில் அறியத் தவறியவர்கள்...

இவர்களிடம் நிலைபாடாக கொள்கை கிடையாது...

ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் புதுப்புது கருத்துக்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்...

கடைசியாக,
தங்களின் முன்னோர்களுக்கும், முன்னோடி உலமாக்களுக்கும் மாற்றமாக கூ பேசிவிடுவார்கள்...

நூல் பிடித்தாற்போல வரும் கொள்கையாக இவர்களுக்கு இருக்காது...

பெரும் ஜமாஅத்தை விட்டும் தனித்து பிரிந்து சென்றவர்கள்...

ஹன்பலி மத்ஹபில் இருந்த ஒரு குறிப்பிட்ட வழிகேடர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட அல் ஹனாபலதுல் ஹஷவிய்யா எனும் பிரிவினரிடமிருந்து கல்விகற்ற கூட்டமே இப்னு தைமியா உடைய கூட்டம்...

அந்தப் பிரிவினர் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மீது ஏராளமான பொய்களைக் கூறி உள்ளார்கள்...

இமாம் சம்சுதீன் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் விமர்சிக்கிறார்கள்...

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மீது இட்டுக்கட்டப்பட்ட புத்தகங்களை ஆதாரமாக வைத்து இவர்கள் பேசுகிறார்கள்....

இத்தனைக்கும் இமாம் தஹபி இபுனு தைமியாவின் மாணவராக இருந்தவர்...

மட்டுமல்ல 4 மதுஹபுகளின் உலமாக்களின் மீதும், ஹதீஸ் கலை வல்லுனர்கள் மீதும் புனையப்பட்ட ஏராளமான இட்டுக்கட்டுதல்கள் இருக்கின்றன..

நாங்கள் சலப்பு சாலிஹீன்களை பின்பற்றுகிறோம் என்ற பெயரில் இவர்கள் கொண்டுவரும் பெரும்பான்மை அறிஞர்களின் ஆதாரங்கள் அனைத்தும் இட்டுக் கட்டப்பட்டவைகளே!!!

அதை இன்ஷா அல்லாஹ் நாம் வரும் தொடர்களில் பார்க்கலாம்...

இமாம்களின் மீது பொய்யுரைத்த அந்தக் கூட்டத்தார்களை இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ கையில் எடுத்துக் கொண்டதன் விளைவு தனிப்படையாக இவர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

 இவர்களின் உதாரணம்...

وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۤ اِذْ قَالُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ عَلٰى بَشَرٍ مِّنْ شَىْءٍ قُلْ مَنْ اَنْزَلَ الْـكِتٰبَ الَّذِىْ جَآءَ بِهٖ مُوْسٰى نُوْرًا وَّ هُدًى لِّلنَّاسِ‌ تَجْعَلُوْنَهٗ قَرَاطِيْسَ تُبْدُوْنَهَا وَتُخْفُوْنَ كَثِيْرًا‌ وَعُلِّمْتُمْ مَّا لَمْ تَعْلَمُوْۤا اَنْتُمْ وَلَاۤ اٰبَآؤُكُمْ‌ قُلِ اللّٰهُ‌ۙ ثُمَّ ذَرْهُمْ فِىْ خَوْضِهِمْ يَلْعَبُوْنَ‏ 

இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை; ஏனெனில் அவர்கள், “அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை” என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்: “பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா கொண்டுவந்தாரே அந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்.” (நபியே! மேலும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் (அதை இறக்கிவைத்தான்)” பின்பு அவர்களைத் தம் வீணான (தர்க்கத்)தில் விளையாடிக்கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக.

(அல்குர்ஆன் : 6:91)

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

     - இப்னு கபீர்.

Comments